Pages

Sunday, 31 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 322

322. குறிஞ்சி

அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம் தோழி! ஒல்வாங்கு நடந்தே.

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது.

ஐயூர் முடவன்


ஆமான்

கானவர் ஆமான் காட்டாடுகளைப் பிடிக்கத் துரத்தியபோது அச்சம் கொண்டு அவற்றின் குட்டிகளில் ஒன்று தன் இனத்தை விட்டுப் பிரிந்து அங்கிருந்த சிற்றூருக்குள் நுழைய, அவ்வூர் இளையர் அதனைப் பேணிப் பாதுகாக்க, அந்தக் குட்டி வீட்டில் வாழ வல்லமை உடையதாக மாறிவிட்டது போல, நானும் மாறி வாழ விரும்புகிறேன். அவரோடு இணைந்து வாழ்வதைக் காட்டிலும் இன்பம் வேறு உண்டோ? தோழி! முடிந்தவரை நடந்தே அவர் வாழும் அந்த ஊருக்குச் சென்றுவிடலாம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment