Pages

Monday, 8 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 351


351. நெய்தல்

வளையோய்! உவந்திசின் விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?


தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, ''நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'' என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது.

அம்மூவன் பாடல் 

வளையல் அணிந்தவளே, மகிழ்ச்சி கொள்க.
  • விரைந்தோடும் வளை வாழ் நண்டு ஈர மணலில் தன் வளைந்த கால் நகத்தால் வரைந்த பாதைக் கோடுகளை ஊர்ந்து வரும் கடல் அலை உடைக்கும் துறையை உடையவன் அவன்.
  • அவனுக்கு உன்னை உரிமையாக்கப் பேசி முடித்துள்ளனர்.
  • புன்னை மரம் ஓங்கிய இந்த ஊரில் புலவு நாற்றம் வீசும் சேரி மக்களிரின் மகளிர் கூட்டம் இனியும் அலர் தூற்றமுடியுமா?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி

No comments:

Post a Comment