Pages

Thursday 4 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 334

334. நெய்தல்

சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று
எவனோ தோழி! நாம் இழப்பதுவே?

செவ்வாய்ச்
சிறுவெண் காக்கை

''வரைவிடை ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

இளம்பூதனார் பாடல்

சிவந்த வாயை உடைய சிறுவெண் காக்கை நீரலை தன்னைப் பனிக்காலத்தில் நனைப்பதால் அதனை வெறுக்கும் கானல் நிலத்தின் சேர்ப்பன் அவன். (இப்படிப்பட்ட பனிக்காலத்தில்) அவன் நம்மை விட்டு விலகி இருந்தால் நாம் இழப்பதற்கு நம் உயிரைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment