Showing posts with label வாழ்வியல். Show all posts
Showing posts with label வாழ்வியல். Show all posts

Wednesday, 20 February 2019

தோப்பி Tamils' wine

இக்காலத்தில் Wine என்னும் பழக்கள் திராட்சைப் பழத்திலிருந்து செய்யப்படுகிறது. பண்டைய தமிழர்கள் பழக்கள் சாற்றினை எவ்வாறு உருவாக்கினார்கள் என்று அகநானூறு 348 ஆம் பாடல் தெரிவிக்கிறது. 
தோப்பி ஊறல் (சாறாயம் - சாறு ஆயம்) 
வடித்தெடுக்கும் முறை

  1. பழுத்துத் தானே விழுந்த தேன் போல் இனிக்கும் மாம்பழம்  
  2. பலாச் சுளை
  3. இறால் கஞ்சி

மூன்றையும் கலந்து மூங்கில் குழாயில் அடைத்து பழுக்கும்படிச் செய்த ஊறல் பருகினால் பாம்பு கடு போல் சீறும்படித் திணவெடுக்கும் தோப்பி கிடைக்கும்
அகநானூறு 348 
பாடல் பகுதி

தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்  5
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, 

தோப்பி என்னும் கடுப்புச்சாறு


Friday, 30 March 2018

கூந்தல் கொய்தல் Purananuru - 25


கணவனை இழந்த மகளிர் மொட்டை அடித்துக்கொள்வர்

குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. (பாடல்)


புறநானூறு - 25
அரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 
புலவர் - கல்லாடனார்   முந்நீர் உணவு Purananuru - 24எவ்வி அரசன் ஆண்ட மிழலை நாட்டில் மகளிர் முந்நீர் உண்டு முந்நீரில் (கடலில்) பாய்வார்களாம். 

தென்னையில் இறங்கும் கள்
கரும்புச்சாறு
தாழைக் குரும்பையில் இறங்கும் கள்
இவை மூன்றும் சேர்ந்தது உண்ணும் முந்நீர்.

பரதவர் உடலில் சூடு உண்டாகும் கள்ளை உண்டு குறவை ஆடுவார்களாம். 
உழவர்கள் வெயிலுக்காகக் கடலில் குளிப்பார்களாம். 
மைந்தர் மலர் சூடிக்கொண்டு மகளிரின் கைகளைக் கோத்துக்கொண்டு ஆடுவார்களாம். 

முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; (பாடல்)

புறநானூறு - 24
அரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 
புலவர் - மாங்குடி கிழார்  
பகைநாடு அழிவு Purananuru - 23


பகைவரின் நீர்த்துறையை யானை கலக்கல் 
கூளியர் உண்டு வீசுதல் 
காவல் மரத்தை வெட்டுதல் 
ஊரை எரித்தல் 
இப்படிச் செய்தவன் மேலும் என்ன செய்வனோ என்று மக்கள் பதைத்தல் 
இதுதான் உன் போரின் விளைவு. 

புறநானூறு - 23
அரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் 
புலவர் -   கல்லாடனார் Thursday, 29 March 2018

வெறிக்குரவை Purananuru - 22

போருக்குச் செல்லும் வீரர்கள் குரவை ஆடுவர்.
சினம் கொண்டு ஆடுவர்.
கடலலை பொங்குவது போல ஆடுவர்.
இதற்கு வெறிக்குரவை என்று பெயர்.

சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க; (பாடல்)


புறநானூறு - 22
அரசன் - சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
புலவர் -  குறுங்கோழியூர் கிழார்   புகழ்தல் Purananuru - 21

புலவர் கூறுகிறார்.

நாங்கள் பாடுகிறோம்.
எங்களது பாட்டுத்துறை முற்றுபெற்றது.
இனி உன்னை இகழ்பவர்கள் புகழவேண்டும்.
அவர்கள் உன் புகழைப் பாடிச் சாகும்படி உன் வேல் பூக்கட்டும்.


பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!

இகழுநர் இசையொடு மாய,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே! (பாடல்)
 

புறநானூறு - 21
அரசன் - கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
புலவர் - ஐயூர் மூலங்கிழார்    நல்லாட்சி Purananuru 20


மக்களுக்கு, 
சோறாக்கும் தீ-தான் தெரியும். பகைவர் தீ தெரியாது.
வெயிலின் சூடுதான் தெரியும். ஆட்சிச் சூடு தெரியாது. 
வானவில்-தான் தெரியும். கொலை-வில் தெரியாது. 
படை என்றால் அவர்களுக்கு நிலத்தை உழும் கலப்பை மட்டுந்தான் தெரியும். 
மண்ணைக் கருவுள்ளிருக்கும் மகளிர் தின்றால் ஒழிய, பகைவர் தொட முடியாது. 
புதுப் பறவை வந்ததும் பழைய பறவை போனதும் அவர்களுக்குத் தெரியாது. 
இப்படி மன்னன் நல்லாட்சி நடத்தினான்.  

புறநானூறு 20
அரசன் - சேரமான் யானைக்கண் சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை
புலவர் - குறுங்கோழியூர் கிழார்   வெற்றியா Purananuru 19


முதுகுடிப் பெண் அழுகிறாள்.
என் தலைவரும் என் புதல்வரும் வாள் வீசிப் போரிட்டனர். 
போரில் மாண்டனர். 
போர்க்களத்தில்  கிடக்கின்றனர். 
அதனால் அழுகிறாள். 

இப்படிப்பட்ட செயலால் நமக்கு என்ன வெற்றி வீறாப்பு - என்று எண்ணிக்கொண்டு அழுகிறாள். 

அவள் அழுகையைக் கண்டு உயிரைக் கொன்ற எமனே இரக்கம் கொள்கிறான். 

மன்னன் தன்னை எதிர்த்த ஏழு மன்னர்களின் கொட்டத்தையும் அடக்கினான். 
அவ்வளவுதான். 

புலவர் கேட்கிறார். 
இதுவா வெற்றி?

எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்

எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! (பாடல்)


புறநானூறு 19
அரசன் - பாண்டியன் நெடுஞ்செழியன்
புலவர் - குடபுல இயனார்    மழைநீர் சேமிப்பு Purananuru 18

பெருங்குளம்

நிலம் நெளியும் இடங்களில் மழைநீர் நிலைகொள்ளுமாறு தடுத்து நிறுத்த வேண்டும். 
தடுத்து நிறுத்தியவர் தன் பெயரை இந்த உலகில் தடுத்து நிறுத்திக்கொள்வார். 
மழைநீரைத் தடுத்து நிறுத்தாதவர் தன் பெயரை இந்த உலகில் தடுத்து நிறுத்திக்கொள்ள மாட்டார். 

பாண்டியனுக்குப் புலவர் கூறும் அறிவுரை இது. 

அடு போர்ச் செழிய! இகழாது வல்லே

நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே;
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. (பாடல்)புறநானூறு 18
அரசன் - பாண்டியன் நெடுஞ்செழியன்
புலவர் - குடபுல இயனார்   கொடைமுரசு Purananuru 17

சேரன் கொடை வழங்கினான்
இன்னார் இனியார்
நல்லார் பொல்லார்
என்று பார்க்காமல் வழங்கினான்

இடி போல் முரசு முழக்கி அழைத்து வழங்கினான்.

இடி என முழங்கும் முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே! (பாடல்)

புறநானூறு 17
அரசன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக்கொண்ட சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை 
புலவர் - குறுங்கோழியூர் கிழார் நாம நல் அமர் Purananuru 16


வென்றவர் பகைநாட்டில் செய்த கொடுமைகள் 
விளைவயலில் குதிரைகளை மேயவிடுதல் 
வீட்டு மரங்களை அடுப்பு எரிக்க விறகு ஆக்கிக்கொள்ளல் 
நீர் எடுத்து உண்ணும் குளத்தில் யானைகளை நீராட விடுதல் 
பட்டப்பகலில் பகைவர் ஊரைத் தீயிட்டுக் கொளுத்துதல் 
கரும்பு வயலை எரித்தல் 

இவை நாம நல் அமர்
மக்களுக்கு அச்சம் தரும் போர்
மன்னனுக்கு நல்ல போர்

போரின் கொடுமையைப் புலவர் குறிப்பால் உணர்த்துகிறார். 

புறநானூறு 16
அரசன் - சோழன் இராச்சூயம் வேட்ட பெருநல் கிள்ளி
புலவர் - பாண்டரம் கண்ணனார் புகழ்வாழ்வு எது Purananuru 15


வாழ்வு என்பது புகழுடன் வாழ்வது.
பகைவரை அழித்துப் புகழுடன் வாழ்ந்தவர் பலரா?
பாடினி பாட வேத-வேள்வி செய்து புகழுடன் வாழ்ந்தவர் பலரா?
புலவர் வினா.
உதவியவரே வாழ்ந்தவர் - இது விடை

புறநானூறு
அரசன் - பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
புலவர் - நெட்டிமையார் மன்னர் கை - புலவர் கை Purananuru 14


தேரில் ஏறி வில்லைக் கையில் பற்றிப் போரிடுவதால் உன் கை வலிமையாக உள்ளது.
உன் கை சமைத்துத்தரும் உணவை உண்டு மகிழ்வதால் புலவர் கை மென்மையாக உள்ளதுபுறநானூறு 14
அரசன் - சேரமான் செல்வக் கடுங்கோ வாழி ஆதன் 

புலவர் - கபிலர்Wednesday, 28 March 2018

பகைவனைக் காத்த அரசன் save opponent Purananuru 13


King Chola mounting on an elephant comes to attack the king Chera in his capital Karuvur. 
The elephant becomes mad. 
The poet, a friend of latter reveals his feeling King Chola be saved. 
King Chera saved King Chola.


சோழன் சேரனின் கருவூரைத் தாக்க யானைமேல் வந்தான். 
வந்தவன் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. 
சேரனிடமிருந்த புலவர் சோழன் துன்புறாமல் இருக்கவேண்டும் என்றார். 
சேரன் சோழனைக் காப்பாற்றினான்.  

சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
சரியா Is it good Purananuru 12

Singers get golden lotus to wear.
Poets get wealth loaded on elephants and chariots.
All these you got, you fetched from opponent’s country.

Is it good?

பாணர் அணியப் பொன்னணி தாமரை வழங்குகிறாய்.
புலவர்கள் வாழ யானைகளிலும், தேர்களிலும் ஏற்றிப் பரிசுகள்ளை வழங்குகிறாய்.
பகைவர் நாட்டில் கொள்ளை அடித்துக் கொண்டுவந்து இவ்வாறு  வழங்குகிறாய்.
இது சரியா
பரிசில் வகை gifts Purananuru 11

The king destroyed the fort to get enemies surrender.
The woman-singer of the event got gift of golden ornament weighing ‘kazanju’ a measurement.

The man-singer who adds music sound got a ‘golden-lotus’ as honor.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு சேர மன்னன். அவனைப் பேய்மகள் இள எயினி என்னும் பெண்புலவர் பாடுகிறார்.

வேந்தன் கோட்டைகளைக் கடந்து வலிமை மிக்க அரசர்களைப் புறமுதுகிடச் செய்தானாம்.
இவனது வெற்றியைப் பாடிய பாடினிக்கு கழஞ்சு நிறை அளவில் பொன்னணிகளை வழங்கினானாம்.
பாடினி பாட்டுக்கு பறையிசை முழக்கிய பாண்மகன் அணிந்துகொள்ள வெள்ளி நாரில் கோத்த பொன்தாமரைப் பூக்களைத் தந்தானாம் 

பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,
வெப்பு உடைய அரண் கடந்து,
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே;
புறம் பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடினிக்குக்
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,
என ஆங்கு,
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே.

அரசன் கடமை King's Duty Purananuru 10

Get to know the fraudster immediately.
Do not rely on who blame others.
Give the punishment according to good and evil that that one did.
When he bends before you reduce the punishment.

வணங்கி ஏமாற்றுபவரை உடனே தெரிந்துகொள்
பிறரைப் பழிப்பவரை நம்பாதே
ஒருவனது நன்மை தீமைகளை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல தண்டனை கொடு
வணங்கி முன் நின்றால் தண்டனையைக் குறை

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி அரசனுக்குப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார் இவ்வாறு அறிவுரை கூறுகிறார்.

பாடல் புறநானூறு 10

வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே

போர் அறம் War procedure Purananuru 9


Cows 
Brahmans of cows-like nature 
Women 
Men in sick 
Childless 
Go to a safe place during the war, 
The king warns.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அரசனை புலவர் நெட்டிமையார் பாடுகிறார். 

பசு
பசு போன்ற இயல்பு கொண்ட பார்ப்பனர் 
மகளிர்
பிணியாளர்
குழந்தை இல்லாதவர்
ஆகியோர் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடுங்கள்

போரிடும்போது இந்த அரசன் இவ்வாறு எச்சரிக்கை செய்வானாம். 

பாடல்


'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,

அறத்து ஆறு நுவலும் பூட்கைTuesday, 27 March 2018

நல்லது இல்லை This is not good Purananuru 7

Day and night, you burn the villages of your enemies.
Those peoples in that villages are crying in panic.
You like their cry.
This is not good

காலில் வீரக்கழல் அணிந்திருக்கிறாய்
அந்தக் காலால் தட்டி களிற்றை ஓட்டிக்கொண்டு செல்கிறாய்
கையில் வில் வைத்திருக்கிறாய்
திருமகள் அழகை வேண்டாம் என்று ஒதுக்கிப் புண் தழும்பு இருக்கும் மார்பினைக் கொண்டிருக்கிறாய்
அதில் தோலாலான கேடயம் அணிந்திருக்கிறாய்
இரவு பகல் என்று பார்க்காமல் பகைவர் ஊர்களை எரிக்கிறாய்
அங்கு வாழ்பவர்கள் அழுகின்றனர்
இந்த அழுகை ஒலியை நீ விரும்புகிறாய்

இது நல்லது இல்லை

கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் சோழப் பெருவேந்தன் கரிகாலனிக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறார்

போர் நல்லதன்று 

பாடல்

களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி