Falling in her pleasant look the lover says.
This is a poem compiled by Kotran of Ko:zi
(Uraiyur) village
2nd century B.C.
276. குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள் பாவை தையும்,
பஞ்சாய்ப் (படம்) பள்ளம் சூழ்ந்தும், மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே!
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது.
கோழிக் கொற்றன் பாடல்
இவளுக்கு மூங்கில் போன்ற தோள். இவள் வண்டல் மண்ணில்
பாவை செய்து கோரைப் புல்லில் கிடத்தி விளையாடுகிறாள். இவளது வண்ண முலைகள் பார்ப்பவர்
கண்ணை உருத்தும்படி எழுகின்றன. அதில் தொய்யில் எழுதி மேலும் உருத்தச் செய்துள்ளனர்.
பார்ப்பவர் என்ன ஆவர் என்பது எழுதியவர்களுக்குத் தெரியவில்லை. இதனை அரசவையில் முறையிட்டால்
இவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த ஊருக்கும் இது தெரியவில்லை.
இந்த ஊர் பாவம்.
No comments:
Post a Comment