Pages

Thursday, 28 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 313

சிறுவெண் காக்கை

313. நெய்தல்

பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.

இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, ''பண்பிலர்'' என்று இயற்பழித்த தோழிக்கு, ''அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!'' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட மொழிந்தது

பெரிய கடற்கரையில் வாழும் சிறிய வெள்ளைக் காக்கை நீந்தக்கூடிய உப்பங்கழியில் நீந்தி இரையைத் தேடி உண்ட பின்னர் கரையில் இருக்கும் புதரில் இருக்கை கொள்ளும் துறைவன் துறைவன் அவன். அவனை கட்டிப் பிடித்தேன். ஆனால் அவன் நட்பைக் கட்டிப்போட முடியவில்லை. என்றாலும் அதனை அவிழ்க்க முடியாது. அது முடிந்துபோன வரலாறு.
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment