Pages

Thursday, 28 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 312


312. குறிஞ்சி

இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.

இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது.

கபிலர் பாடல்

என காதலி இரண்டும் தெரிந்த ஒரு திருடி. பகை வெல்லும் வேலினை உடைய முள்ளூர் மன்னன் காடெல்லாம் மணக்கும்படி வந்து நள்ளிரவில் என்னோடு இருப்பாள். பின்னர் நான் சூட்டிவிட்ட மலர்கள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுத் தலையில் எண்ணெய் வைத்துச் சீவி முடித்துக்கொண்டு அதிகாலையில் தன்னைச் சார்ந்தவர்களோடு இருந்துகொள்வாள்.  
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி  

No comments:

Post a Comment