Showing posts with label புறநானூறு Link. Show all posts
Showing posts with label புறநானூறு Link. Show all posts

Tuesday, 8 January 2019

புறநானூறு Purananuru 399


 • புலவர் முடவர். ஐயூரிலிருந்து கிள்ளி வளவனைக் கண்டு பரிசில் பெறச் சென்றுகொண்டிருந்தார். வழியில் தாமான் தோன்றிக்கோ புலவரைக் கண்டான். 
 • தாமான் தோன்றிக்கோன் தோன்றிமலைத் தலைவன். கொடை-அறம் செய்வோருக்கெல்லாம் அறவன். மறவர்களுக்கெல்லாம் மறவன். மள்ளர்களுக்கெல்லாம் மள்ளன். தோலை விரித்து வைத்து நல்ல பிரியாணி உணவு வழங்கினான். 
 • கடவுளுக்கும் தோலில் வைத்துப் படைக்கும் வழக்கம் இல்லையே என்று அதனை யான் தொடவில்லை. 
 • மேடு பள்ளங்களுக்கு அஞ்சாமல் வண்டு இழுத்துச் செல்லும் எருது ஒன்று வேண்டும் என்று கேட்டேன். 
 • உடனே அவன் வானத்தில் மீன் பூத்திருப்பது போல ஆனிரைக் கூட்டத்தையே தந்தான். 
 • ஏறிக்கொண்டு செல்ல வண்டித் தேரும் தந்தான்

தாமான் தோன்றிக் கோனை 
ஐயூர் முடவனார் பாடியது.

புறநானூறு Purananuru 398

 • சேரமான் வஞ்சன் பாயல் மலைத் தலைவன். வாய்மொழி வஞ்சன் எனப் போற்றப்படுபவன். மார்பில் நாகமணி மாலை அணிந்திருந்தான். 
 • வைகறை வேளையில் என் சீறியாழை மீட்டிக்கொண்டு அவன் வாயிலில் நின்றேன்.
 •  மான்கறி வற்றல், கருனை, அரிசி உணவும், சிறப்புப் பரிசில் வரிசையும் கொடுத்து எங்களை நிறுத்தினான். 
 • சிரிக்கச் செய்யும் நகைவர் அவனிடம் செல்லலாம். பகைவர்க்குப் புலிக்குகை போன்ற ஊரில் வாழ்பவன். 

சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.

புறநானூறு Purananuru 397

"செய்தார் மார்ப துயில் எழுக!" என்று சொல்லிக் கிணையை முழக்கிக்கொண்டு அவன் பாசறை வாயிலில் நின்றேன்.

 • நான் பரிசில் வேண்டி வந்துள்ளேன் எனத் தெரிந்துகொண்டான்
 • உணவும், அணிகலன்களும் மழை போல் வழங்கினான் 
 • கோடைக்காலம் போன்ற எங்கள் வறட்சி நீங்கியது
 • கடல் எங்குச் சென்றால் என்ன? சூரியன் தென்திசையில் முளைத்தால்தான் என்ன? யாம் அஞ்சலம். அவன் தாள் நிழலில் இருக்கிறோம்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.


புறநானூறு Purananuru 396

எழினியாதன் (எழினி ஆதன்) கோசர் இன மக்கள் வாழும் வாட்டாறு என்னும் நிலப் பகுதியின் தலைவன்.

 • இவன் உள்ளத்தில் தெம்பு இல்லாதவருக்கு உரமாக நிற்பான். 
 • உறவினர் இல்லாதவருக்கு உறவினனாக இருப்பான்
 • உணவுப் பொருள்களையும், சமைத்த உணவையும் வேண்டிய அளவு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித் திறந்துவிடுவான். 

வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.


புறநானூறு Purananuru 395

அப்போது உறையூரில் இருந்துகொண்டு அரசாண்ட மன்னன் தித்தன்

 • உறையூருக்குக் கிழக்கில் நானில வளங்களும் கொண்டதாய் இருந்த பிடவூரில் வாழ்ந்தவன் சாத்தன். இவனை அறப்பெயர்ச் சாத்தன் என்கின்றனர்
 • அவனது உறவினர் நாங்கள்
 • முந்தாம் நாள் பகலெல்லாம் வறண்ட காட்டில் நடந்து  மாலையில் சாத்தன் வாயிலில் தோன்றித் தடாரி முழக்கிக்கொண்டு நின்றோம்
 • அவன் எங்களைப் பார்த்தான். எதுவும் கூறவில்லை. அரிய அணுகலன்களை வழங்கும்படிச் செய்தான்
 • தன் மனைவியிடம் எங்களைக் காட்டி "என்னைப் பேணுவது போல் இவர்களைப் பேணுக" என்று அவளிடம் கூறினான். அது முதல் அவனை எங்களால் மறக்க முடியவில்லை. பிறரிடம் செல்ல நினைப்பதும் இல்லை
 • நிலமே வறண்டு போனாலும் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்கிறோம்

சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை 
மதுரை நக்கீரர் பாடியது.

புறநானூறு Purananuru 394

வாய்வாள் குட்டுவன் வெண்குடை என்னும் நாட்டை ஆள்பவன்.

 • புலவர்களே! இவனை வள்ளல் என்று உலகம் புகழ்ந்தாலும் பரிசில் வேண்டி இவனிடம் செல்ல நினைக்காதீர்கள் 
 • ஒருநாள் விடியற் காலத்தில் நான் என் ஒருகண் மாக்கிணைப் பறையை முழக்கிக்கொண்டு அவன் வஞ்சிமா நகரைச் சிறப்பித்துக் பாடினேன். அவன் மகிழ்வோடு வந்தான் 
 • யானை ஒன்றைப் பரிசாக வழங்கினான். அது போரில் பலரைக் கொன்று சினம் தணியாமல் இருந்த யானை. அதனைக் கண்டு அஞ்சி நான் ஒதுங்கினேன் 
 • ஒரு யானை போதாது என்று நான் ஒதுங்குவராக அவன் நினைத்துக்கொண்டான். மேலும் ஒரு யானையைக் கொண்டுவந்து கொடுத்தான். 

அதனால் பரிசில் பெற அவனிடம் செல்லாதீர்கள்
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் 
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
போர் யானை

புறநானூறு Purananuru 393


 • ஊரோடு சேர்ந்து பழக முடியாத வறுமையில் வாடுகிறேன். என் சுற்றத்தார் உண்ட ஈரக்கை மறந்து போயினர். 
 • கறிச்சோறு வேண்டும். கிழிந்த என் அடையைக் களைந்துவிட்டுத் தும்பைப்பூ போல் வெண்ணிற ஆடை நான் உடுத்திக்கொள்ள வேண்டும். கேடில்லாத செல்வம் வேண்டும்
 • பெருமானே! இவற்றை எனக்குக் கொடு 

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை 
நல்லிறையனார் பாடியது.

புறநானூறு Purananuru 392


 • அதியர் குடி மன்னன் ஒருவன் வானத்து அமிழ்தம் போன்ற கரும்பைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிட்டான். எழினி அவன் மரபில் வந்தவன்.
 • பனி கொட்டிக்கொண்டிருந்த விடியற்கால வேளையில் இளநிலா ஒளியில் அவன் கோட்டை வாயிலில் நின்றுகொண்டு நான் என் ஒருகண் மாக்கிணையை முழக்கினேன். அவனை வாழ்த்தினேன். உணவும் உடையும் வழங்கினான். 

அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி
இவனை ஒளவையார் பாடியது.

புறநானூறு Purananuru 391

 • நெல் விளையும் பொறையாறு என்னும் ஊரில் வாழும் உழவன் பொறையாற்று கிழான்
 • புலவர் இவனது உழவு மாடுகளை வாழ்த்துகிறார்
 • பசியால் வாடிய புலவர்கள் மன்னை நாடி வந்தபோது முன்பு வந்தாரே பின்னும் வருகிறாரே மிகவும் இரங்கத் தக்கவர் என்று எண்ணிக்கொண்டு பரிசில் வழங்கினான் இந்தக் கிழான்
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 390


 • இவன் முற்றத்தில் ஆர்வலர் குழுமுவர். அரசர்கள் வருவதில்லை. இப்படிப்பட்ட பாதுகாப்பினைக் கொண்டது இவன் கோட்டை
 • கோட்டை வாயிலில் நின்றுகொண்டு என் தடாரிப் பறையை ஒலித்தேன். அவன் வந்தான். பாசி படிந்த என் ஆடைகளைக் களைந்துவிட்டு புத்தாடை உடுத்திக்கொள்ளச் செய்தான். அமிழ்தம் போன்ற புலால் உணவும், துவையலும் வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணத் தந்தான். 
 • வேங்கை மரம் பூத்திருப்பது போலக் குவித்து வைக்கப்பட்ட நெல்லைத் தந்தான்
 • இவன் காவிரியின் தலைநீர் நாடன்

அதியமான் நெடுமான் அஞ்சி
இவனை ஒளவையார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 389

முதியன் ஆதனுங்கன் வேங்கட நாட்டை ஆள்பவன்

 • என்னைப் "பிள்ளையம் பொருநன்" என்று குறிப்பிடுவான்
 • சென்று பார்க்கும் அண்மையிலோ, காணமுடியாத தொலைவிலோ அவன் இல்லை
 • பிள்ளையம் பொருநன் கோடை காலத்தில் தன்னை நினைக்க வேண்டுமே என்று எண்ணி வறுமை தீர வழங்கினான்

ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 388


 • சிறுகுடியில் வாழும் உழவன் பண்ணன்
 • இவன் தென்னவன் மருகன்
 • இவன் அண்ணல் வழுதி
 • வெள்ளி சூரியனுக்குத் தெற்கே இருப்பதால் மழை பெய்யாத காலத்திலும் பறை முழக்கிய கிணைமகன் வறுமை தீரும்படி வழங்கினான் 
 • நாள்தோறும் இவனைப் பாடி என் கிணையை நான் முழக்குவேன். 

சிறுகுடி கிழான் பண்ணனை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.

புறநானூறு Purananuru 387

 • செல்வக் கடுங்கோ வாழியாதன் பூழி நாட்டு அரசன்
 • அவன் யானைப்படையுடன் சென்று பகைநாட்டை அழிக்கும்போது நாங்கள் பறை முழக்குவோம்
 • பகைவர் தந்த திறையால் நண்பர் நல்குரவைப் போக்குபவன் அவன்
 • என் சிறுமையை அவன் எண்ணவில்லை. தன் பெருமையை எண்ணிப் பரிசில் வழங்கினான். 
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.

புறநானூறு Purananuru 386


 • கிள்ளிவளவன் அளிக்கும் உணவைச் சுடச்சுட உண்பதால் வியர்வை வருமே அல்லாமல் உழைப்பதால் எங்களுக்கு வியர்வை வருவதில்லை. 
 • அவன் நாட்டில் பறை முழக்கும் பொருநர் நாங்கள்
 • வெள்ளி எந்தப் பக்கம் போனால் எங்களுக்கு என்ன

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக்
கோவூர் கிழார் பாடியது.
பாடலும் விளக்கமும்
In English

Monday, 7 January 2019

புறநானூறு Purananuru 385


 • அம்பர் காவிரி பாய்ந்து நெல் விளையும் ஊர்
 • அதில் வாழ்ந்த உழவன் அருவந்தை
 • விடியலில் வெள்ளி முளைத்திருந்தது
 • நான் என் தடாரிப் பறையை வேறொருவர் வீட்டு வாயிலில் முழக்கிக்கொண்டிருந்தேன்
 • அதனைக் கேட்ட அருவந்தை நான் இசை முழக்கும் இடத்துக்கு வந்தான்
 • என் வறுமையைப் போக்கினான்
 • அவன் நீண்ட நாள் வாழவேண்டும்

அம்பர் கிழான் அருவந்தையைக் 
கல்லாடனார் பாடியது.

புறநானூறு Purananuru 384

 • நாங்கள் கிணை முழக்குபவர்கள்
 • கரும்பனூர் கிழான் நெல், பொன், கள் ஆகியவற்றை நாங்கள் போதும் போதும் என்றாலும் மேலும் கொடுக்கிறான்
 • நெய் ஊற்றிக் கறியும் சோறும் தருகிறான் 
 • அவன் எங்களுக்கு இருக்கிறான்
 • வெள்ளி சூரியனுக்குத் தெற்குப்பக்கம் இருந்தால் மழை குறையும் என்பார்கள்
 • வெள்ளிக் கோள் சூரியனுக்கு எந்தப் பக்கம் இருந்தால் எங்களுக்கு என்ன
 • பொழுது போவதே தெரியவில்லை
கரும்பனூர் கிழானைப் 
புறத்திணை நன்னாகனார் பாடியது.

புறநானூறு Purananuru 383

 • சேவல் கூவும் காலையில், பனி  பொழியும்போது, சிறுகிணையை முழக்கிக்கொண்டு அவியன் வாசலில் நின்றுகொண்டு அவன் புகழைப் பாடினோம்
 • அவியன் தன் மனைவியுடன் வந்தான் 
 • நாங்கள் ஒதுங்கி நின்றோம்
 • எங்களை விட்டு அவன் விலகிச் செல்லவில்லை
 • எங்களைப் பேணினான்
 • அவன் எங்களுடன் இருக்கிறான்
 • வெள்ளி சூரியனுக்குத் தெற்குப்பக்கம் இருந்தால் மழை குறையும் என்பார்கள் 
 • வெள்ளி சூரியனுக்கு எந்தப் பக்கம் இருந்தால் எங்களுக்கு என்ன
 • அவன் எங்களைக் கைவிடமாட்டான்
மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 382

 • நலங்கிள்ளி கடற்படை கொண்டு வென்று அந்நாட்டு வளங்களைக் கொண்டியாகக் கொண்டு வருபவன். 
 • நாங்கள் அந்தக் கிள்ளியிடம்  பரிசில் பெற்றவர்கள். 
 • பிறரைப் பாடி எதையும் பெறும் தேவை எங்களுக்ககு இல்லை. 
 • முந்நீர் உலகம் முழுவதும் உன்னுடையது 
 • மாக்கிணையும் அதனை அடிக்கும் சிறுகோலும் என்னுடையவை 
 • என் கிணையை நான் நீ வென்று வரும் தேருக்கு முன்னும் பின்னும் நின்று முழக்குவேன் 
 • அந்த ஒலியைக் கேட்டுப் பகைவர் நடுங்குவர்
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

புறநானூறு Purananuru 381


 • கரும்பனூர் கிழான் வேங்கட நாட்டை ஆள்பவன்.  
 • அறத்துறை அம்பி என்று போற்றப்படுபவன். 
 • இவன் தரும் புலால் உணவும் தானிய உணவும் எனக்குப் பிடிக்காமல் இருக்கும்போது, பால், வெல்லப் பாகு சேர்த்துச் சமைத்த உணவினை அவன் எனக்குத் தருவான். 
 • "என் ஊரில் திருவிழா. செல்லட்டுமா" என்றேன். 
 • என் பிரிவை எண்ணி அஞ்சினான். 
 • கொடுக்காத மன்னர் வாயிலில் நின்று தடாரி முழக்கிக்கொண்டு வருந்துவானே என்று எண்ணினான். 
 • என் வறுமையை முழுமையாகப் போக்க எண்ணினான். 
 • கிணைவ! நீ தொலைவில் இருந்தாலும் சரி, என்னோடு இருந்தாலும் சரி. இதனை வைத்துக்கொண்டு வாழ்க என்று சொல்லிப் பெரும் செலவம் வழங்கினான். 

கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.

புறநானூறு Purananuru 380


 • நாஞ்சில் வள்ளுவன் தென்கடல் முத்துமாலையும், வடமலைச் சந்தனமும் அணிந்திருப்பவன். 
 • வேந்தன் தென்னவன் படையில் அவன் வய-மறவன். இவன் வலிமையை எதிர்த்தவர் நடுங்குவர். 
 • இவன் பெயர் கந்தன். 
 • குழந்தை உள்ளம் கொண்டவன். 
 • தான் வறுமையில் வாடும்போதும் என்னைச் சேர்ந்தவர்கள் புலம்பாமல் பாதுகாப்பவன்

நாஞ்சில் வள்ளுவனைக் 
கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி