Pages

Monday, 1 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 323

323. முல்லை

எல்லாம் எவனோ? பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,

வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது.

பதடி வைகலார்


(வலவ!) எல்லாம் ஏன்? முல்லை மணக்க நன்முகம் காட்டும் என்னவளின் தோளில் துஞ்சாமல் கழிந்த பதர் போன்று வீணான நாட்களே இங்கு கழிந்த நாட்கள். (தேரை விரைந்து செலுத்துக)
பாணர்தம் எழால் பறையில் படுமலைப் பண் எழுவது போல வானத்தில் இசை எழுப்பி மழை பொழிந்த காலத்தில் பூத்த முல்லை மணம் நாறும் நன்முகத்தள் அவள்.

நறுநுதல் = நன்முகத்தள் (நுதல் = நெற்றி, முகத்தைக் குறிக்கும் ஆகுபெயர்)

படம் - நெற்கதிர், இதன் ஊடே அரிசி இல்லாமல் இருக்கும் நெல்லைப் பதர் என்கிறோம். இந்தப் பதரைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல் 'பதடி'

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment