Pages

Thursday 4 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 335

335. குறிஞ்சி

நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.

பைங்கண் மந்தியும்
பார்ப்பும்
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

அவன் இரவில் வந்து அவளைத் துய்க்க வந்தான். அவளது தோழி இப்போது பாதுகாப்பு அதிகம் பகலில் இன்ன இடத்துக்கு வரலாம் என்று அவனுக்குச் சொல்கிறாள்.

கையில் வரிசையாக வளையல் அணிந்த மகளிர் கற்பாறையில் தினை காயவைத்துக் காத்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் சோரும் நேரம் பார்த்து மரக்கிளையிலிருக்கும் மந்தி தன் குட்டியுடன் இறங்கி வந்து தினையைக் கவரும் மலைப்பாறை அருகில் உள்ளதே (அங்கு வரலாம்) அதுதான் இந்தக் கொடிச்சி இருக்கும் ஊர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment