Showing posts with label யாப்பு. Show all posts
Showing posts with label யாப்பு. Show all posts

Tuesday, 28 August 2018

கட்டளைக் கலித்துறை A kind of poem with limited alphabets


கட்டளைக் கலித்துறை
பாடல்

அறத்தால் பொருளும் பொருளால் அமிழ்தூறும் காமமும்சேர்
திறத்தால் துறவும் துறவால் விடுதியும் சேர்ந்திடும் ஊழுதவும்
நிறத்தால் உயர்வுதாழ் வில்லை நெறியால் அவைவருமால்
குறித்துக் கொடுத்த திருக்குறள் வழியில் குலவுவமே

கண்ணில் அவனுக் கவளும் அவளுக் கவனுருவும்
எண்ணில் கலக்கும் இணையும் காலப் பொறிவருமேல்
தண்ணீர் அணுவைப்போல் சார்ந்து பொருந்தி தழைத்திருப்பர்
பெண்ணாண் உறவு பெரிது பிறவெல்லாம் பின்னவையே

இவை 
அடியேன் செங்கைப் பொதுவன் இயற்றிய 
கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்

பாடல் இலக்கணம்
  • 4 அடி
  • அடிக்கு 5 சீர்
  • 5 சீரும் வெண்டளை பெற்றுத் தளையும்
  • இறுதிச் சீர் விளங்காய் வாய்பாடு கொண்டதாக இருக்கும்
அடியில் இருக்கும் எழுத்துக்களின் எண்ணக்கை ஒற்று நீங்கலாக அளவு ஒத்து ஒத்து இருக்கும்
  • நேர் அசையில் அடி தொடங்கினால் ஒவ்வோர் அடியும் 16 எழுத்துக்கள் மட்டுமே கொண்டிருக்கும்
  • நிரை அசையில் அடி தொடங்கினால் ஒவ்வோர் அடியும் 17 எழுத்துக்கள் மட்டுமே கொண்டிருக்கும்

இப்படி எழுத்துக் கட்டளையுடன் பாடப்படும் விருத்தம் கட்டளைக் கலித்துறை எனப்படும்
இந்த வகைப் பாடல்களை முதன்முதலில் பாடியவர் மாணிக்க-வாசகர், நம்மாழ்வார் ஆகியோராவர்
  

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி