Pages

Tuesday, 26 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 302


302. குறிஞ்சி

உரைத்திசின் தோழி! அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
''பிரியா நண்பினர் இருவரும்'' என்னும்
அலர் அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

மாங்குடி கிழார் பாடல்

அருஞ்சொல்

புரை = குற்றம், உயர்வு
பெரும்பிறிது = சாவு
அன்னோ = ஐயகோ

தோழி, சொல். (படம்) அவன் செய்வது உயர்வா, குற்றமா? என்னால் பிரிவுத் துன்பத்தைத் தாங்கவும் முடியவில்லை. அவனை விட்டுவிட்டுச் சாகவும் அஞ்சுகிறேன். ஐயகோ! மலைநாடனும் நானும் பிரியா நண்பர்கள். ஊர் தூற்றுமே என்று அவன் வரவில்லை போலும். நள்ளிரவிலும் அவன் என் நெஞ்சுக்கு மட்டுமே வருகிறானே!

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment