Pages

Tuesday, 26 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 298


298. குறிஞ்சி

சேரி சேர மெல்ல வந்து வந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி!
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் (படம்)
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.

கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது.

பரணர் பாடல்

அவன் மெல்ல மெல்லச் சேரிப்பக்கம் வருகிறான். எப்போதாவது வாய் விட்டு இனிய சொற்களைச் சொல்கிறான். ஒவ்வொரு நாளும் திரும்பப் போய்விடுகிறான். படிப்படியாகச் சொல்லும் அவன் நோக்கத்தை நினைத்துப்பார். கையில் கோலை வைதுக்கொண்டு குறி சொல்லும் அகவல் மகளிர்க்கு அகுதை அரசனின் தந்தை பெண்யானைகளைப் பரிசாக வழங்கினான். அது போன்று அவன் நோக்கம் வேறு.
அகவல் மகளிர் நாட்டைக் கைப்பற்றிக்கொள்வது அகுதை தந்தையின் நோக்கம். அதுபோல இவனும் என்னைக் கைப்பற்றும் திட்டம் கொண்டுள்ளான்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment