Showing posts with label 2 அடியேன் பொதுவன் கண்டது. Show all posts
Showing posts with label 2 அடியேன் பொதுவன் கண்டது. Show all posts

Tuesday, 19 May 2020

மனமும் அறிவும் mind and knowledge

பூவைப் பார்க்கிறான்.
உருவம் பதிவாகிறது.
மணம் பதிவாகிறது.
மீண்டும் பார்க்கும்போது பழையது நினைவுக்கு வருகிறது.

தாயைப் பார்க்கும்போது அவளைப் பற்றியவை நினைவுக்கு வருகின்றன.
தன் உணர்வின் தாக்கத்தால் பதிவானவை மட்டும் நினைவுக்கு வருகின்றன.

உணர்வு என்பது மரபணுவின் தாக்கம்.
அறிவு என்பது சூழலின் தாக்கம்.
மனம் என்பது அறிவின் பதிவு. இது உணர்வைப் பதிந்துகொள்ளாது.

தன்னறிவு 
தாக்கறிவு

சிலப்பதிகாரம் படிக்கிறான்.
ஒருவன் வரிப்பாடல்களில் காணும் தமிழைச் சுவைக்கிறான்.
ஒருவன் தமிழ்ப் பண்புகளைச் சுவைக்கிறான்.
ஒருவன் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாறு என்கிறான்.
ஒருவன், மதுரையை எரித்தாள் என்பது போன்ற செய்திகளால் கதை என்கிறான்.
இவை தன்னறிவின் தாக்கம்.
தன்னறிவு என்பது உண்மை அறிவு.

நூல்களைப் படிக்கிறான். இது தாக்கறிவு. இதில் விஞ்சி நிற்பது அவன் தன்னறிவே.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும் (திருக்குறள்)


Saturday, 28 December 2019

அறம் (வழி) common route

அறம் என்றால் என்ன?
எது அறம்

எல்லாரும் இணக்கமாக நடந்து செல்லும் வாழ்க்கை வழி அறம்
எதிர்த்துச் செல்வது மறம்

பொது வழியில் எல்லாரும் செல்லலாம்
தனி வழியில் எல்லாரும் செல்ல முடியாது
பொது வழியே அறம்
தனிவழி திருட்டுவழி

உலகம் பொது
உலகம் ஏற்றுக்கொள்வது அறம்
ஏற்றுக் கொள்ளாதது மறம். திருட்டு, போர் முதலானவை மறம். 

அறத்தை ஆறு என்று தமிழர் குறிப்பிடுகின்றனர்.
பண்டைக் காலத்தில் ஆறுதான் வழியாகப் பயன்பட்டது.

பின்னர் மரங்களை வெட்டி, தடைகளைப் போக்கி வழி அமைத்துக் கொண்டோம்.

வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இருக்க நாம் அமைத்துக்கொண்ட வழிதான் \ ஆறுதான் அறம்.

தெருவைப் போல் அமைத்துக்கொண்ட பொதுவழி அறம்.



Saturday, 17 August 2019

பதி பசு பாசம் He - I - Bind

பதி பசு பாசம்
He - I - Bind


ஆடு, மாடு, கோழி, நாய் முதலான வளர்ப்பு விலங்கினங்களை நாம் அறிவோம். 

இவை நம் கட்டுப்பட்டுக்குள் இல்லாமல் திரியும்போது, உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, உயிரைப் பாதுகாத்ததுக் கொள்வது என்னும் நிலைகளில் வாழ்கின்றன. 

அவற்றிற்கு உணவு தந்து அவற்றை ஏமாற்றி நாம் பழக்கி வைத்திருக்கும்போது அவை நம்மிடம் பாசம் காட்டுகின்றன. 

வளர்ப்பவன் - பதி 
வளர்ப்பவை - பசு
இருவருக்கும் இடையே உள்ள உறவு - பாசம்


Sunday, 17 February 2019

அறம் (புண்ணியம்) Doing Good

அறத்தைத் தருமம் என்பர்
தருமம் புண்ணியச் செயல்
ஒருவன் நடந்துகொள்ளவேண்டிய முறைமையைத் திருக்குறள் அறம் என்று குறிப்பிடுகிறது
பிறருக்கு உதவுவது தலைமையான அறம்

ஒருவன் செய்யும் உதவி அதனைப் பெறுபவனுக்கு பயன் தந்து இன்பம் பயக்குமானால் அது அறம் - அறச் செயல் - நற்செயல்
(புண்ணியம்)

ஒருவன் தான் நன்மை செய்வதாக எண்ணிக்கொண்டு செய்யும் செயல் பெறுபவனுக்குத் துன்பம் தருமானால் அது அறம் என்னும் நற்செயல் ஆகாது
புண்ணியம் ஆகாது
பாவம் ஆகும்

அறவழி

அறம்
புண்ணியம்

அறம்

Saturday, 16 February 2019

இறை God

கடவுள் என்று சொல்லப்படும் இறைவன் நம்மிடம் எப்படி இருக்கிறான்
நமக்கு வெளியில் நிலம், நீர், தீ, வளி, விண் என்று ஐந்து பூதங்களாக இருக்கிறான்
நமக்குள்ளே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களாகக் காலத்தில் மலர்கிறான்
நினைவாகக் காலம் கடந்து ஓடுகிறான். 

கடவுள் என்னும் இறைநிலை
பொறியாய்ப் புலனாய் நமக்குள்ளளே
            பூக்கும் அறிவும் நினைவுகளும்
இறைவன் நமக்கென் றெண்ணிடுவோம்
            எல்லா ருக்கும் நலமாகும்.

மண்ணீர் (மண்+நீர்) வளிதீ ஆகாயம்
     மாந்தர்க்(கு) அடங்கா இறைநிலைகள்
எண்ணம் அறிவைக் கடக்காது
     இறைவன் அறிவைக் கடந்தவனாம்.

நினைவின் ஓட்டம் அதுகாலம்
     நிகழ்வ தெல்லாம் செயலாற்றல்
மனத்தின் உடலின் பெயர்ச்சியிவை
     வரவும் செயலும் ஊழ்வலியாம்.



Wednesday, 23 January 2019

இறைவன் தொகுப்பு

இறைநிலை abode of God 4


அடியேன் கண்ட அறிவு வழி


இந்த வழி வாழ்க்கைக்கு உதவுமா என்பது அவரவர் உள்ளப் பாங்கைப் பொறுத்தது. 

என்றாலும் ஒன்றை நினைவுபடுத்திக்கொள்வோம். 

நான் என் அம்மாவைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது போல் என் அம்மாவைப் பார்க்கும் மற்றொருவர் நினைக்க முடியுமா? 

இருவர் நினைவும் வேறுபட்டாலும், நினைக்கப்படுபவர் ஒருவர்தானே? நினைவு என்னும் செயலும் ஒன்றுதானே?

இந்த நினைவுதான் இறைநிலை. 

இன்பத்தில் இறைநிலை இருந்தாலும் இன்பத்தில் திளைக்கும்போது யாரும் கடவுளை நினைப்பதில்லை. 

துன்பம் வரும்போது கடவுள் துணையை நாடுகிறான். அப்போது அவன் நாடும் துணை (கடவுள் - இறைநிலை) அவனுக்குத்தான் தெரியும். அவன் தேடும் இறைவன் யார் என்று, எது என்று பிறருக்குத் தெரியாது. 



ஆதி பகவன் யார் 2

ஆதிபகவன் முதற்றே உலகு - என்பது வள்ளுவர் வாக்கு
ஆதிபகவன் என்னும் தொடருக்கு திருக்குறளை அகச்சான்றுகளாகக் காட்டி முன்பு ஒரு விளக்கம் கண்டோம். 

உரையாசிரியர்கள் அவர்களது முன்னோரின் சமய வழியில் உரை கண்டுள்ளனர்.

நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்துவது நல்லது.

எனக்கு ஆதி யார்? என் பெற்றோர். அவருக்கு ஆதி, அவருக்கு ஆதி, அவருக்கு ஆதி,  என்று போய்க்கொண்டிருந்தால் நம் அறிவுக்குப் புலப்படும் இடம் ஆதி.

என் பகவு (பகவன்) யார்? என் மக்கள். அவர் மக்கள், அவர் மக்கள் என்று போய்க்கொண்டிருந்தால் நமக்குத் தெரியவருவது பகவு.

இப்படிப்பட்ட ஆதிபகவனை முதலாக வைத்துக்கொண்டு-தானே உலகம் இயங்குகிறது?
  

Tuesday, 22 January 2019

தமிழ் நான்மறை Four-fold Protector

சமற்கிருத மொழியில் உள்ள ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களைத் தமிழர் நான்மறை என்று குறிப்பிடுகின்றனர்.

திருக்குறளில் முதலில் உள்ள நான்கு பத்துகள் இறையைக் காட்டுகின்றன. இவையே தமிழர்க்கு நான்மறை எனக் கொள்ளத் தகும்.

இறை என்பது நமக்குள்ளும் நமக்கு வெளியேயும் இறைந்து கிடக்கும் பொருளும் ஆற்றலும்
*** *** ***
பொருள் இடமாகவும், ஆற்றல் காலமாகவும் விரிகின்றன. 

  1. கடவுள் வாழ்த்து நம் எண்ணத்துக்கும் புலப்படாத ஆதி, பகவு, அறிவு, வேட்கை, பிறவி முதலானவற்றை இறை என்கிறது.   
  2. வான் என்னும் மழை நம் கண்ணுக்குத் தெரிந்து, நம் கட்டுப்பாட்டில் இல்லாத இறை. 
  3. நீத்தார் என்போர் நம்மிடையே வாழும், வாழ்ந்து மறைந்த துறவிகள். இவர்கள் நமக்கு வழி காட்டும் இறை. 
  4. அறம் என்பது ஆற்று வெள்ளம் போல நமக்கு உதவி நம்மை உருட்டிக்கொண்டு ஓடுவது 
இவை
தமிழர் வாழ்வியல் கண்ட நான்மறை 


Thursday, 10 January 2019

ஓம் om

ஓம் ஒலி தமிழில் ஓர் இடைச்சொல்
செய் + ஓம் = செய் + வ் + ஓம் = செய்வோம்
வ் - அரையுயிர் - உடம்படுமெய்
செய் என்பது தனித்துப் பொருள் தரும் ஓர் வினைச்சொல்
ஓம் என்பது தனித்துப் பொருள் தராததால் இடைச்சொல்
இந்த ஓம் இடைச்சொல்லை மந்திரம் என்கிறோம்

நிறைமொழி மாந்தர்
ஆணையில் கிளந்த 
மறைமொழி தானே
மந்திரம் என்ப 
(தொல்காப்பியம்) 

நான் செய்வேன் - ஏ
நீ செய்வாய் - ஆ
அவன் செய்வான் - ஆ
மூவரும் செய்வோம் - ஓ

இங்கே நிற்கிறோம் 
உங்கே நின்றோம் 
அங்கே அன்று பார்த்தோம்
(மூன்று இடங்கள்) 

நமச்சிவாய ஓம் 
என்பதைத் திருவாசகம் 
நமச்சிவாய வாழ்க 
என்று பாடுகிறது

எனவே
ஓம் = வாழ்க 

ஓம் மந்திரம்

Wednesday, 9 January 2019

இறைநிலை abode of God 3

திருவள்ளுவர்

ஆதி - ஒருமை
பகவன் - இருமை
ஆதிபகவன் = அறிவன் - சீர்மை

பின்னோர் வழி 


இறைநிலை abode of God 2


வாழுங்கலை ரவிசங்கர் முன்னோர் கண்ட மூன்று நிலைகளை இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்.

  1. தண்ணீர் - ஒருமை - அத்துவைதம் 
  2. தண்ணீரில் பனிக்கட்டி மிதக்கிறது. இரண்டும் ஒன்றுதான். *** தண்ணீர் கொதிக்கும்போது ஆவி தெரிகிறது. இரண்டும் ஒவன்றுதான். - இருமை நிலை - துவைத நிலை. 
  3. பாலில் தண்ணீர் - சீர்மை நிலை - விசிட்டாத்துவைதம். 

வாழும் கலை என்னும் அமைப்பினைத் தோற்றுவித்து மக்களை வழிநடத்தும் முனிவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்



இறைநிலை abode of God 1

  • நம் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றை இறைவன் என்று கூறுகிறோம். 
  • இது நம் பழக்கம். 
  • இறைவனை மூன்று நிலைகளில் காணும் பழக்கம் நம்மிடையே நிலவிவருகிறது. 
  1. சங்கரர் கண்டது அத்துவைதம் - இரண்டற்றது - ஒருமை 
  2. மத்துவர் கண்டது துவைதம் - இருமை
  3. இராமானுசர் கண்டது விசிட்டடாத்துவைதம் - சீர்மை 

சங்கரர் 
மத்துவர்
இராமானுசர்

Saturday, 5 January 2019

தமிழமைதி Tamil-Mother


ஆங்கிலத் தாயின் இந்தக் குடும்பக் கதையில் உறவுப்பாலம் காட்டப்பட்டுள்ளது


மொழியை இவ்வாறு உறவுப்பாலம் ஆக்குவது
பொருந்தி வரவில்லை
*
எனவே
தமிழ்த்தாயின் இயக்கத்தை
தமிழ் நடப்பை
உணர்ந்துகொள்வது நலம் பயக்கும்
*
தமிழ்மொழி - தாய்
பெயர்ச்சொல் - அவள் உறுப்பு
வினைச்சொல் - அவள் செயல்பாடு
இடைச்சொல் - உறுப்புக்கும் செயல்பாட்டுக்கும் உதவும் கருவி
உரிச்சொல் - உறுப்புக்கும் செயல்பாட்டுக்கும் மெருகூட்டும் கருவி
*
உவமை - அறியாப் பொருளை உணர்த்துவது
அணி - மொழியின் அணிகலன்
*
சொல் - மொழியின் கூறு
எழுத்து - சொல்லின் கூறு
*
பேச்சு மொழி - உயிர்
எழுத்து மொழி - உடல்
*
கோயில் மந்திரம் சமற்கிருதத்துக்கு உயிர் தருகிறது
தமிழின் எதிர்காலம் நம் கையிலா? வாயிலா?

Wednesday, 2 January 2019

ஓட்டம் / நடை - run / walk

ஒவ்வொரு தப்படிக்கும் 
முழங்காலை நிமிர்த்தி நடப்பது நடை 
முழங்காலை நிமிர்த்தாமல் ஓடுவது ஓட்டம் 
இதனை எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.

நடைப்பயிற்சி செய்வோர்
இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்

சிறிது நேரம் நடக்க வேண்டும்
சிறிது நேரம் ஓட வேண்டும்

Run 

Walk 


Friday, 28 December 2018

தமிழ் - சமற்கிருதம் Tamil - Sanskrit

இளஞ்சென்னியன் உரை
  • தமிழில் வல்லின ஒலிகள் (Plosive) 6. இவற்றில் தமிழுக்கே உரிய ஒலி [ற]. ஏனைய ஒலிகள் 5-க்கும் வடமொழியில் ஒவ்வொன்றுக்கும் 3 வகையான அழுத்தம் தரும் ஒலிகளைக் கூட்டியுள்ளனர்
  • ன்றை எண்ணுவோம். எளிய ஒலி வளர்ச்சிப் பாதையில் விரிவது இயல்பு. விரிந்த மொழியொலி சுருங்கிற்று எனல் அறிவீனம்
  • எளிய தமிழொலி கடின சமக்கிருத ஒலியாக வளர்ந்தது. தமிழிலிருந்து சமற்கிருதம் வளர்ந்தது.
  • இதனைச் சுட்டும் இளஞ்சென்னியன் உரையைக் கேட்டு அவர் கருத்துக்குத் துணைநிற்போம்

Wednesday, 19 December 2018

நான் யார் Who am I

நான் யார் என எண்ணிப் பார்க்கிறேன்
இன்று வளர்ந்தகொண்டிருக்கும் மக்கள் தொகை இது - இதனைச் சொடுக்கிக் காணலாம்.

  • இந்த 78 லட்சம் கோடி மக்களில் ஒருவன்
  • உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் பேசும் 8 கோடி மக்களில் ஒருவன்
  • தமிழ்நாடு மாநிலத்தில் வாழும் 8 கோடி மக்களில் ஒருவன் 
  • இந்திய தேயத்தில் வாழும் 136 கோடி மக்களில் ஒருவன் 
இப்படிப்பட்ட எளியேன் எந்த நாளில் எங்குச் சென்று எந்த வழியில் மீண்டு எந்த இடத்தில் இருந்தேன் என்று வரைபடத்தில் கோடிட்டுக் கூகில்
- மேப் செயற்கைக்கோள் நிகழ்வுகளின் பட்டியல் நாள் -
காட்டுகிறது.

நான் சென்றதை எனது பதிவில் நான் பார்க்கலாம்
இதனை வேறொருவர் பதிவிறக்கிப் பார்க்க முடியாது

யார் வேண்டுமானாலும் அவரவர் இருப்பிடத்தைச் செல்போனில் பதிவு செய்துகொண்டால், செல்போன் எடுத்துக்கொண்டு அவர் செல்லும் இடங்களை - அவரவர் நாள்-நிகழ்வு-பட்டியலை - கடந்த கால நாள் ஒன்றின் நிகழ்வுப் பட்டியலை - பார்க்க முடியும்

செல்போனில் பதிவாக்கிக் கொண்டால், செல்போன் செல்லும் இடங்களை - செல்போனுடன் அவர் இடங்களை - அல்லது களவு போன அவரது செல்போன் இருக்கும் இடத்தை - அது காட்டும்

செல்போனில் இதனைப் பதிவாக்கும் செயற்கைக்கோள் குறியீடு திறந்திருக்க வேண்டும்

மனிதன் கண்ட கருவி
அறிவியல் வளர்ச்சி



Saturday, 8 December 2018

கடவுள் ஆகுக Be God

கடவுள் ஆக மாறவேண்டும்
எப்படி
பிறருக்கு உதவி செய்து

கடவுளை 'அடைவது' என்கிற சமயக் கோட்பாட்டைவிட, கடவுளாக 'ஆவது' என்கிற அத்வைதத்தை உலகம் வரவேற்கும்.
அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் - தமிழர் பண்டாடு - மாதஇதழ் - ஏப்ரல் 2010
நா. மகாலிங்கம் 

துவைதம், அத்துவைதம், விசிடாத்துவைதம் God in 3 stages

இந்து மதம் 

துவைதம் - இருமை நிலை - உன் கடவுள் ஒன்று, என் கடவுள் ஒன்று
அத்துவைதம் - ஒருமை நிலை - நமக்குள் ஒரே கடவுள்
விசிட்டாத்துவைதம் - நமக்குள்ளும், நமக்கு அப்பாலும் இருக்கும் கடவுள்

வேதாத்திரி மகரிசி விளக்கம்
துவைதம் - நான், சோறு
அத்துவைதம் - என் வயிற்றுக்குள் சோறு
விசிட்டாத்துவைதம் - சோறு எனக்குச் சத்தாக மாறிய  நிலை

துவைதம்

அத்துவைதம்

விசிட்டாத்துவைதம்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி