333.
குறிஞ்சி
குறும்
படைப் பகழிக் கொடு விற் கானவன்
புனம்
உண்டு கடிந்த பைங் கண் யானை
நறுந்
தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு
குறும்
பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணிக்
குறை வருத்தம் வீட,
துணியின்
எவனோ தோழி! நம் மறையே?
![]() |
கிளியும் யானையும் போல் தலைவனும் தலைவியும் மகிழலாம் |
''அறத்தோடு நிற்பல்'' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.
உழுந்தினைம் புலவன் பாடல்
குன்ற
நாடன் பணி செய்த களைப்பு தீர நம் மறை ஒழுக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?
கானவன்
வில்லும் அம்பும் கொண்டு தன் விளைந்த புனத்தைக் காவல் புரிந்தான். அதனால் யானr புனம் செல்லாமல் மலையை நாடியது. புனத்தில் காவல்
புரிந்த மகளிர் ஓட்டிய கிளி அந்த யானைமேல் அமர்ந்துகொண்டு வந்தது.
இப்படி
யானை வரும் குன்றநாடன் அவன்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment