342.
குறிஞ்சி
கலை
கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல்
மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை
மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற
நாட! தகுமோ பைஞ் சுனைக்
குவளைத்
தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர்
புன்கண் தீர்க்கும்
பயம்
தலைப்படாஅப் பண்பினை எனினே?
![]() |
கலை கை தொட்ட கமழ் சுளை |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.
காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்
ஆண்குரங்கு
பலாவின் மணம் கமழும் சுளையைக் கையால் தோண்டி உண்ணுவதைத் தடுக்க முடியாத கானவன் ஒவ்வொரு
மரத்துக்கும் வலை கட்டி அதனைப் பாதுகாக்கும் குன்றநாடன் அவன். அவனைப் போய்ப் “சுனைக்
குவளைத் தழையாடை உடுத்திக்கொண்டு விரும்பியவர்க்குப் பயன் தராத பண்பினை” என்று எவ்வாறு
கூறுவேன். தோழி! (தலைவி) அவ்வாறு கூறுவது தகுமா?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment