Pages

Saturday, 6 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 343

343. பாலை

நினையாய் வாழி தோழி! நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர் வரை நாடனொடு பெயருமாறே.


தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

ஈழத்துப் பூதன் தேவன் பாடல்

தோழி! மதம் கொண்ட ஆண்யானையின் முகத்தில் வலிமை மிக்க புலி பாய்ந்து அதன் வெள்ளைத் தந்தம் சிவப்புநிறம் ஆகும்படிக் காயப்பட்டு மேலைக்காற்று வீசுவதால் உதிர்ந்து கிடக்கும் வாடிய வேங்கைப் பூக்களின் மேல் செத்துக்கிடக்கும் நாடன் அவன். அவனோடு செல்வதற்கு நினைத்துப்பார்.

அவன் மதயானை. புலியின் நிலை உனக்கு வரக்கூடாது. – உள்ளுறை.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு



No comments:

Post a Comment