Showing posts with label பாவாணர். Show all posts
Showing posts with label பாவாணர். Show all posts

Sunday, 12 January 2020

பாவாணர் செய்தி – Pavanar informs 20


பாவாணர் செய்தி

நாள் – 1961 (திருவள்ளுவர் ஆண்டு 2 தை 1992)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழகம்
- செய்திப் பகுதிகள் -


கொடை பெற்றதைப் பாராட்டிய வெண்பா

செங்கைத் தமிழ்க்கழகம் செந்தமிழுக் கிவ்வாண்டும்
செங்கையால் தந்தவறு பானுருபா - பொங்கல்நாள்
பெற்று மகிழ்ந்தேன் பெருநன்றி  என்றமிழ்ப் போர்
வெற்றி யுறவே விரைந்து.

உருபா - தமிழ்ச்சொல் - என்பதற்கான விளக்கம்




பாவாணர் செய்தி – Pavanar informs 19


பாவாணர் செய்தி 

நாள் – 1965 (திருவள்ளுவர் ஆண்டு 28 மேழம் 1996)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கை மதுவன் (நறாஅவன்)
- செய்திப் பகுதிகள் -

இசைத்தமிழ்க் கலம்பகம் - நூல் விற்பனை பற்றியது 





பாவாணர் செய்தி – Pavanar informs 18

பாவாணர் செய்தி 

நாள் – 1968 (திருவள்ளுவர் ஆண்டு 29 மேழம் 1999)
இடம் – ஏர்க்காடு 
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -

ஏர்க்காடு அ நடராசனார் இல்லத்தில் தங்கியது 
பொதுவன் கொடை பெற்றது 

1998 சூன் 29, 30 திருச்சி தேவர் தேவர் மன்றத்தில் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றியது 

தமிழன் பிறந்தது குமரி நாடா, கிரேக்க நாடா - அறுதியிடல் 
நாடு தழுவிய, கட்சி சார்பற்ற (தனித்) தமிழ்க் கழகக் கிளைகள் மாவட்ட வாரியாக நிறுவுதல் 
தமிழ்க் கழகத்தின் தலைவர் மறைமலை அடிகள் 
கோட்டாத்தூர் முத்து அடிகள் (முத்து ரெட்டியார்) ஆர்வம் - ஆற்றல் இன்மை. 
நடந்தேறிய இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளில் மறைமலை அடிகளுக்கு இடம் இல்லாமை 
வையாபுரி கூட்டம்
தொடர்பான செய்திகள் 




பாவாணர் செய்தி – Pavanar informs 17


பாவாணர் செய்தி 

நாள் – 1967 (திருவள்ளுவர் ஆண்டு 5 மடங்கல் 2000)
இடம் – தாம்பரம்
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -

சென்னை, தாம்பரம் முத்துக்கிருட்டிணனார் இல்லத்தில் தங்கியது 
அவர் நூல்களுக்கு மெய்ப்பு திருத்தி உதவியது
பாரிசு உலகத் தமிழ் மாநாடு பற்றியது 
நம் கழக உலகத் தமிழ்க் கழக மாநாடு பற்றியது 





பாவாணர் செய்தி – Pavanar informs 16


பாவாணர் செய்தி – Pavanar informs 16
நாள் – 1968 (திருவள்ளுவர் ஆண்டு 20 சுறவம் 1998)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -

பொங்கல் நன்கொடை பெற்றது 
தமிழர் வரலாறு - நூலில் நன்கொடையாளர் பெயர்களைச் சேர்த்திருப்பது





பாவாணர் செய்தி – Pavanar informs 15

பாவாணர் செய்தி 

நாள் – 1965 (திருவள்ளுவர் ஆண்டு 11 விடை 1996)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன், செங்கை மதுவன்
- செய்திப் பகுதிகள் -

காட்டுப்பாடியில் அவரது இருப்பிடம் மாற்றம் 

10 - 6 - 1965 அன்று செங்காட்டுப்பட்டி வந்து உரையாற்ற ஒப்புக்கொண்டது. 

நன்கொடையாளர்களை நினைவில் ஏந்தியது. 




Saturday, 11 January 2020

பாவாணர் செய்தி - வெட்டெழுத்து – Pavanar informs 14


பாவாணர் செய்தி 

நாள் – 1966 (திருவள்ளுவர் ஆண்டு 25, துலை, 1997)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -

புகழூர் தமிழி (பிராமி) கல்வெட்டு எழுத்துக்களை நான் படித்து அதில் உள்ள செய்திகளைத் தொகுத்துக் கட்டுரையாக அனுப்பி மதிப்பிடச் சொன்னபோது அவர் எழுதிய மடல் 

பட்டயவெழுத்தாகிய வெட்டெழுத்து பற்றி


தமிழெழுத்து தொன்றுதொட்டு இருவேறு வகையாக இருந்து வந்துள்ளது.

அவற்றுள் ஒன்று எழுத்தாணி கொண்டு பெரும்பாலும் வளைத்தெழுதும் ஏட்டெழுத்து

இன்னொன்று உளி கொண்டு பெரும்பாலும் நேர்க்கோடாய்க் கல்லிலும் செம்பிலும் எழுதும் பட்டயவெழுத்து

இவ்விரண்டும் எழுதும் உருவியலாலும், எழுதப்பட்டிருக்கும் உருவியலாலும் வேறுபட்டுள்ளன. 

பிற நாடுகளிலும் இஃதே. 

வெட்டடெழுத்தின் பழமை "காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்" என்று வெட்சித் திணையுள் ஒன்றான "நடுகல்" என்பதனால் உணரப்படும். 

வடமொழிக்கு முதலில் தோன்றிய கிரந்தவெழுத்து தமிழ் வெட்டழுத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் தோன்றியதாம். ஐந்திர வியாகரணம் அதில்தான் எழுதப்பட்டுள்ளது. 

தமிழ் ஏட்டெழுத்து தொன்றுதொட்டு வழங்குவதென்பது "தொல்லை வடிவின ... ... மெய்ப்புள்ளி" என்னும் நன்னூல் நூற்பாவாலும், (98) அறியப்படும். 

(முற்காலத்து) "அவ்வாறு புழங்குமிடத்து" என்று உரை கூறுவது தவறு. 
நன்னூலார் காலத்தில் எதுவும் புள்ளி பெறவில்லை. இன்று போல்தான் எழுதப்பெற்றன. புள்ளி பெற்றிருப்பின் அதனை ஏன் விதந்து கூற வேண்டும்? தொல்லை வடிவின என்பதிலேயே அஃதடங்கிவிடுமே. 

பவணந்தியார் காலத்து ஏ-யின், ஓ-வின் சுழி பிற்காலத்தில் விடப்பட்டதையே வீரமாமுனிவர் புதுப்பித்தார். 

"எய்தும்" என்பது வழக்குப் பற்றிய பால்வழுவமைதி. 

இதனால் பாவாணர் கூறும் செய்தி

[எ]  [ஒ] எழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்து 
புள்ளி வைத்து எழுதப்பட்டு வந்தன 
நன்னூலார் காலத்தில் அவை "தொல்லை வடிவின" ஆகி,
கைவிடப்பட்டன.
பின்னர் வீரமாமுனிவர் சுழியாக்கி வேறுபடுத்தினார். 





பாவாணர் செய்தி – Pavanar informs 13


பாவாணர் செய்தி – Pavanar informs 13
நாள் – 1967 (திருவள்ளுவர் ஆண்டு 1998 27 கும்பம்)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -

தமிழ் வரலாறு - நூல் விற்பனை பற்றியது 




Friday, 10 January 2020

பாவாணர் செய்தி – Pavanar informs 12

பாவாணர் செய்தி 

நாள் – 31 - 8 - 1963 
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – இரத்தினகுமார் (பொதுவன் தமிழாசிரியராகப் பணியாற்றிய பள்ளி)
- செய்திப் பகுதிகள் -

புகழூர் உயர்நிலைப் பள்ளியில் 
"தமிழின் போக்கு" என்னும் தலைப்பில் முக்கால் மணி நேரமும்
"The Excellence of Tamil" என்னும் தலைப்பில் கால்மணி நேரமும் 
பேச ஒப்பியது 

அவ்வாறே வந்து பேசினார். 

வந்தபோது பொதுவன் இல்லத்தில் ஒஒருநாள் தங்கிப் பெருமைப்படுத்தினார்.  




பாவாணர் செய்தி – Pavanar informs 11


பாவாணர் செய்தி – Pavanar informs 11
நாள் – 19-8-1961
இடம் – அண்ணாமலை நகர்
பெறுநர் – முத்தமிழ்க் கழகம் 
- செய்திப் பகுதிகள் -

போலித் தமிழரின் சூழ்ச்சியால் எனக்கு வேலை சென்ற சூன் மாதத்துடன் முடிந்துவிட்டது. 




பாவாணர் செய்தி – Pavanar informs 10


பாவாணர் செய்தி – Pavanar informs 10
நாள் – 1965 (திருவள்ளுவர் ஆண்டு 1966 மான்றலை 14)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கை முத்தமிழ்க் கழகம்
- செய்திப் பகுதிகள் -

மற்றொரு மடல்




பாவாணர் செய்தி – Pavanar informs 9

பாவாணர் செய்தி 

நாள் – 1964 (திருவள்ளுவர் ஆண்டு 1995 நளி 4)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன்
- செய்திப் பகுதிகள் -
  • தங்கள் முடங்கலுடன் கட்டுரையும் பெற்றேன். 
  • வேண்டிய மாற்றம் செய்து தென்மொழி இதழுக்கு அனுப்பலாம் 
  • தொல்காப்பியத்தில் பல வழுக்கள் இருக்கின்றன 
  • அவை என் - தமிழ்மொழி வரலாறு - நூலில் தெளிவாகும் 
  • தமிழ் குமரிக் கண்டத்தில் தானே தோன்றிய முதல் தாய்மொழி




பாவாணர் செய்தி – Pavanar informs 8


பாவாணர் செய்தி 
நாள் – 1965 (திருவள்ளுவர் ஆண்டு 3 சுறவம் 1996)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – நா. செல்வராசன் 
- செய்திப் பகுதிகள் -
  • அன்பளிப்பு அறுபதுருபா பேருவகையுடன் பெற்றுக்கொண்டேன். 
  • திரு நறாஅவன், புலவர் பொதுவன் முதலானோர் பொங்கல் வாழ்த்துக்கள் வந்து சேர்ந்நதன. 
  • இறைவனருளால் ஈளை நோய் இன்று நீங்குகிறது
  • கண் மருத்துவச்சாலை சென்று திரும்பிவிட்டேன் 
  • இசைத்தமிழ்க் கலம்பகம் - நூல் அச்சாகிறது 
  • மாதம் - தமிழ்ச் சொல்லே 
  • தொல்காப்பியம் கற்ற அருணாசலம் நல்லிறையனார் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். 
  • 10-1-1965-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில், தனித்தமிழ்க் கழகத் துவக்க விழா நடந்தது. 



பாவாணர் செய்தி – Pavanar informs 7


பாவாணர் செய்தி – Pavanar informs 7
நாள் – 1967 (திருவள்ளுவர் ஆண்டு 1998 மீனம் 22)
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன், புகழூர் 
[செய்தி – மடலில் உள்ளபடி]
நூல் விற்பனை தொடர்னான செய்திகள்

பகுதிகள் 

அண்ணாதுரையார் கூட்டாட்சிகளைப் புறக்கணித்தது போன்றே தமிழையும் புறக்கணித்து விட்டார்.

மும்மொழித் திட்டத்தைப் போற்றுகிறார்.

என் நூல் வடமொழி வரலாறு வெளிவந்த பின்னர் - மறைமலையடிகள் கொள்கையா, வையாபுரி கொள்கையா - எது உண்மை எனத் தெரியவரும்.


பாவாணர் செய்தி – Pavanar informs 6

பாவாணர் செய்தி 

நாள் – 1967 திருவள்ளுவர் ஆண்டு 1998, மீனம் 30
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன், புகழூர்  
  
[செய்தி – மடலில் உள்ளபடி]

தங்கள் 2626-ஆம் பக்கல் அட்டை கைவயம் 

புலவர் முகவரி
புலவர் கு இராமசாமியார் 
தலைதைத் தமிழாசிரியர்
கழக உயர்நிலைப் பள்ளி
நாமக்கல் வடக்கு
நல்லியம்பாளையம் அஞ்சல் 
நாமக்கல் வட்டம், சே. மா. 

தமிழர் மதம் வேறு; திராவிடர் மதம் வேறு. 
அரையாரியமான திராவிடம் தமிழோடு எங்ஙனம் ஒட்டும்?

மேலும், தாங்கள் கட்சியாலேயே எல்லாம் எல்லாம் ஆக வேண்டும், என்று கருதுவோரும், தனித்ததமிழ்ப் பற்றில்லாதோறும், தமிழ் வளரச்சியினும் கட்சி வளர்ச்சியையே தலைமையாகக் கருதுவோரும், 

சென்னைப் ப க க த அகர முதலியைத் தீத்துதலும், 
கோயில் வழிபாட்டைத் தமிழில் நடத்துதலும், 
போன்ற அருந்தமிழ்த் தொண்டுகளையெல்லாம் ஆற்ற வொண்ணும்? 

தமிழன் ஆட்சி இருந்தால், உண்மையான தமிழ்த் தொண்டர் வருவாநின்றி இடர்ப்படவும், தமிழ் வாழ்வுக்கு இன்றியமையாத நூல்களைப் பொதுபக்கள் நன்கொடையால் வெளியிடுமாறு  தமிழன்னையே இரவன்மகள் நிலைமையை எய்த்தவும் நேருமா? முன்மை வரிசையின் இறுதியின் கூட இடம் பெறாது தமிழ் தள்ளப்படுமா? தமிழைக் காட்டிக் கொடுப்போரும், அவருக்கு உடந்தையாய் இருப்போரும், ஆயிரக் கணக்காய் சம்பளம் வாங்கிக்கொண்டு இன்ப வாழ்க்கை நடத்த இயலுமா? 









Thursday, 9 January 2020

பாவாணர் செய்தி – Pavanar informs 5


பாவாணர் செய்தி 

நாள் – திருவள்ளுவர் ஆண்டு 1999 ஆடவை 8 
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – பொதுவன், புகழூர் 

[செய்தி – மடலில் உள்ளபடி]

\திருச்சித்  தமிழ்க்கழக அமைப்பு மாநாடும், தமிழ் வரலாற்று மாநாடும், செயலாளர் தவற்றினால் இம்மாத இறுதியில் நடைபெறாது ஒத்திவைக்கப் பட்டுள்ளன. அத்துடன செயலாளர் பணத்திற்குக் கள்ளக் கணக்கு காட்டுவதாகவும் கேள்வி.

மாநாட்டில் பதினைவர் பேசவேண்டியிருப்பதாலும், தமிழாக்கத்திற்குச் சில இன்றியமையாத சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற விருப்பதாலும் ஒரு நாள் போதாது. மேலும் ஞாயிறு எல்லார்க்கும் பொதுவான விடுமுறையாதலால், அன்றே எல்லாத் தமிழன்பர்களும் கலந்துகொள்ள முடியும்.
திருச்சி கொதிகலன் தொழிற்சாலைத் தமிழன்பரும், கல்லூரி மாணவர்ரும் அன்றுதான் வரமுடியும்.

தேவர் மன்றம் இன்னும் ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவதால், சூலை இறுதி அல்ல, ஆகத்துத் தொடக்கத்தில்தான் மாநாடு நிகழும்.
இடம் தவிர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

மாநாடு திருச்சி மாவட்டத் தனித்தமிழ்க் கழகச் சார்பிலேயே நடைபெறுகிறது. ஆதலால், வரவேற்புக் குழுத் தலைவராகத் தாங்கள் இருக்க விரும்பின் உடனே தெரிவிக்க. தாங்கள் விரும்பாவிடின் வேறொருவரை அமர்த்துதல் வேண்டும்.

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?’ என்னும் என் சிறு நூல் வெளிவந்துவிட்டது.
250 படிகள் அன்னத்தாளகத் திரு முருகனார்க்குச் சென்னையிலிருந்து விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளன.
விலை ஒரு படி ஓர் உருபா.
தங்கிடம் 50 படிகளை ஒப்படைக்குமாறு சொல்லியிருக்கின்றேன்.
அப்பக்கம் செல்ல நேரின் வாங்கிக் கொணர்ந்து, விற்றுத் தொகையைத் திரு. நா. நெல்வராசனாரிடம் தந்துவிடுக. அல்லது மாநாட்டில் நேரில் தருக.




பாவாணர் செய்தி – Pavanar informs 4

பாவாணர் செய்தி 

நாள் – 1964 திருவள்ளுவர் ஆண்டு 2-2-1995
இடம் – காட்டுப்பாடி
பெறுநர் – செங்கைப் பொதுவன், செங்காட்டுப்பட்டி,    

[செய்தி – மடலில் உள்ளபடி]

பேரன்பரீர்,
வணக்கம்

நான் தி. மு. க. வில் சேர்ந்திலேன்.
இந்தித் திணிப்புப் பற்றி மட்டும், மறைமலையடிகள் சு. ம. இ. தலைவரோடு ஒத்துழைப்பது போல ஒத்துழைப்பேன்.

தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்னும் அடிப்படைக் கொள்கையை மறந்து மொழியத் தி. மு. க. வில் சேர முடியாது.

இதுபோழ்துள்ள அரசியல்காரர் தமிழுக்கு ஓரளவு சார்பாயுள்ளது தி. மு. க. ஒன்றே. 

தாய்மொழிச் செய்தியில், மேனாடுகளிற் போல், பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டால்தான் தமிழ்நாடு உய்யும்.   



பாவாணர் செய்தி – Pavanar informs 3

பாவாணர் செய்தி 

நாள் – 29-1-72
இடம் – அண்ணாமலை நகர்
பெறுநர் – செங்கைப் பொதுவன், வாரணாசி (காசி) 
[செய்தி – மடலில் உள்ளபடி]

பேரன்பரீர், 
வணக்கம். 

பொத்தக விற்பனைப் பொறுப்பு முழுதும் என் மகன் பணியிடமுள்ளது. 
அவன் முன்பணமின்றிப் பொத்தகங்களை அனுப்ப மாட்டான். 
சை,சி.நூ.ப. கழகத்தில்தானே வாங்கிக்கொள்க. அங்கு எல்லாம் கிடைக்கும். 

வாரணாசி ஆரியக் கோட்டை. 
தொடக்கத்தில் அடக்கமாகவேயிருக்க.  
தில்லிப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பர். சாலை இளந்திரையன் நம்மவர். 
அவரொடு தொடர்பு கொள்க. 
இயலுமாயின் - கிழமை இறுதி அங்குச் சென்று காண்க. 
அவர் நல்ல அறிவுரை கூறுவார். 

தொடக்கத்தில் அலுவல் காலம் குறுகியிருப்பினும் குற்றமில்லை. 
கல்லூரிப் பதவிக்கு மேற்பட்டது, பல்கலைக் கழகப் பதவி. 
பதவியமர்த்தம் ஒரு நற்பேறு. 
பொறுமையாயிருந்து சிறப்பாகப் பணியாற்றுக. 
அங்கில்லாவிடினும் வேறிடத்தில் வேலை நிலைக்கும். 

ஓய்வு நாளில் அங்குள்ள பழம் பொத்தகக் கடை சென்று, Imperial Gazetteer of India (26 vols) முழுத் தொகுதியும் நன்னிலையிற் கிடைப்பின் - தெரிவிக்க. தமிழையும், திராவிட மொழியினையும் பற்றி  - எழுதிய கிடைத்தற்கரிய, நூல்களாயினும், தெரிவிக்க. 




    






பாவாணர் செய்தி – Pavanar informs - 2

பாவாணர் செய்தி 

நாள் – 1961 - திருவள்ளுவர் ஆண்டு 1992-9-13 
இடம் – காட்டுப்பாடி 
பெறுநர் – செங்காட்டுப்பட்டி, முத்தமிழ்க் கழகச் செயலாளர்.  

[செய்தி – மடலில் உள்ளபடி]


தமிழ் வெல்க!

அருந்தமிழன்பரீர், வணக்கம்.

தங்களின் அஞ்சலட்டை வந்து சேர்ந்தது.
இற்றை முகவரி மேலது.

நான் அண்ணாமலை நகரை விட்டு மும்மாதமாகின்றது.

’மாதம்’ தமிழ்ச் சொல்லே.
மதி - மாதம்

‘திங்கள்’ கிழமைப் பெயராய் உள்ளது.
நிலா என்னும் பொருளில் ‘மதி’ வடமொழியில் இல்லை.
மாதம் வடமொழியில் மாஸ என்று திரியும்.

மார்கழி வடசொல்.
அதன் தமிழ்ப்பெயர் ‘மான்றலை’.
அதை ‘ம்ருக சீர்ஷ’ எனப் பெயர்த்தனர் வடவர்.
மிருக(ம்) = மான்.
சீர்ஷ = தலை.
அவ் வடசொல்லையே தமிழர் மிருகசீரிடம் என்றும், மார்கழி (மார்க சீர்ஷ) என்றும் திரித்தனர்.
இது நாள் (நட்சத்திதம்) பெயர் பற்றியது.
பண்டை முறைப்படி, ஓரை (இராசி) பற்றியதாயின், வில் (தனுர்) மாதம் என்று சொல்ல வேண்டும்.

‘தமிழ் வரலாறு’ என்னும் நூல் எழுதப்பட்டு வருகின்றது.
விரைந்து அச்சேறும்.
வெளியானவுடன் அனுப்புகிறேன்.
இன்னும் ஓராண்டுக்குள் தமிழ் தான் இழந்த தலைமையை மீளப் பெறும்.




பாவாணர் செய்தி – Pavanar informs 1

பாவாணர் செய்தி  

நாள் – 1961-01-16
இடம் – அண்ணாமலை நகர்
பெறுநர் – செங்காட்டுப்பட்டி, முத்தமிழ்க் கழகச் செயலாளர்.  


(முடங்கலில் உள்ளபடி)

நான் தமிழ்ப் புலவர் குழுக் கூட்டத்திற்காகக் கோவை சென்றிருந்ததால், இன்றுதான் தங்கள் முடங்கலைக் கண்டு கழிபேருவகை பெற்றேன்.

பணவிடை அறுபான் உருபா நாளை பெறுவேன். 

தென்மொழியார் தீந்தமிழை, வன்மொழியாம் வன்மொழியாம் வடமொழியினின்று மீட்க வேண்டும் என்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். 

அது நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. 

இந்த நோக்கத்துடனேயே, கடந்த முப்பதாண்டுகளாக, மொழிநூல், வரலாற்று  நூல், மாந்தனூல் (Anthropology) ஆகிய முத்துறை நூல்கள் கற்றுத் தமிழை ஆராய்ந்துள்ளேன். 

ஐக்கிய நாட்டமைப்புவரை போராடி, மொழிவுரிமை பெறுமளவு, பல உண்மைகளைக்  கண்டேன். 

அவை, தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் மதம், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், வடமொழி வரலாறு, முதலிய பல நூல்களாக அடுத்த தமிழாண்டில் அடுத்தடுத்து வெளிவரும். 

உடனுடன், தலைவர்க்கு ஒன்றும், செயலர்க்கு ஒன்றும், கழகத்துக்கு ஒன்றுமாக, முப்படிகள் அனுப்பிக்கொண்டிருப்பேன். 

அடுத்த ஆண்டு மறைமலையடிகள் பெயரால், தமிழியக்கம் தொடங்குவேன். 

தமிழ் திரவிடத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆகும் என்னும் உண்மை உலகறிய நாட்டப்பெறும். 

கோயில் வழிபாடு தமிழில் நடத்தலும், இந்திக் கட்டாயம் ஒழித்தலும், மொழித்துறையில் தமிழ் தான் இழந்த தலைமையை மீளப் பெறுதலும் அதன் பயனாகும். 

போராட்டம் ஏழ் ஆண்டுக்கு மேல் நடந்துள்ளது. – தென்மொழி – வடமொழிப் போராட்டம் என் காலத்தில் தமிழுக்கு வெற்றியாக முடியும்.

குல மத கட்சி சார்பின்றித் தமிழுக்குப் பொருள் கொடுப்பார் இல்லையென்று இதுவரை கொண்டிருந்த கருத்து இல்லையாயிற்று. 

தாங்கள் விடுத்த கொடையை நோபல் பரிசு போல் போற்றி ஏற்கின்றேன். 

என் போராட்டம் வெற்றி பெறுவதற்கு இறைவன் விடுத்த திருவருட் சீர்னமாய் இதைக் கருதுகிறேன். 

நன்றி.      



60 உருபா
முத்தமிழ்க் கழகம் - 12
செங்கை. செந்தமிழ்க் கிழார் - 24
செங்கை மதுவன் - 12
செங்கைப் பொதுவன் - 12

அப்போது பொதுவன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் - ஊதியம் 30+19

அப்போது நெல் விலை - ஒரு மூட்டை 12 உருபா

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி