Pages

Friday, 5 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 339


339. குறிஞ்சி

நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி தோழி! மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கு அலங்கடையே.


வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது.

பேயார் பாடல்

நறுமணம் கமழும் அகில் புனக்காட்டில் எரியும் புகை மழை இல்லாத மேகம் போல் குறவர் பாக்கத்தில் இறங்கும் நாடன் அவன். மலர் போன்ற மார்பை அவன் தழுவுதல் இனிது. எப்போது? குவளையின் பெரிய இதழ் போன்ற கண் பசலை படராமல் இருக்கும் வரை இனிது. (பசலை என்பது ஒருவரைப் பார்க்கத் துடிக்கும் கண்ணின் பசபசப்பாகிய ஏக்கம்)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment