Showing posts with label பண்பாடு. Show all posts
Showing posts with label பண்பாடு. Show all posts

Sunday, 6 May 2018

நீர்மை Habit of water

நீர்மை என்பது நீரின் தன்மை
நீரின் தன்மைகள் என்னென்ன?

தனிமமாக ஒட்டிக்கொள்ளல்.
தனிமங்கள் ஒட்டிக்கொள்ளல்.
தொட்டால் ஒட்டிக்கொள்ளல்.
உருண்டு திரண்டு நிற்றல்.
ஓடும்போதும் திரண்டே ஓடும்

பள்ளத்தை நோக்கிப் பாய்தல்
உயிரினங்களை ஊட்டி வளர்த்தல்

சுட்டால் சூடேறி ஆறல்
கொதிநிலைக்குப் பின்னர் காற்றில் கலந்து தன்னிலை பெறுதல்

விழுந்தாலும் இனக்கூட்டத்தோடு விழுதல்

இவை நீரின் தன்மை
இந்தத் தன்மைகளைப் பெற்றிருப்பதே நீர்மைப் பண்பாடு

நீர் தனிமம்
நீர் தனிமம்
நீர் ஒட்டிக்கொள்ளும் 
நீர் தன் இனத்தோடு இணைந்தே இருக்கும்
இணைந்தே விழும்
தனியே பிரிக்க இயலாது
கூடித் திரண்டே இருக்கும்
திரண்டே ஒழுகும்
சூட்டில் ஆவி ஆனாலும் நீர் குளிர்ந்து நீர் ஆகிவிடும்
காற்றால் உந்தப்பட்டாலும் திரண்டே ஏறி இறங்கும்
நீர் ஒட்டியிருக்கும் பகுதி நீர் மட்டத்தை விட ஏறி இருப்பதைப் பாருங்கள்
இப்படி ஒட்டி உறவு கொண்டு உயர வேண்டும்

Saturday, 8 April 2017

தமிழ் எண் 17 Tamil Numerals 17

தமிழர் பயன்படுத்திய நெறிமுறை
பகலிலும் இரவிலும் நாழிகை பார்க்கும் முறைமை

கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


Friday, 20 January 2017

காமாண்டி விழா festival on Love God

காமாண்டித் திருவிழா நடைபெற்றதை அடியேன் இளமைக் காலத்தில் 1940 களில் பார்த்திருக்கிறேன். தை மாதம் 3 ஆம் நாள் காப்புக் கட்டுவார்கள். 21 நாள் விழா நடைபெறும். விழாக் காலங்களில் இரவு வேளையில் காமன் வரலாற்றில் புலமை உடைய இருவர் தப்பு மேளம் அடித்துக்கொண்டு எதிர்ப்பாட்டுகளை பாடுவர். ஒருவர் காமன் எரிந்தான் என்பார். மற்றொருவர் எரியவில்லை என்பார். இருவரும் பாட்டாகப் பாடுவர். அந்தப் பாட்டுக்கு “லாவணி” இசை  (இலாவணி, காமன் இல்லை என்னும் அணிப்பாட்டு) என்று பெயர். வல்லுநர்கள் பல ஊர்களுக்கும் செல்வதால் ஓரிரு நாள் சில மணி நேரம் மட்டுமே பாட்டிசை நடக்கும்.

சிலப்பதிகாரம் காட்டும் இந்திர விழா இதனோடு தொடர்புடையது.

அடியேன் வாழ்ந்த செங்காட்டுபட்டியில் மன்மதன், இரதி வேடம் அணிந்துகொண்டு இரண்டு ஆண்கள் ஆடுவர். (இளஞ்சேரன் பெண் வேடமும், செட்டியாப்பிள்ளை ஆண் வேடமும் போட்டிருப்பார்கள்) பூ சுற்றிய வில்லும் அம்பும் வைத்துக்கொண்டு ஒருவர்மீது மற்றொருவர் அம்பு விடுவது போல ஆடுவர்.

சிவபெருமான் காமனை எரித்தான் என்பது ஒரு கதை. இந்தக் கதையைத் தழுவியது இந்த ஆட்டம்.

ஊர்ச் சந்தியில் ஒரு பெரிய பாறாங்கல்லை நட்டு வைத்திருப்பர். அந்தக் கல்லே காமன். காப்புக் கட்டும் நாளில் அந்தக் கல்லில் வைக்கோல் புரியைச் சுற்றுவர். முடியும் நாளுக்கு முந்தைய நாளில் வைக்கோலில் தீ மூட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக எரியும்படிச் செய்வர். இது காமனைச் சிவன் எரித்ததாகப் பொருள். மறுநாள் கல்லை எண்ணெய் பூசிக் குளிப்பாட்டுவர். இது இறுதி நாள் நிகழ்ச்சி. இது காமனைச் சிவன் எழுப்பியதாகப் பொருள்.

இந்த விழாவே பாலைக்கலியில் கூறப்பட்டுள்ளது.

“வில்லவன் விழவினுள்விளையாடும் பொழுது” என்பது அந்தப் பாடலடி. இந்த விளையாட்டு நிகழும் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று தலைவியிடம் வாக்குறுதி தந்துவிட்டுத் தலைவன் பொருள் தேடச் சென்றானாம்.     


காமனும் காமியும்
காமனும் ரதியும்

அன்ன ஊர்தியில் காமி

சிவன் காமனை எரித்தல்

காமன் காமி வேடம்

ஏறு தழுவல் bull fight

தமிழர் விளையாட்டு விரும்பிகள்.
ஏறு தழுவி வீரத்தைக் காட்டுவர்.
காவடி என்பது காக்கும் திருவடி. அழகே முருகு.  அழகே மகிழ்சி. மகிழ்ச்சியே நம்மைக் காக்கும். முருகை முருகன் என்கிறோம். திருவள்ளுவர் இறையை இறைவன் என்கிறார். முருகன் திருவடி நம்மைக் காக்கும். இரண்டு திருவடிகள் இரண்டு பக்கமும் தொங்குவது காவடி. காப்பது ஈரம் என்னும் அன்பு.
படம் வீரத்தையும் ஈரத்தையும் காடுகிறது.
தமிழர் பண்பாடு 
Sunday, 14 February 2016

தமிழ்-எண் குறியீடு Fraction numarals in tamil

முழு எண்ணைப் பிரிக்கும்போது தமிழர் பாதி பாதியாகப் பங்கிடும் பின்னங்களையும், ஐந்தில் ஒருபங்கு என்று பங்கிடும் பின்னங்களையும் பயன்படுத்திவந்தனர். ஐந்தில் ஒன்று எனத் தமிழர் பயன்படுத்திய முறை இக்காலத்தில் பத்தில் ஒரு பங்கு என்று கொண்டு உலகமெல்லாம் பயன்படுத்துகிறது.

Tamils used the fraction-numerals dividing by two and by two … .
They also used decimal system.
A note to use in is given below in PDF form.

Tuesday, 13 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 36

துன்பம் இன்பமாக அமையும்

அவன் அழவில்லை இவள் அழுகிறாள்

அவன் இளமை மாறாதவன்,
வளமை குறையாதவன்,

தன் தகைமையிலிருந்து நழுவாதவன்,
சும்மாக் கிடக்கும் ஊரில் இப்படி மாய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதனை நன்கு உணர்ந்தவன்.

இந்நிகழ்வுகளை வெறுக்காமல் இவளைப் போற்றுவான்.
மலரை அடிக்கும் மழைநீர் போன்றவை அவை என்று எண்ணிக்கொள்வான்.

அவன் அப்படி, இவள் எப்படி?

இவளது கண்ணில் ஈரம்,
பெருகிய மதமதப்பு.
அது மழையாக மாறியது.
இவள் மார்பகத்தில் அரிக்கும் பனியாகிப் பொழிந்தது.

வலையில் பட்ட மயில்போல் மேனியழகு குன்றி வதங்குகிறாள்.
நினைக்கும் போதெல்லாம் திரும்மத் திரும்ப அழுகிறாள்.


He didn’t tear, but she does.
He is young and rich and worries less in character.
He will take the disasters as rain dashing the flowers.
In total he is a gentle man.

But, what is her position?
She is crying as a peacock caught in net. 

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின்               
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர்               245
மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி,         
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா   
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்;          
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும்
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய்,      250
நினைத்தொறும் கலுழுமால், இவளே கங்குல்,       

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


Monday, 6 April 2015

துறவு வகை (தொல்காப்பியம்)

தொல்காப்பியர் சொல்கிறார்
தமிழர் வாழ்வியலில் துறவுநெறி எது, யார் எப்போது மேற்கொள்வர் என்பது பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
கிழவனும் கிழத்தியும் (உடலுறவு கொள்ள உரிமை பூண்டவளும் உரிமை பூண்டவளும்) நன்கு வாழ்ந்து காம இன்பம் துய்ப்பர். அந்தத் துய்ப்பு ஒரு கலத்தில் நிறைவு பெற்று இறுதி நிலைக்கு வந்துவிடும். அப்போதும் அவர்கள் தமக்குத் துணையாக இருக்கும் மக்களோடு சேர்ந்தே வாழ்வர். இல்லற வாழ்வு நடத்தும் சுற்றத்தாரோடு வாழ்வர். தம் பட்டறிவால் கண்ட சிறந்த வாழ்க்கைநெறி இன்னது என்பதைப் பயிற்றுவித்துக்கொண்டே வாழ்வர்.
இதற்கு இறத்தல் (இறந்த ஓழுக்கம்) என்று பெயர்.
நூற்பா
காமம் சான்ற கடைக்கோட் காலை,
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி,
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம் – பொருளியல் 190, கற்பியல்)


Friday, 6 March 2015

தொன்ம நாகரிகம், தமிழ்நாடும் சிந்துவெளியும்


இந்திய வரலாறு தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படவேண்டும் என்பதற்கான சான்றுகளில் ஒன்று.


Thursday, 26 February 2015

ஏர் உழவு plowing

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை. – திருக்குறள் 1036

உழுபவரின் உழவு-ஒழுக்கப் பணி மடங்கி நின்றுவிடுமேயானால் நம்மால் தவிர்க்க முடியாத பசியாசைக்கு உணவும், எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்று சொல்லும் துறவிகளுக்கு உணவும் கிடைக்காமல் மக்களின் வாழ்வு நிலைப்பாடு இல்லாமல் போய்விடும். (புலால் உணவை மறுத்தலால் இவ்வாறு கூறினார்.)

உலகில் எங்கெங்கே எத்தகைய ஏர் (கலப்பை) கொண்டு உழுதனர் என்பதைக் காட்டும் சில படங்கள்.
ஒட்டகம் கட்டி உழுதல்

எகிப்து நாட்டில் எருது கட்டி உழுதல்
எகிப்து நாட்டில் குதிரை கட்டி உழுதல்
உரோமானியர் எருது கட்டி உழுதல்
ஏர் (கலப்பை) வகைகள்
எருது கட்டி உழுதல்
இருகை மேழி
மேலே சக்கரக் கலப்பையால் இருவர் உழுதல்
கீழை விதைத்த பின் பரம்பு அடித்தல் 
இந்தியக் கலப்பை 
சக்கரக் கலப்பையில் ஒற்றைக் குதிரை கட்டி உழுதல்
ஒருவர் எருதினை ஓட்ட ஒருவர் உழுதல்
நான்கு எருது இழுக்கும் சக்கரக் கலப்பை உழவு
மேழியில் குறுக்குக் கைப்பிடி
கட்டுப்போட்ட கலப்பைத்தடி
எருதோட்டும் நீண்ட கோல்
இரட்டைக் குதிரை இழுக்கும் ஏர் உழவு
நன்செய் உழவு
ஒற்றை எருமை உழுகலப்பை


Tuesday, 24 February 2015

இறந்து வாழ்தல்


முதுமையில் இல்லத்தில் ஏனையோருக்கு வழிகாட்டியாய் வாழ்தலைத் தொல்காப்பியம் இறத்தல் என்று குறிப்பிடுகிறது.
  • கணவனும் மனைவியும் இறந்து வாழ்வர்.
  • அறம் செய்யும் சுற்றத்தாரோடு வாழ்வர்.
  • தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் மக்களோடு பின்னிப் பிணைந்துகொண்டு வாழ்வர்.
  • காம உணர்வு நிறைவு பெற்றிருக்கும் வாழ்க்கையின் கடைசிக் கோட்பாட்டுக் காலத்தில் வாழ்வர்.
  • சிறந்த நெறிகளைத் தான் வாழ்ந்துகாட்டும் நெறியால் பயிற்றுவித்துக்கொண்டு வாழ்வர்.
இப்படி வாழ்வதுதான் இறந்துவாழும் தமிழ்நெறி.
    
காமம் சான்ற கடைக்கோட் காலை,
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி,
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம் 3-190 கற்பியல்)


Tuesday, 24 June 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 63Context
He, the hero reveals his wavering mind to earn outside the native place.     
Words
You my mind! Thinking that wealth-less people could not offer other and could not enjoy the life, you decided to earn wealth apart from your native place. If you go there would your lover accompanies with you or fetch me alone? (Both money and lover are important. But one is possible, not two.)     
This is a poem by UGAAIKKUDI KIZAAR

63
பாலை

''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்'' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே!

உகாய்க்குடி கிழார்

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது

நெஞ்சே!
பொருள் இல்லாதவர் வழங்கமுடியாது; வாழ்க்கையைத் துய்க்கமுடியாது.
இதனை எண்ணிப் பொருள் சேர்க்க ஊக்கம் கொண்டுள்ளாய்.
பொருள் செய்யச் செல்லும்போது உன்னவளும் வருவாளா?
என்னை மட்டும் கொண்டுசெல்வா?

Friday, 13 June 2014

Kurunthogai குறுந்தொகை 49

Context
He returns after enjoying with a concubine.
His wife says these words in her bed with him. 
Words
You are a man of literal tract with flowers of MUNDAGAM that seems like red peal resembling squirrel’s teeth.  
You only are my husband and I only shall be your hearty wife not only in this life but also in my next life what it may your intimate behavior is at present.

A poem by AMMUVANAR

49
நெய்தல்

தலைவி தலைவனுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

சேர்ப்ப!
முண்டகப் பூவின் மணிநிறம் போன்று தோன்றும் கருநிறக் கடல் சார்ந்த சேர்ப்புநிலத் தலைவனே!
முண்டகப் பூ அணில் பல் போன்ற தாது மொட்டுகள் கொண்டதுமுண்டகப் பூ பூத்திருக்கும் சேர்ப்ப!
இப்பிறப்பில் மட்டுமல்லாமல் மறுபிறப்பிலும் நீயே எனக்குக் கணவனாக அமையவேண்டும். நானே உன் நெஞ்சுக்கு விருந்தளிப்பவளாக அமையவேண்டும்.

பாடல்

அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

அம்மூவனார் பாட்டு

அவன் முண்டக மலர் கொட்டிக்கிடக்கும் நெய்தல்நிலத் தலைவன்
முண்டக மலர் அணில் பல் போல் இருக்கும்
தமிழ்ப்பெண் நெஞ்சத்தின் தகைமைக் காட்சி

அவள் அவனிடம் வேண்டுகிறாள்

Thursday, 12 June 2014

Kurunthogai குறுந்தொகை 48

Context
Her friend-maid says these words.
Her lady enjoys delight for a short time. But she cries for a long time while he (her lover) was away from her.  
They said these words to her lady’s lover being present to meet her.
Words
PAVAI is a doll. It was made of fallen flowers with clay. OORAI is a game. Girls with their playmates play this game early in the morning in snow drops.
Once they are playing, the playmates asked their Lady not to cry. If she cries her PAVAI doll will spoil. But the lady didn’t care their words.
(He is with her in the evening. But in the morning who will console her?)
(They inform him to be always with her.)

A poem by POONGKANUTHIRAIYAR
This poets name would have been derived from his usage in one of his poem

48
பாலை

விளையாட்டுத் தோழிமார் தலைவிக்கு ஆறுதல் கூறல்

தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ‘ஓரை’ விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர். அவர்களோடு சேர்ந்து விளையாடிய தலைவி அழுதுகொண்டிருந்தாள். “நீ அழுதால் பாவை வருந்தும், ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். அதனைக் கேட்ட பின்னரும் தலைவி அழுதுகொண்டே இருந்தாள்.
இப்படி அழும் தலைவியின் நெற்றியில் பசப்புநோய். (பசப்புநோய் என்பது உடலில் ஊரும் பசபசப்பு. காம உணர்வு ஊர்ந்துகொண்டே இருத்தல்). இது நசையாகு பண்பு. இந்தப் பசப்பு நீங்க அவளுக்கு ஒரு தேவை. அந்தச் சொல் அவளது காதலனின் சொல். காதலர்களுக்கு இந்தச் சொல் இசையாது கொல்லோ? (கிடைக்காதோ?)

பாடல்

''தாதின் செய்த தண் பனிப் பாவை 
காலை வருந்தும் கையாறு ஓம்பு'' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

பூங்கணுத்திரையார் பாடல்

பூந்தாது சேர்த்து ஒரு பொம்மை செய்து ‘பாவை’ செய்து
‘ஓரை’ விளையாடுவது தோழிமார் வழக்கம்
இன்ன பண்பு – இனிக்கும் மகிழ்ச்சிப் பண்பு
இனை - அழுகை

பாவை
பாடல் கூறுவது
பூந்தாது கொண்டு செய்து
விளையாடும் பாவை

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி