Pages

Monday, 1 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 325

கருங்கால் வெண்குருகு
மேயும் பெருங்குளம்

325. நெய்தல்

''சேறும் சேறும்'' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, ''மருங்கு அற்று
மன்னிக் கழிக'' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.

பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.

நன்னாகையார் பாடல்

அவன்போகிறேன், போகிறேன்என்றான். ஆனால் போகவில்லை. ‘செல்வதாயின் என்னை விட்டுவிட்டு நிலையாகப் போய்விடுங்கள்என்று போகமாட்டான் என்னும் துணிவில் கூறிவிட்டேன். எனக்குத் துணையான அவன் இப்போது எங்கு உள்ளானோ. இப்போது என் இரு முலைகளுக்கு இடையே கண்ணீர்க்குளம் தோன்றி, கருங்கால் வெண்குருகு மேயும் குளம்போல் ஆயிற்று

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment