Pages

Wednesday, 3 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 332

332. குறிஞ்சி

வந்த வாடைச் சில் பெயற் கடைநாள்,
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து
கூறின் எவனோ தோழி! நாறு உயிர்
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை
குன்றகச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே?

மடப் பிடி தழீஇ 
தடக்கை யானை

வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் பாடல்

வாடைக்காற்று சில தூறிய கடைசி நாளில் நான் வருந்துவது பற்றி அவனுக்கு நீ சொல்லக்கூடாதா, தோழி.
தன் உயிர் மணக்கும் பெண் யானையைத் துதிக்கையால் அணைத்துக்கொண்டு ஆண்யானை சிறுகுடி மன்றத்துக்கு வரும் மலைக்கு உரியவன் அவன் ஆயிற்றே.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment