Showing posts with label பழங்கதை. Show all posts
Showing posts with label பழங்கதை. Show all posts

Friday, 27 October 2017

பரசுராமன் ParasuRam

பரசுநராமன் பிறப்பு திருமாலின் 10 பிறப்புகளில் ஒன்று. இதனை ஆறாவது பிறப்பு எனக் காட்டுவர்.

இவன் தவம் செய்து பரசு என்னும் கோடாரியைச் சிவனிடமிருந்து வரமாகப் பெற்றான். அதன் திறத்தால் காத்தவீரியன் என்னும் மன்னனைக் கொன்றான்.

பரசுராமனின் தந்தை சமதக்கினி முனிவர். பரசுராமன் இல்லாதபோது காத்தவீரியனின் புதல்வர்கள் சமதக்கினி முனிவரைக் கொன்றனர். அதனால் சினம் கொண்ட பரசுராமன் அன்று முதல் 21 தலைமுறை வரையில் கண்ணில் பட்ட அரசர்கள் அனைவரையும் கொன்று குவித்துவந்தான்.

இவனை "மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்" என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.
பரசுராமன்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி