344. முல்லை
நோற்றோர் மன்ற தோழி! தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு,
குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
குறுங்குடி மருதன்
தோழி! பனிக்காலத்தில் தன் காளை மாட்டுடன் மேய்ச்சல் வெளிக்குச் சென்ற பசுவானது பால்
மிக்கு முலை சுரக்கவே தன் கன்றை எண்ணி இனத்தைப் பிரிந்து தனியே வீடு திரும்புவதைப்
போலப் பொருள்-பிணி நோய் வாய்ப் பட்டு பிரிந்து சென்ற காதலர் திரும்பிக்
காதலியிடம் வரக் காணப்பெற்றவர் நல்வரம் பெற நோன்பு இயற்றியவர் ஆவார்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment