Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

Monday, 18 May 2020

நீர் ஏற்றம் shifying water

N. Ganesan மின்னஞ்சல் செய்தி

ஏற்றம்
தாழ்மரம், கொடிமரம் 

கவட்டைக் காலில் வைக்கப்பட்டுள்ள கிடைமரத்தை, கொடிமரம் என்பர். (ஏற்றி இறக்கும் கொடி போல் பயன்படும் மரம்)  (ஒப்புநோக்குக - கொடிஞ்சி நெடுந்தேர்)

தாழ்மரம் (தாழ்ந்து தண்ணீர் மொள்ளும் மரம்)

தண்ணீரைத் தரையில் ஊற்றினால் மண்ணைப் பறித்து வாய்க்கால் கெடும் என்று பானையில் ஊற்றி வழியச் செய்கிறாள்

http://www.fao.org/3/ah810e/AH810E47.gif

கபிலை ஏற்றம் (கபிலை = பசு + எருது)
http://www.fao.org/3/ah810e/AH810E05.htm


Saturday, 4 April 2020

ஏற்றம் well water for cultivation

கவலை ஏத்து
கபிலை ஏற்று

கபிலை = பசு, எருது

கிணற்று நீரை வயலுக்குப் பாய்ச்சுதல்
1950

அப்போது என் அகவை 15
இப்படித்தான் நீர் இறைத்து வெள்ளாமை (வேளாண்மை) செய்தேன்


கிணற்றில் தண்ணீர் மொண்டுகொண்டு வரும் சால்
அதில் கட்டப்பட்டிருப்பது தும்பி
தும்பி தோலால் ஆனது
தும்பி இரண்டு பக்கமும் ஓட்டை உள்ள ஒரு பை

கிணற்றிலிருந்து தண்ணீரைத் தூக்கிக்கொண்டு வரும்போது மடங்கிச் சாலோடு படிந்திருக்கும். அதனால் சாலில் உள்ள தண்ணீர் கொட்டாது.

மேலே வந்தவுடன் அது நீண்டுகொள்ளும்.
அதனால் தண்ணீர் வாய்க்காலில் ஊற்றும்

இப்படித் தானே மடங்கவும் நீளவும் உதவுவது வடம் வால்கயிறு ஆகிய 2 கயிறுகள்.

வடம் மேல் உருளையில் உருளும் பருமனான கயிறு. சாலில் கட்டப்பட்டிருக்கும். வால்கயிறு கீழ் உருளையில் உருளும் சற்றே  மெலிந்த கயிறு. தும்பியில் கட்டப்பட்டிருக்கும்.

தண்ணீர் மொள்ளச் செல்லும்போது ஏற்றம் இறைப்பவர் வால்கயிற்றைக் கொஞ்சம் சுடுட்டிப் பிடித்துகொள்வார். அதனால் நீர் மொண்டுவரும் சால் குப்புறக் கவிழ்ந்துகொண்டு செல்லும். கிணற்றில் நீரை மொண்டதும் வால்கயிற்றை விட்டுவிடுவார். தும்பி மடிந்துகொள்ளும். மேலே வரும்போது தண்ணீர் கொட்டாது.

இப்படி நீர் இறைக்கும்போது அலுப்பு தோன்றாமல் இருக்கப் பாட்டு பாடுவது வழக்கம். அது எத்தனை சால் தண்ணீர் இறைத்தோம் என்பதைக் கணக்கிடும் பாட்டாக இருக்கும்.

ஏற்றப் பாட்டு 

Monday, 27 May 2019

நாட்டுப்புறம் Old Madras, Trichinopoly (Trichy) in 1945

அன்று
நாட்டுப்புற வாழ்க்கை

அடியேன் இளமைக் காலம்
1952-55
இப்படித்தான் இருந்தது

Monday, 20 May 2019

தண்ணீர்க் குடம் | water pot

தண்ணீர் நுமக்கும் தளிரியல்

தமிழகத்திலும் வருமா வந்துவிட்டதா



Thursday, 2 May 2019

கபிலை ஏற்றம் oxen-etram

அடியேன்
பொதுவன்

மாடு கட்டிக்
கிணற்றிலிருந்து
நீர் இறைத்து
வயல்களுக்குப் பாய்ச்சிய 

கபிலை ஏற்றம்
இப்படித்தான் இருந்தது

standing instrument used to sift water from the well to flow into the field of cultivated plants 
with the help of oxen 

கபிலை ஏற்றம்

கபிலை ஏற்றம்


Monday, 16 July 2018

Sunday, 15 July 2018

ஈச்சமரக் கள் Extraction Of Date Palm Juice - Kheer/Payesh Cooking Using Fresh Palm Ju...

பேரீச்ச மரத்தில்
கள்
இறக்குதல்

கள் இறக்குதல் TODDY palmyra SAP | JUICE of Asian palmyra palm wine | HEALTHY THAATI KA...

பனை மரத்தில்
பதநீர்
இறக்குதல்

கள்
இறக்குதல்

தட்டை அறுத்தல் Reaper

தட்டை
அறுத்தல்

இப்படி
முன்னேறுவோம்

நெல் அறுவடை Amazing Rice Harvester in Japan

நெல்
அறுவடை
பொறி

வைக்கோல் வேறு
நெல் வேறு
ஆக்குகிறது

நெல் பயிர் நடுதல் PADDY PANTHER 26. Product Video.

நெல்
பயிர் நடுதல்
பொறி
இப்படி முன்னேறுவோம்

நெல்வயல் - களை பறித்தல் -பொறி paddy field weeder weeding machine sherlley@acmeagro.org

உழவுத்தொழில்


களை பறித்தல்


நெல் வயலில் களை எடுக்கும் பொறி 
இப்படி முன்னேறுவோம்

மரத்தட்டு - உண்கலம் Turning an oak salad bowl

தச்சுத் தொழில் வளர்ச்சி Amazing Carpenters Techniques Extreme Fastest Woodworking Creative Style...

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி