348.
பாலை
தாமே
செல்ப ஆயின், கானத்துப்
புலம்
தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு
வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ்
அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண்
அக வன் முலை நனைத்தலும்
காணார்
கொல்லோ மாணிழை! நமரே?
மாவளத்தன் பாடல்
அவர்
காட்டு வழியில் செல்வார் ஆயின் இரை இருக்கும் இடத்தைத் தேடித் திரியும் யானையின் கொம்பில்
பட்டு முல்லை தரையில் கிடப்பது போலக் கண்ணீர்த் துளி முலைமேல் கிடப்பதைப் பார்த்தவர்
எண்ணாமல் மறந்துவிடுவாரா? (எண்ணுவார். திரும்புவார்)
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment