சுடு
புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி
கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின்
இசையா இன் பாணித்தே;
கிளி, ''அவள் விளி'' என, விழல் ஒல்லாவே;
அது
புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு
நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு
பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு
உரைத்தது.
கபிலர்
அந்தக் கொடிச்சி திணைப்புனத்தில் கையிலுள்ள குளிர் என்னும் கருவியில் ஓசை எழுப்பிக் கிளியை
ஓட்டிக்கொண்டிருந்தாள். கிளிகள் அந்த ஓசையைக் கேட்டு அவள் குரல் என்று நினைத்துக்கொண்டு
தினையில் வந்து விழுவதை நிறுத்தவில்லை. எனவே அவள் அழுதாள். அப்போது அவள் கண் ஆழமான
சுனையில் ஈரப்பனி விழுந்து பூத்திருக்கும் குவளை-மலர் போன்று காணப்பட்டது.

No comments:
Post a Comment