அலர்
யாங்கு ஒழிவ தோழி! பெருங்கடல்
புலவு
நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது
கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்
கண்டன்றோ இலனே; பானாள்
ஓங்கல்
வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாது
சேர் நிகர்மலர் (படம்) கொய்யும்
ஆயம்
எல்லாம் உடன் கண்டன்றே?
அலரஞ்சிய
தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது.
சேந்தன்கீரன் பாடல்
புலால்
நாற்றம் வீசும் பெருங்கடல் துறையில் பாகன் இழுத்துப் பிடித்தும் நிற்காமல் ஓடிய (அவர்)
தேரை நான் பார்க்கவில்லை. நண்பகலில் உயர்ந்த மணலில் தாழ்ந்திருக்கும் புன்னை மரத்தில்
மலர் கொய்யும் தோழியர் கூட்டத்தில் எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்பொது
ஊர் தூற்றும் அலர் எப்படி ஒழியும்?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment