சேயுயர்
விசும்பின் நீர் உறு கமஞ்சூல் (படம்)
தண்குரல்
எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல்
தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார்
வாழி! தோழி! வரூஉம்
இன்
உறல் இள முலை ஞெமுங்க
இன்னா
வைப்பின் சுரன் இறந்தோரே.
பிரிவிடை
வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப்
பருவம் காட்டி, அழிந்து கூறியது.
பேரிசாத்தன்
தோழி கேள். இன்பம் தரும் என் இளமுலையைத் தழுவ விரும்பித் துன்பம் தரும் நிலத்தின் வழியே அவர் சென்றுள்ளார். நீரைச் சுமந்துகொண்டு உயர்ந்த வானத்தில் செல்லும் மழைமேகம் மின்னி இடித்து இருண்டு மழை பொழியும் மாலைக் காலத்திலும் (வருவதாக வாக்குரைத்த காலத்திலும்) அவர் வரவில்லையே.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment