Pages

Sunday, 26 October 2014

புறநானூறு 60 Purananuru 60

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்


செந்நிற மீன்கள் இமைக்கும் வானத்தில் தோன்றும் 
முழுநிலாவைப் பார்த்து விறலியும் நானும் தொழுதோம். 
ஏன் தெரியுமா? 

எம் அரசன் வளவன் (பெருந்திருமாவளவன்) 
வெண்கொற்றக் குடை போல் உள்ளதே என்பதால் தொழுதோம்.

இரவில் கடலில் செல்லும் திமில் விளக்குகள் போல் 
வானத்தில் மீன்கள் தோன்றும்.

புலவர் பாணர்
அவர் மனைவி விறலி. 
அவள் காட்டுமயில் போன்றவள்.

கடல் உப்பு ஏற்றிய வண்டியை
ஆரைக்கால் சக்கரம் கொண்ட வண்டியை
காட்டுமலையில் இழுத்துச்செல்லும் 
வலிமை மிக்க காளைமாடு போன்றவன் வளவன்.
பாடல்

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து,                5
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்,    10
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?

திணை பாடாண்
துறை குடை மங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை 
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

பகலில் கடலில் செல்லும் திமில்
இது இரவில் விளக்குடன் செல்லும்



No comments:

Post a Comment