Showing posts with label புறநானூற்றுச் செய்திகள். Show all posts
Showing posts with label புறநானூற்றுச் செய்திகள். Show all posts

Saturday, 28 July 2018

கரந்தை History in Purananuru 290

கரந்தை - குடிநிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது.

இயல் தேர்க் குருசல்
தேரில் வரும் மன்ன
பெருமானே
கள்ளை இவனுக்குக் கொடுத்த பின்னர் நீ உண்ணுவாயாக

இரும்புத் தச்சன் குறட்டை - சம்பட்டியை - எடுத்து அடிக்கும்போது தாங்கும் பணைக்கல் போல இவன் தந்தையும் அவனுடைய தந்தையும்  உன் தந்தைக்கு இடர் வரும்போது எதிர்த்து நின்று தாங்கிக்கொண்டு போரிட்டனர்

மழை பொழியும்போது நனையாமல் தடுக்கும் பனையோலை போல இவன் உன்னைத் தாக்க வரும் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பான்


பனை மட்டை வீடு 

பூக்கோள் History in Purananuru 289

திணை ...............; துறை ................முல்லை.
கழாத்தலையார் பாடியது.

இன்று பூக்கோள் நாள் என்று சொல்லி முரசினை இழிசினன் முழக்கினான்
பூக்கோள் என்பது பகை மன்னனின் பூமியைக் கைப்பற்றுவது

வயலில் ஈரம்
உழவனிடம் பல எருதுகள் இருந்தன
அவற்றுள் ஏர் பூட்ட உதவும் நல்ல எருது எது என்று உழவன் ஆராய்ந்தான்

அதுபோல அரசன் தன்னிடம் இருக்கும்  வீரர்களில் யாரிடம் போரை ஒப்படைப்பது என்று ஆராய்ந்தான்
மூதிலாளன் ஒருவனைத் தெரிவு செய்தான்
அவனுக்குப் பொன்மணிகள் கொண்ட மண்டையை (பாத்திரத்தை) பரிசாகக் கொடுத்தான்

இந்தச் செய்தியையையும் சொல்லி இழிசினன் முரசினை முழக்கினான் சிதைந்த பாடல் - தும்பை History in Purananuru 288

தும்பை - மூதில் முல்லை

கழாத்தலையார் பாடியது.

போரில் இரண்டு யானைகள் மோதும்போது வென்று மடிந்த யானையின் தோலை உரித்துப் பதப்படுத்தாமல் பச்சையாகவே போர்த்தி அரசனுக்கு முரசினைச் செய்வது வழக்கம் 

அப்படிச் செய்யப்பட்ட முரசம் முழங்கிற்று
போரில், மார்பில் வேல் பாய்ந்த நிலையில், குருதி வெள்ளத்தில்  அந்த வீரன் கிடந்தான்
அவனைப் பருந்துகள் தழுவிக்கொண்டிருந்தனThursday, 26 July 2018

கரந்தை History in Purananuru 264

கரந்தை - கையறு நிலை

....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

நெடுந்தகை கன்றுகளுடன் பசுக்களை  மீட்டுத் தந்தான்
அவன் நினைவாகக் கல் நட்டனர்
பாறைகளை மதில் போல் அடுக்கிப் பதுக்கைக்  கோயில் உருவாக்கினர்
நடுவில் மரல் (மரவேலி) அமைத்தனர்
நடுகல்லுக்கு மயில் பீலி அணிவித்து மாலை போட்டனர்
கல்லில் அவன் பெயரைப் பொறித்து வைத்துள்ளனர்
நெடுந்தகை இவ்வாறு நடுகல் ஆகிவிட்டான் என்பது தெரியாமல் பாணர் சுற்றம் அவனைத் தேடிக்கொண்டு இன்னும் வருகிதேகரந்தை History in Purananuru 263

கரந்தை - கையறுநிலை

இரவல
யானையின் காலடி போல் தோன்றும் பறையை முழக்கிக்கொண்டு செல்லும் இரவல

நீ செல்வாய் ஆயின்
அங்கு இருக்கும் நடுகல்லைத் தொழாமல் செல்ல வேண்டாம்
நீ செல்வது அறநிலை ஆறு
வண்டு மொய்க்கும் ஆறு

அங்குக் கல்லாக நிற்பவன் கரந்தைப் போர் வீரன்
கல்லாத இளையர் - பகைவர் - திரும்பி ஓடும்படிச் செய்து
ஆற்றில் தண்ணீரைத் தடுக்கக் பெருங் கற்களை அடுக்கி வைத்திருக்கும் "கற்சிறை" (கலிங்கு) போல
அம்புகளில் மூழ்கிக் கிடந்து பகைவர்களைத் தடுத்தவன் அவன்.
அவன் நடுகல் அது


பறை

வெட்சி History in Purananuru 262

வெட்சி - உண்டாட்டு - தலைத்தோற்றம்

....................மதுரைப் பேராலவாயார் பாடியது.

மகளிரைக் காட்டிலும் இனிய சாயல் கொண்டவர்களே

பகைவர்களைச் சுழன்று சுழன்று ஓடச் செய்து, அவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு என் தலைவன் வெட்சிப்போர் வீரன் வருகிறான்
அவனை வரவேற்க 

 • நறவுக் கள்ளை மொந்தையில் மாட்டி வையுங்கள் 
 • காளைக் கறியை சமையுங்கள் 
 • மெல்லிய கால் நட்டு, பசுமையான இலைகளைப் பரப்பிப் பந்தல் போடுங்கள் 
 • ஆற்று மணலைக் கொண்டு வந்து பந்தலில் பரப்புங்கள் 

புறநானூறு 262


Wednesday, 25 July 2018

கரந்தை History in Purananuru 261

கரந்தை - கையறு நிலை - பாண்பாட்டு

.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.

அவன் கரந்தைப் போர் வீரன் 
அவன் முற்றத்தில் பாணர்க்கு நறவுக் கள் வழங்கப்படும் 
பெருஞ்சோறு வழங்கப்படும் 

இப்போது உண்ணும் பாத்திரங்கள் வறுமனே கிடக்கின்றன 
நீரில்லா ஆற்றில் அம்பி-ஓடம் கிடப்பது போல் கிடக்கின்றன 
இதனைக் கண்டு என் கண்கள் சோர்ந்து இருள்கின்றன 

யானை கொட்டாவி விடுவது போன்ற ஓசையுடன் அன்று அங்கு நெய் ஊற்றி ஊன்கறி சமைக்கப்பட்டது

இவையெல்லாம் நடந்தது முன்பொரு காலம்

இப்போது

அவன் நடுகல் ஆயினான்

 • பல ஆனிரைகளை மீட்டுக் கொண்டுவந்தான். 
 • கூகை உழைமான் போல் குரல் கொடுப்ப, வீரர்களைக் கொன்று பசுக்களை மீட்டுக்கொண்டு வந்தான் 
 • கரந்தை பால் சுரக்கும் பசுவின் காம்பு போல் பூக்கும்  - இந்தக் கரந்தைப் பூவை  அவனுக்குச் சூட்டிவிட்டனர் - தந்திரம் அறிந்தவர் சூட்டிவிட்டனர் 
 • அவன் ஆனிரைகளை மீட்டுக் கொண்டுவந்தான் 

இப்போது அவன் நடுகல் ஆயினான்

 • அவன் இல்லாததால் அவன் மனைவி தலையை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிளாள் 
 • கைம்மை நோன்பு மேற்கொண்டிருக்கிறாள் 
 • அவன் முற்றம் செயலற்றுக் கிடக்கிறது 
 • வீட்டு-விலக்கு நாளில் பெண் செயலற்று இருப்பது போல் அவன் முற்றம் இருக்கிறது 
கரந்தை - நடுகல் History in Purananuru 260

கரந்தை - கையறு நிலை - பாண்பாட்டு - நடுகல்

......................வடமோதங் கிழார் பாடியது.

கரந்தைப் போரில் தலைவன் மாண்டான்
பாணன் அவன் நடுகல்லைப் பார்க்கிறான்

வளரத் தொடங்கினாலும் அவனால் வளர முடியவில்லை
நெஞ்சம் தளர்கிறான்
தன் மனைவியைப் பார்க்கிறான்
அவள் கூந்தல் வளர்கிறது - உதிர்கிறது - உலர்த்துகிறாள்
தலைவனின் நடுகல் கடவுள் களர் நிலத்தில் கள்ளி நிழலில் இருக்கிறது
அதனை வாழ்த்துகிறான்
பசிக்கும் வயிறு
கண் கலங்குகிறது
கை கூப்பிக் கடவுள் கல்லைத் தொழுகிறான்
"என்னைக் காணவில்லையே" - என்று சொல்லிப் பிதற்றுகிறான்

புலவர் அவனை ஆற்றுப்படுத்துகிறார் - ஆறுதல் கூறுகிறார்

இப்படியெல்லாம் கலங்கும் பாணனே கேள்

புரவலனை வாழ்த்தி உண்பதானாலும் சரி - இரவல்லாம் விழித்துக்கொண்டு துன்பப் படுவதானாலும் சரி -
இரண்டும் உன் கையில் உள்ளது போலும்  - அது கடுமையானது - கடிதுதான் அண்மையில் உள்ளது

உன் தலைவன் - புரவலன் - ஊர் முன்னர் ஆரவாரத்துடன் தோன்றினான். தன் ஊரிலுள்ள பசுக்களை வெட்சிப் போர் வீரர்கள் கவராமல் பாதுகாத்தான். மீளியாளர் கணைகளைத்  தொடுத்தனர். குருதி ஆறு ஓடிற்று. துடியை முழக்கினான். அந்த முழக்கம் குருதி ஆற்றில் அவனுக்குப் புணையாக உதவிற்று. வெற்றி வந்தது. தந்தது அவன். பகைவர் தன் ஊர் ஆனிரைகளைக் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்தினான். 

வையகம் புலம்ப நிலாவைக் கவ்விக்கொண்டிருந்த பாம்பை விடுவிப்பவன் போல அவன் தன்னூர்ப் பசுக்களைக் காப்பாற்றினான். 

இப்போது அவன் யாரும் பெறமுடியாத உலகத்துக்குச் சென்றுவிட்டான். 

அவன் போரிட்டபோது அவன் உடம்பு, காட்டாற்றங்கரையில், கம்பத்தில் நிற்கும் விளக்குப் போல - கம்பமொடு துளங்கிய இலக்கம் போல - நின்றது. அம்பு பாய்ந்து அங்கேயே ஒழிந்தது. 

அவன் பெயர் கடவுள் பெயராக அவன் நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 
அதற்கு மயில்-பீலி சாத்தப்பட்டுள்ளது. 
பிறர் செல்லாத இடத்தில் அதற்குப் பந்தலும் போடப்பட்டுள்ளது. 

கம்பமொடு துளங்கிய இலக்கம்

கரந்தை History in Purananuru 259

திணை கரந்தை - செரு மலைதல் - பிள்ளைப் பெயர்ச்சி

.......................கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

வெட்சி வீரன் ஆனிரைகளைக் கவர்வதைத் 
தடுத்து மீட்பவன் கரந்தை வீரன் 

வாளேந்தி ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டிருக்கும் வெட்சி வீரனே
கவனமாக இரு
பசுக் கூட்டம் உன் விருப்பப்படி வரும்போது ஒருவன் (கரந்தை வீரன்) மறைந்துகொண்டிருக்கிக்கிறான்
இலைகளுக்கு இடையில் மறைந்துகொண்டிருக்கிறான்
அவனைப் பார்
செல்லாதே
மேலும் முன்னேறிச் செல்லாதே
முருகன் சாமி ஏறி விளையாடும் புலைத்தி போல அவன் உன்மேல் பாயவும் கூடும்வெட்சி History in Purananuru 258

வெட்சி - உண்டாட்டு

......................உலோச்சனார் பாடியது.

அவன் ஆனிரை கவர்ந்து வரும் வெட்சிப் போர்வீரன்

 • காரைப் பழம் போலத் தெறிக்குமாறு விளைந்திருக்கும் கந்தாரம் என்னும் கள் 
 • ஆயத்தார் கொண்டுவந்து கொடுத்த தனித்த ஊன்கறி 

இவற்றை உண்டான் 

 • எச்சில் கையில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருந்தது 
 • அந்தக் கையில் வில்லை ஏந்திக்கொண்டு போருக்குப் புறப்பட்டான் 

அவன் இளந்தாடி முளைத்திருக்கும் காளை

 • ஒரு சுற்று எல்லாரும் உணவு உண்பதற்கு முன்னர் ஆனிரைப் பெருங்கூட்டத்தைக் கொண்டுவந்து நிறுத்துவான் 

அவன் திரும்பி வருவதற்கு முன்னர் கள் இருக்கும் சாடியை யாருக்கும் திறக்காதீர்கள் 
அவன் வந்தால் சினம் கொள்வான் 


வில் வீரன்

வெட்சி History in Purananuru 257

வெட்சி - உண்டாட்டு

பாடியவர் பெயர் சிதைந்துபோயிற்று

இவன் யார்
இரக்கம் கொள்ளத்தக்கவனாக உள்ளான்

செருப்பில் காலுக்கடியில் இருந்துகொண்டு உருத்தும் பரல் கல் போலப் பகைவருக்கு இவன் உருத்திக்கொண்டு இருக்கிறான்

 • கணைய மரம் போன்ற கால் 
 • அழகிய வயிறு 
 • அகன்ற  மார்பு 
 • பசுமைப் பார்வை கொண்ட கண்கள் 
 • குருமயிர் தோன்றும் தாவாய் 
 • காதைக் கடந்து விரிந்த கன்னம் 
 • கையில் வில் 

இவற்றுடன் காணப்படுகிறான்
தேரில் வருகிறான்

 • ஊரை விட்டு இன்னும் தாண்டவில்லை 
 • காட்டைக் காப்பிடமாகக் கொள்ளவில்லை 

காலை நேரம்

 • பகைவர் பசுக் கூட்டத்தைக் கையால் சுட்டி எண்ணிப் பார்க்கிறான் 
 • தன் வில்லம்பு கைவரிசையால் திருப்பிக்கொண்டு வருகிறான் 
 • பசுக்கள் மிக மிகப் பல 

தன் வீட்டில் வெண்ணெய் விளையும் பானையில் மத்தொலி கேட்பதை அவன் பொருட்படுத்தவில்லை

மேலும் பசுக்களைக் கவர்ந்து வருவதிலேயே அவனுக்குக் குறி 


வெண்ணெய் திரளும் பானை
மத்து

பெரும்பிரிவு History in Purananuru 256

முதுபாலை

பாடியவர் பெயர் சிதைந்துபோயிற்று

காதலனுடன் காதலி சென்றாள் 
காட்டில் காதலன் காதலியைக் காப்பாற்றும் முயற்சியில் மாண்டுபோனான் 
இப்படி மாண்டவனை ஈமத் தாழியில் வைத்துப் புதைப்பது அக் கால வழக்கம் 
காதலி சொல்கிறாள் 

ஊருக்கெல்லாம் ஈமத் தாழி செய்யும் குயவனே 
சுழலும் வண்டிச் சக்கரத்தில் இருக்கும் பல்லி சக்கரம் சுழலும்போது அதனுடன் ஒட்டிக்கொண்டு சுழல்வது போல காட்டில் அவன் செல்லுமிடமெல்லாம் நானும் அவனுடன் ஒட்டிக்கொண்டு சென்றேன் 
இப்போது அவனை மட்டும் தனியே புதைக்கக் கூடாது 
என்னையும் சேர்த்துப் புதைக்கும்படி பெரியதாகத் தாழி செய்து தருவாயாக 


கலம்
தாழி
அதீயகான் என்னும் எழுத்துக்கள் இதில் உள்ளன
இது அதியமான் என்னும் பெயரைக் குறிப்பது ஆகலாம்
எழுத்து அசோகன் காலத்திய - பிராமி - தமிழி 

பெரும்பிரிவு History in Purananuru 255

முதுபாலை

....................வன்பரணர் பாடியது.

ஊருக்குத் தெரியாமல் காதலனுடன் காதலி செல்கிறாள்
வழியில் தாக்க வந்த புலியுடன் போராடி காதலன் காயம் பட்டுக் கிடக்கிறான்
வலி தாங்க முடியாமல் அவன் ஐயோ என்கிறான்

ஐயோ என்னும் சொல்லைக் கேட்டதும் அவள் மீண்டும் புலி வந்துவிட்டதோ என அஞ்சுகிறாள்
அவன் அவளை அணைத்துக்கொள்கிறான்
அவன் அணைப்பிலிருந்து அவளால் தன் மார்பை எடுக்க முடியவில்லை

என்னைப்போல் உன்னைக் கொல்ல நினைத்துத் துன்புறுத்திய கூற்றுவன் துடிக்கட்டும் - என்கிறாள் அவள்

என் கைகளில் வளையல்கள் உள்ளன
நழுவாமல் இருக்க அவை பயன்படும்
என் கைகளைப் பிடித்துக்கொள்
மரத்தடி நிழலுக்குச் சென்று சிறிது நேரம் இளைப்பாறலாம் - என்கிறாள்

எல்லாம் சரியாகிவிடும் என்பது அவள் நம்பிக்கை 


கையில் வளையல் - இக்காலம்

பெரும்பிரிவு History in Purananuru 254

முதுபாலை

...................கயமனார் பாடியது.

காதலனுடன் ஓடிவந்த காதலி கதறல்
அவளைக் காட்டு விலங்கிடமிருந்து காப்பாற்றப் போராடி அவன் விழுந்து கிடக்கிறான்
அவள் காதலனிடம் சொல்லி அழுகிறாள்

இளையரும்  முதியரும் நம்மை விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்
நான் எழுப்ப நீ எழவில்லை
உன் மார்பில் மண் படிந்துகிடக்கிறது
காட்டு இடைவெளியில் இப்படிக் கிடக்கிறாய்

மள்ள - ஆணழக!
நீ இல்லாவிட்டால் எனக்கு வளையல் ஏது? 
வளையல் இல்லாத கையுடன் ஊருக்குள் செல்வேனா 

என் மகன்தான் எனக்குச் செல்வமும் செம்மாப்பும் என்று உன் தாய் சொல்லிக்கொண்டிருக்கிறாளே  
தன் மகனுக்கு இன்னது நேர்ந்தது என்று அவளுக்குத் தெரிந்தால் அவள் என்ன ஆவாள் 
ஆல மரத்தில் பறவைகள் ஒலிப்பது போல உன் உறவினர் கதறுவார்களே 

நான் ஊருக்குச் செல்லமாட்டேன் - நீ இறந்தால் உன்னுடன் இறந்துபடுவேன் 

புறநானூறு 254


பெரும்பிரிவு History in Purananuru 253

முதுபாலை

....................குளம்பாதாயனார் பாடியது.

காதலனுடன் காதலி சென்றாள் 
காதலனை இளைஞர்கள் தாக்க அவன் விழுந்து கிடக்கிறான் 
காதலனிடம் காதலி சொல்கிறாள் 
 • எனக்காக வருந்தாதே 
 • என்னை மீட்க வந்த இளையர் திளைக்கின்றனர் 
 • பாதுகாக்கப்பட்ட மூங்கில் பின்னல் குதிர் களைந்து நெல் கொட்டுவது போன்ற நிலைக்கு ஆளானேன் 
 • பிறர் சிரிக்கும் நிலை ஆயிற்று 
 • கணவனை இழந்ததால் என் வளையலைக் களைந்துவிட்டு வெறுங்கை வீசிக்கொண்டு இனி நான் வாழ்வேனா
வாழமாட்டேன் - நீ இறந்தால் உன்னுடன் இறந்துவிடுவேன் - என்பது அவள் கருத்து - இதனால் இது புதுபாலை என்னும் துறை 


இப்படி வாழவேண்டிய நான்
என் வளையல் இல்லாமல் வறுங்கையுடன்
வாழ்வேனா
மாட்டேன்
உன்னுடன் மாண்டு போவேன்

தவம் History in Purananuru 252

தாபத வாகை

அவனை மாற்பித்தியார் பாடியது.

இன்று அவன்

 • மழை வெள்ளம் கொட்டும் நீரில் கலங்கல் நீரில் நீராடியதால் தில்லைக் காய்கள் போல் தோன்றும் சடைமுடி கொண்டிருக்கிறான் 
 • உணவுக்காகத் தாளி இலையைப் பறிக்கிறான் 

அன்று அவன்

 • வீட்டில் விளையாடும் மயில் போன்ற மகளிரை நயமான சொல்வலை வீசிப் பிடிப்பவன் - சொல்வலை வேட்டுவன் -

புறநானூறு 252

இல் வழங்கு மடமயில்

தவம் History in Purananuru 251

தாபத வாகை

....................மாற்பித்தியார் பாடியது.

அன்று அவன்

 • ஓவியம் போன்ற அழகான வீடு 
 • அழகே உருவமாகச் செய்து வைத்த பாவை போன்ற மகளிர் 
 • இந்த மகளிர் அவனை அடையவேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களின் வளையல் கழன்று விழும்படிச் செய்தவன் 
 • அவன் மள்ளன்
இன்று அவன்

 • மூங்கில் நிறைந்த காடு
 • அந்தக் காட்டு அருவியில் நீராடுகிறான் 
 • காட்டு யானை அவனுக்கு விறகு கொண்டுவந்து தந்தது 
 • அந்த விறகில் தீ வேள்வி செய்கிறான் 
 • திரி திரியாக இருக்கும் தன் சடைமுடியை அந்தத் தீக் கனப்பில் உலர்த்திக்கொள்கிறான். 

புறநானூறு 251

பாவை அன்ன மகள் 

Tuesday, 24 July 2018

கைம்மை History in Purananuru 250

தாபத நிலை

...................தாயங்கண்ணியார் பாடியது.

அவன் முனித்தலைப் புதல்வனின் தந்தை
அன்று அவன் பந்தல்
 • தாளிதம் செய்த துவையலோடு கூடிய உணவு 
 • போதும் என்று  செல்லும் இரவலரைத் தடுத்து நிறுத்தி வழங்கிய உணவு 
 • உணவு வழங்கிய பந்தல் 
 • புரவலராக இருந்து இரவலரின் கண்ணீரைத் துடைத்த பந்தல் 
இன்று அவன் பந்தல் - அவன் பெருங்காடு அடைந்தான் - அவன் புதல்வனுக்காக அவன் மனைவி வாழ்கிறாள்
 • கூந்தலைக் களைந்துவிட்ட அவன் மனைவி 
 • கையில் வளையல் இல்லாத மனைவி 
 • அல்லி இலையில் இட்டு உணவு உண்கிறாள் 
 • வெறிச்சோடிக் கிடக்கிறது 

புறநானூறு 250


கைம்மை History in Purananuru 249

தாபத நிலை

....................தும்பி சேர் கீரனார் பாடியது.

நேற்று 

 • அவன் அகல் நாட்டு அண்ணல் 
 • ஆரல், வாளை, ஆமை, வரால், கயல் - ஆகியவற்றை முகந்துகொண்டு வரும் நாட்டின் தலைவன் 

இன்று

 • அவன் உயர்நிலை உலகம் எய்தினான் 
 • அவன் மனைவி அடங்கிய கற்பினள் 
 • முறம் அளவு பரப்பளவு உள்ள தரையைச் சாணத்தால் மெழுகுகிறாள் 
 • அழும் கண்ணீருடன் மெழுகுகிறாள் 

(அதில் உணவை இட்டு அவனுக்குப் படையல் செய்துவிட்டு அவள் உண்பாள்) கைம்மை History in Purananuru 248

தாபத நிலை

.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

வெள்ளை நிறப் பூ மலரும் ஆம்பல் கொடி - அல்லிக் கொடி
அவள் இளமையாக இருந்தபோது அவள் அணிந்து மகிழத்தக்க தழையாடை செய்ய இது பயன்ப்படது 
இப்போது, அவள் கணவன் மாண்டபொழுது, துன்பம் தரும் காலை வேளையில் மட்டும் - ஒருவேளை மட்டும் - அவள் உணவு வைத்து உண்ணும் உண்கலமாகப் பயன்படுகிறது
இந்தக் கொடியிலை இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளதுBlog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி