Pages

Monday, 1 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 324

முதலை மேயும்
கானல் துறை

324. நெய்தல

கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை,
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின்
நயன் உடைமையின் வருதி; இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது,
கவை மக நஞ்சு உண்டாஅங்கு,
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, ''இரா வாராவரைவல்'' என்றாற்கு, தோழி அது மறுத்து, வரைவு கடாயது.

கவைமகன் பாடல்

கவை மக = ஊமைப்பெண்

ஆளை விழுங்கும் முதலை நடமாடும் கழித்துறையை நீந்திக் கடந்து நீ இவள்மேல் உள்ள விருப்பத்தால் வருகிறாய். இவளோ தன் அறியாமையால் உன் வரவை விரும்புகிறாள். நானோ ஊமையள் ஒருத்தி நஞ்சு (விடம்) உண்டது போல நெஞ்சம் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment