சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
மகளிர் தெற்றி விளையாடும்
மணிமாடங்களைக்
கொண்ட ஊர் விளங்கில்.
அதன் சிறப்பினை
சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
தன் யானைப்
படையுடன் சென்று போரிட்டு அழித்தான்.
இதனைப் பாடுவதற்குக் கபிலர் இல்லையே என்று கவலைப்பட்டான்.
புலவர் பொருந்தில் இளங்கீரனார் இதோ நான் இருக்கிறேன்.
உன் சிறப்புக்கு ஏற்ப நான் பாடுவேன்.
ஆனால் ஒன்று.
உன் புகழை விரிவாக்க விரும்பினால்
அது விரிந்துகொண்டே செல்கிறது.
சுருக்கத்
தொடங்கினால் மீதம் பட்டு நின்றுவிடுகிறது.
எம் போன்ற அறியாமை மிக்க புலவர்களின்
கைவரிசைக்கு
அடங்கவில்லை.
அதற்காகப் புகழ் மிக்கவர் பிறந்த உலகத்தில்
நான் பாடாமல் வாழவும் முடியாது.
எனவே பாடுகிறேன் என்கிறார் புலவர்.
புலவர் கபிலரை இந்தப் புலவர் இவ்வாறு பாராட்டுகிறார்.
கபிலன் செய்யுளைச் செறிவாகப் பாட வல்ல
செம்மையான நாக்கை உடையவன்.
வெறுக்கும்படி பிறர்
பாடும் பாடல்களையும்
கேட்டு அவற்றில் பயன் காணும் பண்பு மிக்கவன்.
அதனால் புகழ் மிக்கவன்.
பாடல்
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய! 5
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது 10
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே. 15
திணை வாகை;
துறை அரச வாகை.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப்
பொருந்தில் இளங்கீரனார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு

மனம் கொள்ளத்தக்க விளக்கம் அருமை - கோ சங்கரன்
ReplyDeleteதேன் தரும் சொற்கள்.
Deleteநன்றி
கடலன் யானைப் படையை முறியடித்தான் என்று அகம் 81 ல் ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார்.
ReplyDeleteதொகுப்புக்குப் பாடாட்டு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதொகுப்புக்குப் பாராட்டு
Delete