நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு
திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ்
வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு
எவன் உடைத்தோ தோழி! நீடு மயிர்க்
கடும்
பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத்
தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம்
சிறுகுடிக் கமழும்
ஓங்கு
மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
மதுரைக் கொல்லன் புல்லன்
ஓங்குமலை
நாடனொடு உள்ள தொடர்புக்கு என்ன தீங்கு வந்துவிடும்? நிலமே இடம் பெயர்ந்தால் என்ன? நீரெல்லாம்
திரிந்து மாறிப் போனால்தான் என்ன? கொடிய வாயை உடைய பெண்களெல்லாம் தூற்றிப் பேசினால்தான்
என்ன? என்ன தீங்கு வந்துவிடப் போகிறது?
நீண்ட மயிரை உடைய ஊகம் இன ஆண்குரங்கு கையால் உடைத்து விரல் கறை படியத் தோண்டிய பலாப்பழத்தின் பூப் போன்ற நரம்புநார் காந்தள் பூ கமழும் சேரியில் மணம் கமழும் சேரியை உடையவன் அந்த மலைநாடன்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு


No comments:
Post a Comment