Pages

Wednesday, 22 October 2014

புறநானூறு 54 Purananuru 54

சேரமான் குட்டுவன் கோதை


சேரமான் குட்டுவன் கோதை அரசனைப் 
பாண்டிய நாட்டுப் புலவர் ‘எம் கோன்’ என்று குறிப்பிடுகிறார்.

செல்வம் உடையவர் செம்மாப்புடன் நடப்பது போல, 
எம் அரசனின் நாளவையில் தடையில்லாமல் உள்ளே சொல்லுதல் 
எம்மைப் போன்ற வாழ்க்கையை உடைய புலவர்களுக்கு எளிது.

அவன் இரவலர்களுக்கு எளிமையாகத் தோன்றுபவன். 
வானம் போன்று வரையறை இல்லாமல் வழங்குபவன். கொடுப்பதற்காகவே அவன் கை கவிழ்ந்திருக்கும்.

குதிரை வீரன். 

வஞ்சினம் கூறி எதிர்க்கும் மன்னர், 
ஆட்டிடையர் புலி தூங்கும் குகைப் பக்கம் செல்லாதவாறு போல 
இவன் நாட்டுக்குள் நுழைய அஞ்சுவர்.

பாடல்.

எம் கோன் இருந்த கம்பலை மூதூர்,
உடையோர் போல இடையின்று குறுகி,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,    5
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவி கை வண்மைக்
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை,
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி,      10
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.

திணை வாகை
துறை அரச வாகை.
சேரமான் குட்டுவன் கோதையைக் 
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

புலி துஞ்சு வியன் புலம்



No comments:

Post a Comment