Showing posts with label விண். Show all posts
Showing posts with label விண். Show all posts

Wednesday, 3 July 2019

சூரிய கிரகணம் Solar Eclipse

புயல்
சூரிய கிரகணத்தின் தாக்கமா



SPACE
You Must Watch These Insanely Cool Videos of Yesterday's Solar Eclipse From Space
MICHELLE STARR 3 JUL 2019
At the same time as a solar eclipse was passing over Argentina and Chile on July 2, a massive hurricane was brewing in the Eastern Pacific ocean - and satellite cameras tracking the path of the eclipse have caught both in a stunning video.


Wednesday, 26 June 2019

நிலாவில் நீர் India’s Chandrayaan-1 orbiter

நிலாவில் நீர் உள்ளது
இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் சந்திராயன்-1 

செவ்வாய்க் கோளில் ஆற்றுப் படுகை wet ancient Mars



நாசா வானியல் மையம் வெளியிட்டுள்ள படங்கள்

ஆற்றுப் படுகை
செவ்வாய்க் கோள்
செவ்வாய் நிலப் பரப்பில்
ஆறு ஓடியது
ஆறு


ஆற்றுப் படுகை
செவ்வாய்க் கோள்

செவ்வாய்க் கோளின் நிலப்படம் 


Friday, 29 March 2019

மனிதன் கட்டிய வான்வெளிக் கூடு International Space Station

தூக்கணாங்குருவி தென்னை மரத்தில் கூடு கட்டுவது போல
மனிதன் வான்வெளியில் கட்டிய கூடு

மனிதன் தங்கி விண்வெளியை ஆராய்ச்சி செய்ய உதவும் வான்வெளிக் கூடு




நிலாவுக்கு மனிதன் சென்ற ஊர்தி Apollo 11 moon landing animation

நிலாவுக்கு மனிதன் மூச்சு விடும் காற்றுடன் சென்ற ஊர்தி



வானத்திலிருந்து கடல், நாடு தோன்றல் The View from Space - Earth's Countries and Coastlines

வானத்திலிருந்து நாடு, மலை, ஆறு, கடல் முதலானவற்றைப் பெயர்க் குறிப்புடன் பார்க்கலாமே




வானத்திலிருந்து பூமி Planet Earth seen from space

வானத்திலிருந்து பூமியைப் பார்ப்போமே




Monday, 2 July 2018

தமிழர் கண்ட வானியல் Cosmology of the Tamils



  • The movement of the sun
  • The gravity of the sun
  • The star-world in its gravity
  • Air in its direction
  • The vacuum with nothing

Somebody is pretending as they have measured all of them.
Think.
Is it not the knowledge of the present world?

செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
  • சூரியன் செல்வது
  • சூரியன் தன் சுழல்-ஈர்ப்பு விசையால் கோள்கள் முதலானவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பது
  • அனைத்தையும் தாங்கிக்கொண்டிரும் வான்-மண்டலம்
  • வான்மண்டலத்தில் திரியும் காற்று
  • காற்று திரியும் திசைகள்
  • இவை ஏதும் இல்லாத ஆகாயம்

இவை அனைத்தையும் அளந்து அறிந்தவர் போல
உலகம் இவ்வளவுதான் என்பவர்களும் உள்ளனர்

சோழ அரசன் நலங்கிள்ளியின் திறம் பற்றி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இவ்வாறு பாடுகிறார்.

இவை இக்கால அறிவியல் விளக்கம் போல அமைந்துள்ளன.


Friday, 22 September 2017

சூரியன் வயது age of the sun

சூரியன் 10 பில்லியன் (10, 000, 000, 000) ஆண்டுகள் இருக்கும் என நாசா அறிவியலகம் கணித்துள்ளது.
மஞ்சள் நிறத்தில் காணப்படும் சூரியன் இன்னும் 5 பில்லியன் (5, 000, 000, 000) ஆண்டுகள் இருக்கும்.
செய்தி 
செய்தி 2
நம் சூரியன்

விண்மீன் வண்ணம் star's color

வானில் பல்வேறு வண்ணங்களில் விண்மீன்கள் காணப்படுகின்றன.
இந்த வண்ணங்கள் அவற்றின் வெப்பநிலையையும், இளமை-முதுமை பருவத்தையும் காட்டுகின்றன.

சிவப்பு நிறத்தில் காணப்படும் விண்மீன் 3,500 டிகிரி செல்சியசு வெப்பநிலைக்குக் குறைந்தது. நீல வண்ணத்தில் காணப்படும் விண்மீன் 30,000 டிகிரி செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டது.

நீலவண்ண விண்மீன் இளமையானது. சிவப்பு நிற விண்மீன் முதுமையானது.
நம் சூரியன் மஞ்சள் நிறத்தில் உள்ளது. எனவே வெப்பம் குறையும் பருவ நிலையில் உள்ளது.
விண்மீன் வண்ணமும் வெப்பமும், வளர்ச்சியும்

வானத்தில் வண்ண வண்ண விண்மீன்கள்

Thursday, 21 September 2017

நிலாவில் மனிதன் நடந்தான் Man walked on the moon's floor

 1969 சூலை 21 அன்று நிலாவில் மனிதன் காலடி வைத்தான். 
நெயில் ஆம்ஸ்ட்ராங் Neil Armstrong நிலா மண்ணில் முதன் முதலில் தன் காலடியை ஊன்றி நடந்தான்.





நிலாவில் மனிதன் நடந்தான்
Man walked on the moon's floor

கருஞ்சுழி Black holes

நமது சூரியன் சென்றுகொண்டிருக்கும் பால்பாதைச் சுழியின் மையத்தில் கருஞ்சுழி Black holes  ஒன்று இருக்கிறது.
இது ஏதுமில்லா வெட்டவெளி. வெட்டவெளி எந்தப் பொருளையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும்.
கருஞ்சுழி வெளிச்சத்தைக் கூட இழுத்துக்கொள்ளும்.
எனவே அதனை நம்மால் பார்க்க முடியாது.
கருஞ்சுழி Black holes


நெபுலா Nebula

விண்மீன்கள்  Stars  பிறக்கின்றன, அதாவது உருஉவாகின்றன, பல லட்சக் கணக்கான ஆண்டுகள் தன் ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டு வாழ்கின்றன, பின் இறக்கின்றன.

சில விண்மீன்கள் சாகும்போது வெடிக்கின்றன. அப்போது அவை துகள்களாக மாறுகின்றன. இந்த விண்மீன் துகள்களை நெபுலா Nebula என்கிறோம். நெபுலாவுக்கு உள்ளே புதிய விண்மீன்கள் தோன்றுவதும் உண்டு. வெடித்த துகள்களும் புகைப்காற்றுகளும் சுழற்சியில் குவியப்பெற்று இளம் விண்மீன்கள் பிறக்கின்றன.
Helix nebula ஹெலிக் என்னும் நெபுலா

பால்பாதை Milky way

நம் பூமி பால்பாதை Milky way  என்னும் விண்ணொளி மண்டலத்தில் இருக்கிறது.
இது சுருள் விண்ணொளி மண்டலம்.
பால்பாதை மிகவும் பெரியது.
அதற்குள் லட்சக் கணக்கான விண்மீன்கள் உள்ளன.
அவற்றுள் ஒன்றுதான் சூரியன்.
பால்பாதை




விண்ணொளி மண்டலம் Galaxies

வானத்தில் பல விண்மீன்களும், காற்றும், தூசிகளும் கூடி ஒளிமண்டலமாகக் காணப்படும். விண்ணொளி மண்டலம் Galaxies என்கிறோம்.

இவை பல்வேறு உருவம் கொண்டுள்ளன. இவற்றைச் சுருள் விண்ணொளி மண்டலம் Spiral Galaxies, நீளுருண்டை விண்ணொளி மண்டலம் Elliptical Galaxies, ஒழுங்கற்ற விண்ணொளி மண்டலம் Irregular Galaxies என மூன்று வகையாகக் கொள்ளலாம். 
சுருள் விண்ணொளி மண்டலம் Spiral Galaxies
நீளுருண்டை விண்ணொளி மண்டலம் Elliptical Galaxies
ஒழுங்கற்ற விண்ணொளி மண்டலம் Irregular Galaxies

விண்மீன் தொகுதி Constellations

பூமி சூரியனைச் சுற்றி வருவதால் வானத்தில் இருக்கும் வெவ்வேறு விண்மீன் கூட்டங்களை நாம் பார்க்கிறோம். அவற்றை நினைவுபடுத்ததிக்கொள்ள நம் முன்னோர் மீன்களை இணைத்து ஒரு கோடு கற்பனையில் போட்டுக்கொண்டு தனித்தனி உருவமாக்கி மனத்தில் பதிய வைத்துக்கொண்டனர். இந்த உருவப் பதிவுகளை விண்மீன் தொகுதி Constellations என்கிறோம்.

உலக அளவில் 88 விண்மீன் உருத்தொகுதிகளைக் கண்டுள்ளனர்.

இவற்றறைத் தமிழர்
நாள்மீன் 27
ஓரை மீன் (மாத மீன்) 12
எனக் கொண்டனர்.
88 விண்மீன்-தொகிதிகளில் ஒன்று

12 ஓரை (மாதம்)



புரோக்சிமா-செண்டவுரி Proxima-Centauri

நமக்கு அருகில் உள்ள விண்மீன் சூரியன். இதன் ஒளி நம் பூமியை வந்தடைய எட்டு நிமிடம் ஆகும்.
சூரியனை அடுத்து அருகில் உள்ள விண்மீன் புரோக்சிமா-செண்டவுரி Proxima-Centauri.  இதன் ஒளி பூமியை வந்தடைய நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அவ்வளவு தொலைவில் இந்த விண்மீன் உள்ளது.
இது சிவப்பு நிறத்தில் உள்ள குள்ள-விண்மீன்.
புரோக்சிமா-செண்டவுரி Proxima-Centauri

சூரியகள இயக்கம் Solar System

சூரியனின் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டிருப்பனவற்றை சூரியகள இயக்கம் Solar System என்கிறோம்.

இதற்குள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரானஸ், நெப்ட்யூன் ஆகிய கோள்களும், சேரஸ், புளுட்டோ, ஹௌமியா, ஏரிஸ், மேக்மேக் ஆகிய குள்ளக் கோள்களும், விண்கல் வட்டம், வால் விண்மீன், எரிகல் போன்றவற்றின் இயக்கங்களும் அடங்கியுள்ளன.

கோள் இருப்பிட வரிசை
கோள் உரு  + வால் விண்மீன் போன்றவை

வால்விண்மீன் Comets

வால்விண்மீன் என்றும், வால் நட்சத்திரம் என்றும் கூறப்படும் Comets வானத்தில் தோன்றும் பனிப்பந்து. பனிக் காற்றும், தூசிப்பனிப் பாறையும் சேர்ந்து உருவானது. சில வேளைகளில் சூரியனுக்கு அருகில் உள்ள வட்டப் பகுதியில் தோன்றி உருகிவிடும். அப்போது அதன் வால் பின்புறம் நீண்டிருக்கும்.

இதன் வால் அழகாக இருக்கும். இதன் வால் பல லட்சம் கிலோமீட்டர் நீண்டும் இருக்கும். சிலவேளைகளில் வடதுருவ வட்டத்தில் தோன்றும்போது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சூரியனை வட்டமிட்டுக்கொண்டிருக்கும். பிற நெப்ட்யூன் கோளுக்கு அப்பால் தோன்றும். அவை பல லட்சம் ஆண்டுகள் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும். இவை சூரியகளத்தின் வெளி-எல்லையில் தோன்றுபவை.

தூசித் துகள்களால் ஆன வால்களை நாம் கண்ணால் பார்க்க முடியும். இயங்கும் ஆற்றல் கொண்ட இதன் பிளாஸ்மா Plasma வாலை நாம் கண்களால் பார்க்க முடியாது. 
வால்-விண்மீன்

வால்-விண்மீன் - ஊடுருவு செங்கதிர் பாய்ச்சி நாசா எடுத்த படம்

Wednesday, 20 September 2017

மேக்மேக். Makemake, the dwarf planet

குள்ளக்கோள்கள் ஐந்தில் ஒன்று மேக்மேக்.
Makemake, the dwarf planet
இது வட துருவப் பனிப் பகுதியில் உள்ளது. 
மேக்மேக். Makemake, the dwarf planet


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி