Pages

Tuesday, 26 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 301


301. குறிஞ்சி

முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராது ஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி! என் கண்ணே.

வரைவிடை வைப்ப, ''ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- 

குன்றியன் பாடல்

நள்ளிரவு. பனை மரத்தில் உள்ள சிறிய கோல்-குச்சிகளால் கட்டப்பட்ட தன் கூட்டில் இருந்துகொண்டு கருமையான கால்களை உடைய சூல் கொண்டிருக்கும் அன்றில் (அன்றில்) பறவை தன் துணை அன்றிலை அழைக்கும் குரல் கேட்கிறது. இந்த நேரத்தில் அவர் வரவில்லை ஆயினும் ஊர் மன்றத்தில் அவர் தேரில் வருவது போன்ற ஒலி என் காதில் ஒலிக்கிறது. அதனால் தூக்கம் வரவில்லை, தோழி. (வேறொன்றும் இல்லை).   

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

அன்றில் பறவை பற்றிய விரிவான செய்திகள்

No comments:

Post a Comment