Pages

Sunday, 14 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 374

நீடு இரும் பெண்ணை
தொடுத்த
முடங்கல் இறைய
தூக்கணங்குருவிக் கூடு

374. குறிஞ்சி

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம் குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.

அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.

உறையூர்ப் பல்காயனார் பாடல்




நீடு இரும் பெண்ணை
தொடுத்த
முடங்கல் இறைய
தூக்கணங்குருவிக் கூடு

இதுவரை மறைத்து வைத்திருந்த செய்தி தந்தையும் தாயும் உணரும்படி வெளிப்படையாகச் சொல்லியாயிற்று. உன்னுடையவனாகிய மலைகெழு வெற்பன் நேரில் வந்து பெண் கேட்டான். நன்று என்று எல்லாரும் ஒன்றாகிவிட்டனர். தூக்கணாங் குருவி பனை மரத்தில் வளைந்த இருப்பிடத்தோடு கட்டிய கூட்டில் உள்ள புல்கீற்று இழைகள் பின்னிக் கிடப்பது போல ஒருவரோடொருவர் உறவால் கலந்துவிட்டனர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment