Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

Friday, 15 November 2019

இராவணன் - கல்லோவியம் - stone curve

இராவணன் கதை
சிவனிடம் அருள் பெற வேண்டி இராவணன்
நீண்ட காலம் தவம் செய்தான்
சிவன் கண்டுகொள்ள வில்லை.
இராவணன் சினந்தான்
சிவன் இருக்கும் கயிலாய மலையைத் தூக்கினான்
இதுதான் படம் 


இராவணனுக்கு 10 தலை \ 20 கை
சிவன் தன் கால் கட்டைவிரலால் மலையை அழுத்தினான்
நசுக்கப்பட்ட இராவணன் 
தன் தலைகளில் ஒன்றைக் கிள்ளி
தன் கைகளில் ஒன்றைக் கிள்ளி அதில் மாட்டி 
மற்றொரு கையை முரித்து அதிலிருந்த நரம்புகளைக் கட்டி
யாழ் செய்துகொண்டு சிவனைப் போற்றிப் பண்ணிசைத்தான். 
கேட்டு மகிழ்ந்த சிவன் மனமிரங்கி
இராவணனுக்கு அருள் பாலித்தான்

பாணன்+விறலி musical dance

இசை முழக்கும் பாணன்
இசைக்கேற்ப ஆடும் விறலி


musical dance  

ஐயுடல் ஒருதலை - five girls with one head

கல்லில் கலைத்திறன் 

புடைப்போவியம் 

ஐந்து பெண்களுக்கு ஒரே தலை 


five girls with one head 

Wednesday, 13 November 2019

படம் picture

திருத்தும் தண்டனை

பெரியவர் கழுத்தில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது.

இது
காலில் கழற்ற முடியாத சங்கிலியை மாட்டி,
சங்கிலியின்  மறுமுனையில்
சுமந்து செல்லக்கூடிய தொண்டுகட்டை ஒன்றை மாட்டும்
தண்டனை போற்றது இது.

என் பள்ளித்தோழன் ஒருவன் அரங்கசாமி.
அவன் சரியாகப் பள்ளிக்கு வரமாட்டான்.
தொழும்பலாக ஓடிவிடுவான்.

அவ்வாறு அவன் ஓடாமல் இருக்க
அவன் அப்பா பெருமாள் ரெட்டியார்
அவனுக்குத் தொண்டுக்கட்டை விலங்குப் போட்டிருந்தார்.
அவன் பள்ளிக்குத் தொண்டுக்கட்டை விலங்கைத்
தோளில் தூக்கிக்கொண்டு வருவான்.
பக்கத்தில் வைத்துக்கொண்டு பாடம் படிப்பான். எழுதுவான்.

இதுபோல்
படத்தில் காணப்படுபவர் செய்த ஏதோ ஒரு குற்றத்துக்காக
அவரைத் திருத்துவதற்காக
அவர் கழுத்தில் இந்த விலங்கு மாட்டப்பட்டது ஆகலாம்.

பின்னால் நிற்பவன் ஆங்கில அரசுக் காவலாளி போல் தெரிகிறது.
அவரது உறவினர் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

பனைமட்டை தூக்கிக்கொண்டு வரும் கோல்


நான்கு மூலைகளிலும் பனைமட்டைகளைக் கோலில் குத்தித் தூக்கிக்கொண்டு வரும் கோல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பனைமட்டைக் கருக்கு தோளைப் கிழிக்காமல் இருக்க
சுமக்கும் அளவு பல பனைமட்டைகளைக் குத்தித் தூக்கிவருவது வழக்கம்.

படம் - நன்றி - N D Logasundaram



Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி