Pages

Wednesday, 10 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 358

''ஆய்கோடு இட்டுச் 
சுவர்வாய் பற்றும்
358. முல்லை

வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; ''ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்'' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.

தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கொற்றன் பாடல்

அணிகலன் நெகிழும்படி விம்மி விம்மி, பார்க்கும் கண் பூத்துப்போகப் பித்தாக வேண்டாம். “சென்ற நாளை எண்ணும் கோடு போட்ட சுவரைப் பற்றிக்கொண்டு நிற்கும் நின் துன்பம் தீர வருவேன்” என்று அவர் சொன்ன நாள் அதோ வந்துவிட்டது, பார். தனித்திருப்போர் வருந்தி நடுங்கும் மாலைப்பொழுது ஆனிரை மேய்க்கும் கோவலரின் முல்லை-மாலை போலச் சிரிப்பதைப் பார். (வந்துவிடுவார் என்று சொல்லித் தேற்றுகிறாள்)   

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

2 comments:

  1. இந்த பாடல் குறுந்தொகையில் 358வது முல்லை நிலத்திற்கானது. தவறுதலாக மருதம் என்று பதிவிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பிழையைச் சுட்டிக் காட்டிய பெருந்தகைக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். திருத்தம் செய்து கொண்டேன். வணக்கம்.

      Delete