கடல்
உடன் ஆடியும், கானல் அல்கியும்,
தொடலை
ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும்,
நொதுமலர்
போலக் கதுமென வந்து,
முயங்கினன்
செலினே, அலர்ந்தன்று மன்னே;
துத்திப்
பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்துஇழைத்
துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத்
தழையினும், உழையின் போகான்;
தான்
தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே,
பகற்குறிக்கண்
தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.
அஞ்சில் ஆந்தை
அவன்
என்னோடு சேர்ந்து கடலில் விளையாடினான். கடலோரக் கானல் வெளியில் என்னோடு தங்கியிருந்தான்.
நான் ஆய மகளிரோடு தழூஉ நடனம் ஆடும்போது உடன் ஆடினான். ஏதோ அயலவர் போலத் திடீர் என வந்து
என்னைத் தழுவிவிட்டுச் சென்றுவிட்டான். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. என்
அல்குலை மூடிக்கொண்டிருக்கும் தழையாடை போல என்னைச் சுற்றிக்கொண்டே திரிகிறான். அவன்
எனக்குத் தந்ததெல்லாம் என் தாய் என்னை எங்கும் விடாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கும்
நிலை ஒன்றுதான்.
இப்படித்
தலைவி சொல்லும் நிலை இருப்பதாகத் தோழி தலைவன் கேட்கும்படி சொல்கிறாள்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

அய்யா! தங்களின் தமிழ் பணி போற்றுதலுக்குரியது.
ReplyDelete