Pages

Sunday, 14 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 372

372. குறிஞ்சி

பனைத் தலைக் கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலை வீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பனைத் தலைக்
கருக்கு உடை
நெடு மடல்

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

விற்றூற்று மூதெயினனார் பாடல்

கருக்கோடு கூடிய பனங்குருத்து மூழ்கும்படி வேகமாக வீசும் காற்றால் வெள்ளை மணல்மேட்டைக் கொண்ட கானல் பகுதி அது. அங்கே கடலோரத்தில் கொட்டும் ஒரு அருவி. அங்கே கூழைமண் (சேற்றுமண்) இருக்கும் ஒரு பதுக்கை (மறைவிடம்). (அவனோடு கூடியிருந்த அந்தச் சேற்றுமண் ஈரம்) காயத் தொடங்குவதற்கு முன்பே எதற்கெடுத்தாலும் ஆரவாரம் செய்யும் இந்த ஊர் (என் உறவைப்பற்றி) அலர் தூற்றுகின்றதே!

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment