Showing posts with label நினைவலை. Show all posts
Showing posts with label நினைவலை. Show all posts

Thursday, 16 January 2020

மு. வ. பண்பு Character of Mu. Va. 0

மு. வ. அருட்கொடை


கைப்பை
நாற்காலி
கனிச்சாறு
ஆள் பாதி ஆடை பாதி
திருவுளம்
பதிப்பாசிரியர் பணி

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


மு. வ. பண்பு Character of Mu. Va. 6

பதிப்பாசிரியர் (Editor) பணி


காசியில் சில மாதங்கள் பணியாற்றினேன்.
கோடை விடுமுறை.
செங்காட்டுப்பட்டி இல்லம் திரும்பினேன்.

மீண்டும் காசி சென்று பணியாற்றுவதில் எனக்கு வாழ்க்கைச் சூழலில் சிக்கல்.

அதனால் மதுரைப் பல்கலைக் கழகம் சென்று மு. வ. அவர்களைப் பார்த்தேன்.
நிலைமையை விளக்கி, உதவுமாறு வேண்டினேன்.
காசிப் பணியை விட்டுவிட்டு வருவதாக எழுதித் தரும்படிக் கேட்டார்.
எழுதிக் கொடுத்தேன்.

அவர் பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பினார். 

மீண்டும் தமிழாசிரியர் பணியில் சேர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அவர் சொன்னபடி பணி ஏற்றேன்.
திருச்சி மாவட்டம் ஆண்டிப்பட்டிக் கோட்டை, பள்ளியில் பணி.

அக்காலத்தில் மீண்டும் காசியிலிருந்து தந்தி.
உடனே பல்கலைக்கழகப் பணியில் சேருமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

என் குடும்பத்துடன் (மனைவி, 5 பெண்மக்கள்) சமையல் பாத்திரங்களை மூட்டை கட்டிக்கொண்டு சென்றேன்.
பணியில் சேர்ந்தேன்.

திருப்பனந்தாள் காசிமட அறையில் தங்கினோம்.
அந்த அறையில் சமைத்து உண்டோம்.

குடும்பத்துடன் கங்கையில் கங்கை ஆற்றில் குளியல்.
காசி விசுவநாதரை, ஒவ்வொருவரும் கையால் தொட்டுத் தொழுதல்
ஆண்மகன் பேறு  வேண்டல்.
என் மனைவி கருத்துப்படி அது சென்னை வந்த பின்னர் நிறைவேறியது.
மகன் பிறந்தான்.
"அன்பே சிவம்"
அன்பன் - என்று அவனுக்குப் பெயர் சூட்டினோம்.

பணியில் சேர்ந்து 3-ஆம் ஒரு கடிதம்.
சென்னை வரலாற்றுக் குழுப் பணியில் சேறுமாறு குறிப்பிட்டிருந்த ஆணை.

விரும்பியது கைகூடியது.

15 நாள் காசியில் பணியாற்றிய பின் அந்த வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு, சென்னை திரும்பி, கிட்டிய வாய்பினைப் பயன்படுத்திக்கொண்டேன்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


காசியில் in Banaras

காசியில் காவி உடை


மு. வ. திருவுளம் பெற்ற அடியேன் காசி வந்தேன்.
Banaras Hindu University - Lecturer in Tamil பணி ஏற்றேன்.

காசியிலிருந்த திருப்பனந்தாள் மடத்து வாடகை அறை ஒன்றில் தங்கினேன்.
அருகில் ஓடிய கங்கை ஆற்றில் நாள்தோறும் குளியல்.

மிதிவண்டியில் சென்று பல்கலைக் கழகப் பணி.
தமிழ் நாடு அரசு தரும் மானியத் தொகை பெற்றுக்கொண்டு மாலையில் இந்தி மக்களுக்குத் தமிழ்ப் பாடம்

காலை, மாலை - மலையாளி ஒருவர் விடுதியில் உணவு.
நண்பகல் பல்கலைக் கழக ‘மெஸ்’ உணவு.

மாலையில் சந்துப் பாதையில் நடந்து காசி விசுவநாதர் கோயில் வழிபாடு.
மூல லிங்கத்திற்கு நீரூற்றிப் பூ போட்டுத் தொட்டு வணங்கும்போது ஒரு புத்துணர்வு.

தமிழ் நாட்டில் இடைத்தரகர் பூசை.
வெறுப்பு.
தி. க. எண்ணம்.

நாட்கள் உருண்டோடின. 

விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் சந்து வழியில் ஆங்காங்கே காளி கோயில்கள்
அவற்றின் பூசாரிகள் என்னை "மதராசி" (மெட்ராஸ் தமிழன்) என்று தெரிந்துகொண்டு, தங்கள் தெய்வத்துக்குக் கணிசமான காணிக்கை போட்டால்தான் மேலே செல்ல விடுவர்.

இதனால் பெரிதும் இன்னல்.

நான் தங்கியிருந்த அறைக்கு மூன்றாவது அறையில் காவி தரித்த துறவி ஒருவர் தங்கி வாழ்ந்து வந்தார்.

அவரது அருளைப் பெற்று அவர் அளித்த காவி ஆடையை அணிந்துகொண்டேன்.

கோயிலுக்குச் சென்றேன்.
காணிக்கை கேட்டவர்கள் கையெடுத்துக் கும்பிட்டனர்.

பல்கலைக் கழகம் செல்லும்போது "கோட்டு, சூட்டு, டை"
கோயிலுக்குச் செல்லும்போது காவி உடை
போலி வாழ்க்கை

இதனால், மனம் உருத்திக்கொண்டே இழுந்தது.

படம் வேறொருவர்
இப்படிப்
போலி உடையில்
பொதுவன் 


மு. வ. பண்பு Character of Mu. Va. 5

திருவுளம்


1971

அடியன் என் முன்னேற்றப் பாதையைச் சுருக்கமாகச் சுட்டி, ஆற்றுப்படுத்துமாறு வேண்டி மு.வ. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

கிடைத்தவுடன் மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து  அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வந்தது.

"தங்கள் கடிதத்தை பாதுகாப்பாக வைத்துள்ளேன். சென்னையில் வரலாறு எழுதும் குழுவில் பணி. பயன்படுத்திக் கொள்வேன். பொறுத்திருங்கள்"

இதுதான் அந்தக் கடிதத்தில்  இருந்தது. நன்றி தெரிவித்து விட்டுக் காத்திருந்தேன்.

Banaras Hindu University, Tectueror in Tamil. Wanted. Apply in plain paper - என்னும் விளம்பரத்தை The Hindu நாளிதழில் புகழூரில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது பார்த்தேன். விண்ணப்பித்தேன்.

Join immediately என்று தந்தி வந்தது.

எனக்குக் குழப்பம். மு.வ.ஐக் கண்டு கேட்டுவிடுவது - என்று எண்ணிக்கொண்டு மதுரைப் பல்கலைக் கழகம் சென்றேன். அவர் சென்னை இல்லத்துக்குச் சென்றிருப்பதை அறிந்தேன்.

சென்னை வந்தேன். அவரது இல்லத்துக்குச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததில்லை. நான் அவரது படத்தைப் பார்த்திருந்தேன்.

உரையாடல்

ஐயா, நான் செங்கைப் பொதுவன் - என்றேன்.
அப்படியா, நான்தான் உங்களுக்கு வாக்களித்திருக்கிறேனே. பின் ஏன் வந்தீர்கள் - என்றார்

இதனைப் பாருங்கள் என்று கூறிக்கொண்டே அவர் கையில் தந்தியைக் கொடுத்தேன்.

படித்தார்.

இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் - என்றார்.
தாங்கள் சொல்கிறபடி செய்யப் போகிறேன் - என்றேன்

நான் எதுவும் சொல்லமாட்டேன்.
நான் தரப்போகும் போகும் பணியில் ஏதாவது இன்னல் விளைந்தால், இவர் கெடுத்தார். காசியில் சேர்ந்திருக்கலாம் - என்று நினைப்பாய்
காசிக்குச் செல் என்றால், அங்குப் பணியாற்றும்போது இன்னல் வந்தால், இவர் கெடுத்தார் - என்று நினைப்பாய்
எனவே நான் எதும் சொல்லமாட்டேன் - என்றார்

எனக்கு இப்படி இரட்டை வாய்ப்புகள் கிடைக்கும்போது திருவுளச் சீட்டு எழுதிப் போட்டு முடிவெடுப்பேன்.
நீயும் அப்படிச் செய் - என்றார்.

நான் அவரை விடவில்லை.
தங்கள் வாக்கே எனக்குத் திருவுளம்.
அதில் நன்மை விளைந்தால் அது என் நல்லூழ்
தீமை விளைந்தால் அது என் போகூழ் - என்று திட்டமாகக் கூறிவிட்டேன்.

அவர் வேறு வழியின்றி,
இப்போது பல்கலைக் கழகம் சென்று பணியாற்றுக.
ஏதாவது நேர்ந்தால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் - என்றார்.

அடியேனும் சென்று பல்கலைக் கழகப் பணியை ஒப்புக்கொண்டேன்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


பொதுவன் கல்வி Podhuvan's Education

பொதுவன் கல்வி


1950 - எட்டாம் வகுப்பு தேர்ச்சி - E.S.L.C.
1950 - பலசரக்குக் கடையில் வேலையாள்
1951 - 63 - வேளாண்மை
1954 - 56 - ஆசிரியர் பயிற்சி

எட்டாம் வகுப்பு படித்த கல்வித் தகுதியைக் கொண்டு இரண்டு ஆண்டுகள் திருச்சி R. C. ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் Higher Grade பயின்று தேர்ச்சி பெற்று 1956 முதல் தொடக்கப் பள்ளியில் ஆசிரியனாகப் பணியாற்றி வந்தேன்.

மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருந்தால், பள்ளியிலோ, கல்லூரியிலோ பயிலாமல், தானாகவே பயின்று மேல்நிலைத் தேர்வுகளை எழுதலாம் என்பது அப்போது அரசு அளித்திருந்த சலுகை.

1958 - ஏப்ரல் - வித்துவான் புகுமுகத் தேர்வு - தேர்ச்சி (எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் எல்லாரும் எழுதலாம்)
1959 - ஏப்ரல்  S.S.L.C தேர்ச்சி
1959 - September - Secondary Grade Teachers Certificate தேர்ச்சி
1960 - March - P.U.C. (part 1 English & part 2  Tamil) தேர்ச்சி
1961 - வித்துவான் முதனிலை தேர்ச்சி
1963 - வித்துவான் முதுநிலை தேர்ச்சி (2 ஆண்டு இடைவளி வேண்டும் - விதி)

1963 - உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியன்

1964 - P.U.C. 3d part - தேர்ச்சி (விதிப்படி 3 ஆண்டு இடைவெளி விட்டு)
1967 - பகுதி 2 - தமிழ் & பகுதி 3 - தேர்ச்சி
1968 - பகுதி 1 - ஆங்கிலம் தேர்ச்சி (இரண்டாண்டு இடைவெளி - விதி)
1970 March - M.A. தேர்ச்சி
1970 Sep to 5 month - Short-term B.T. (Govt. Teachers' College, புதுக்கோட்டை) - தேர்ச்சி

1971 வாரணாசி இந்து பல்கலைக் கழகம், தமிழ் விரிவுரையாளர் பணி - விருப்ப விலகல்
1971 ஆகஸ்டு முதல் - சென்னை - குறளகம் - தமிழ் வளரச்சி இயக்ககம் - தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு - பதிப்பாசிரியர் பணி - டாக்டர் மு.வ. தலைவர்.

1972 - Part-time M. Ed. Degree course study - Saidapet Teachers' College - தேர்ச்சி

1982 - Ph. D. Degree - part-time study - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் - தேர்ச்சி

1984 - பணி ஓய்வு

வேளாண்மை my agricultural life

அடியேன்

உழவுப் பணி


1950 - 63 (அகவை 14-17)

பாசன நிலம்

 • சொந்த நிலம் 
 • 2 எருது 
 • ஏற்றம் இறைத்து நீர் பாய்ச்சினேன்
 • தனி ஏர் உழவு 
 • நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, வேர்க்கடலை, கரும்பு - பயிரிடல்  
 • தினை, காய்கறிகள்- ஊடுபயிர் 
 • கீரை, கருனைக்கிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்கு, சர்க்கரை-வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள் - சில பாத்திகளில் வீட்டுப்பயனுக்குப் பயிரிட்டேன் 
உடன் பணி - விருப்பப் பணி

 • என் கிணறு வெட்டும் ஒட்டர்களுடன் சேர்ந்து கிணறு வெட்டினேன்
 • அவர்கள்ளுடன் சேர்ந்து என் வயல்களை மேடுபள்ளம் திருத்தினேன்
அமைஞ்சுப் பணி 
 • பிறருக்கு உதவ நீர் இறைத்தேன்
 • வயல் வரப்பு ஓரம் வெட்டினேன்
 • பிறர் வயல்களில் என் ஏரைப் பூட்டி அவர்களுடன் பின்-ஏர் பூட்டி உழுதேன்
 • என் மாமன் வளர்த்த வெள்ளாடு மேய்த்தேன்
பிழைப்புப் பணி 
 • பவள மலையில் தழை வெட்டிக் கொணர்ந்து நன்செய் வயலில் பயிர்களுக்கு இடையே உரமாகப் போட்டு மிதித்தேன்
 • பச்சைமலை, பவளமலை ஊர்களுக்குச் சென்று அவ்வூர் மக்களிடம் ஏலம் எடுத்த புளிய மரத்தில் ஏறிக் கூட்டாகப் புளி உதிர்த்து, முதலீட்டுக்குக் கிடைத்த  பங்குப் புளியை வாங்கிக்கண்டு மலையிலிந்து இறங்கி வந்தேன் 
 • வீட்டுப் பயனுக்காக மலையில் பலாப்பழம் வாங்கி தலையில் சுமந்துகொண்டு இறங்கி வீடு திரும்பினேன். 
இளமையில் பள்ளியில் படித்தபோது 
 • ஊர்க்காலி பசுமாடுகள் மேய்ந்த பின்னர் மாலையில் வீடு திரும்பும்போது, நெடுந்தொலைவிலிருந்தே (சுமார் ஒன்றரை கிலோமிட்டர்) அவற்றைப் பின் தொடர்ந்து என் நண்பர்களுடன் வந்து அவை போடும் சாணத்தைப் அள்ளி என் தட்டில் போட்டுக்கொண்டு வந்து எங்கள் குப்பையில் கொட்டினேன். 
எல்லாம் வறுமையால் பட்ட வாதை. 
எதைச் சொல்வது 
எதை விடுவது 

இப்படிப்பட்ட உழைப்பு தந்த ஊக்கம் என்னைக் கல்வியில் கடைத்தேற்றியது. Wednesday, 15 January 2020

மு. வ. பண்பு Character of Mu. Va. 4

ஆள்பாதி ஆடைபாதி
மு.வ. பார்வையில் இது இல்லை
1973

வரலாற்றுக் குழுக் கூட்டத்துக்கு வரும்போதெல்லாம் கதர்-வேட்டி, கதர்-சட்டை, கதர்-துண்டு அணிந்துகொண்டு எளிமையாக வருவார்.

அடியேன் வாரணாசி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பெர்ருமிதத்தோடு கோட்டு-சூட்டு அணிந்துகொண்டு செல்வேன்.

மு.வ. மகனுக்குத் திருமணம்.
திருமண அழைப்பிதழ் ஒன்று அஞ்சலில் அனுப்பியிருந்தார்
நேரில் குறளகம் வந்து மற்றொன்றும் கொடுத்தார்.

அவரது கதராடைத் தோற்றம் என் கண்முன் நின்றது
சென்னை இராச ராசேஸ்வரி மண்டபத்தில் திருமணம்.

அடியேன் வேட்டி, சட்டை, துண்டு அணிந்துகொண்டு திருமணத்துக்குச் சென்றேன்.
அவர் கோட்டு-சூட்டு அணிந்திருந்தார்.
அடியேனுக்குக் கூச்சமாக இருந்தது.
அவரோ, வெளியில் தோரண வாயிலிலிருந்து அடியேனை உள்ளே அழைத்துச் சென்றார்.
தன் மகன், மணமகனிடம் பதிப்பாசிரியர் என்று பெருமிதத்துடன் கூறி அறிமுகப்படுத்தினார்.

அவரது பண்பை எண்ணி இன்றும் வியந்துகொண்டிருக்கிறேன்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


மு. வ. பண்பு Character of Mu. Va. 3

கனிச்சாறு
1973

பனங்கற்கண்டு போட்ட திராட்சைப் பழச்சாறு அப்போது குறளகத்தில் விற்கப்பட்டது.

ஒருநாள் வரலாற்றுக் குழுக்கேட்டம் முடிந்து மு.வ. அடியேன் இருவரும் தூக்கி வழியாக இறங்கி வந்தோம்.

பனங்கற்கண்டு போட்ட திராட்சைப் பழச்சாறு - பற்றி அவரிடம் கூறிப் பருகலாம் - என்று கூறினேன்.

ஒப்புக்கொண்டார். இரண்டு குவளை வாங்கினேன். இருவரும் பருகினோம். சாற்றுக்குக் காசை எடுத்துக் கொடுத்தேன். மு.வ. தடுத்துவிட்டார்.

தன் பையிலிருந்து காசை எடுத்து அவர் கொடுத்தார்.

 • நான்தானே கேட்டு வாங்கினேன். நான்தானே காசு கொடுக்க வேண்டும்  - என்றேன்.
 • இல்லை இல்லை. வெளியிடத்தில் இருவர் சேர்ந்து உண்ணும்போது அவரவர் உண்டதற்கு அவரவரே கொடுக்க வேண்டும். அல்லது வருவாய்  அதிகம் உள்ளவர் இருவருக்கும் கொடுக்க வேண்டும். இப்போது நீ கொடுக்கக் கூடாது. - என்றார் 
இப்படி ஒரு பண்பாடு கொண்டு வாழ்ந்து காட்டிய தமிழர் அவர்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


மு. வ. பண்பு Character of Mu. Va. 2

இருப்பிட நாற்காலி
1974

அலுவலக நாற்காலிகளில் அமர்வதில் ஒருவகையான மரபு கையாளப்படுகிறது.

பள்ளிக்கு ஆய்வாளர் தணிக்கை செய்ய வந்தால் தலைமையாசிரியர் தன் இருக்கையை அவருக்குத் தந்துவிட்டு அவருக்கு எதிரில் இருக்கை இடச்செய்து அமர்ந்துகொள்வார்.

வரலாற்றுக் குழுக்கூட்டம் நடைபெறும்போதெல்லாம் குழுத்தலைவர் மு.வ. இயக்குநர் இருக்கையில் அமர, இயக்குநர், குழுச்செயலாளர் எதிர் இருக்கைக்கு வந்துவிடுவார்.

இது முறைமை \ மரபு \ protocol

தற்செயலாகக் குறளகம் வந்த மு.வ. திடீரென எங்கள் அறைக்கு வந்தார்.
அடியேனும், மற்றொரு பதிப்பாசிரியர் ஒய். சுப்பராயலுவும் இணையான நாற்காலிகளில் அமர்ந்து  ஏதோ குறிப்பு எழுதிக்கொண்டிருந்தோம்.

தலைவரைக் கண்டதும்  எழுந்து நின்றோம்.
அவர் எங்களை அமரும்படிக் கையமர்த்தினார்.
நாங்கள் அமரவில்லை
அவரை எங்கள் நாற்காலியில் அமரும்படி வேண்டுனோம்.

அவர் எங்களுக்கு இந்த கையில்லா நாற்காலியில் (stool) அமர்ந்துகொண்டு எங்களை எங்கள் இருக்கையில் அமரச் சொல்லிவிட்டுப் ஏறத்தாழ 15 நிமிடம் பணி முன்னேற்றம் பற்றிக் கேட்டறிந்தார்.

இப்படிச் செய்ய வேண்டும் என்று எதுவும் கூறவில்லை.
அது எங்கள் விருப்பமாம்.
செய்ய வேண்டியது இன்னது எனக் கூறுவதுதான் அவர் பணியாம்.

இது அவர் பெருந்தன்மை

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்


அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்

மு. வ. பண்பு Character of Mu. Va. 1

கைப்பை
1972

வரலாற்றுக் குழுக் கூட்டம் சென்னைக் குறளகத்தில் முதல் மாடி தமிழ் வளர்ச்சி இயக்ககம் இயக்குநர் அறையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தது.

அடியேன் மு.வ. அவர்களின் தோல்-கைப்பையை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியில் வந்துவிட்டேன்.

என் கையிலிருந்த பையை அவர் வாங்கிக்கொண்டார்.
காரில் ஏறும் வரையில் எடுத்து வருகிறேன் - என்று வேண்டினேன்.
அவர் ஒப்பவில்லை.

அவரவர் சுமையை அவரவர்தான் சுமக்க வேண்டும்
என்று சொல்லிக்கொண்டே வற்புறுத்தி வாங்கிக்கொண்டார்

தமிழர் மாண்பு

தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டு வரலாறு எழுதும் குழு 
டாக்டர் மு. வரதராசனார் தலைவர் 
அப்போது இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
அடியேன் பொதுவன் வரலாற்றுக் குழுவின் பதிப்பாசிரியர்


Thursday, 26 February 2015

ஏர் உழவு plowing

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை. – திருக்குறள் 1036

உழுபவரின் உழவு-ஒழுக்கப் பணி மடங்கி நின்றுவிடுமேயானால் நம்மால் தவிர்க்க முடியாத பசியாசைக்கு உணவும், எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்று சொல்லும் துறவிகளுக்கு உணவும் கிடைக்காமல் மக்களின் வாழ்வு நிலைப்பாடு இல்லாமல் போய்விடும். (புலால் உணவை மறுத்தலால் இவ்வாறு கூறினார்.)

உலகில் எங்கெங்கே எத்தகைய ஏர் (கலப்பை) கொண்டு உழுதனர் என்பதைக் காட்டும் சில படங்கள்.
ஒட்டகம் கட்டி உழுதல்

எகிப்து நாட்டில் எருது கட்டி உழுதல்
எகிப்து நாட்டில் குதிரை கட்டி உழுதல்
உரோமானியர் எருது கட்டி உழுதல்
ஏர் (கலப்பை) வகைகள்
எருது கட்டி உழுதல்
இருகை மேழி
மேலே சக்கரக் கலப்பையால் இருவர் உழுதல்
கீழை விதைத்த பின் பரம்பு அடித்தல் 
இந்தியக் கலப்பை 
சக்கரக் கலப்பையில் ஒற்றைக் குதிரை கட்டி உழுதல்
ஒருவர் எருதினை ஓட்ட ஒருவர் உழுதல்
நான்கு எருது இழுக்கும் சக்கரக் கலப்பை உழவு
மேழியில் குறுக்குக் கைப்பிடி
கட்டுப்போட்ட கலப்பைத்தடி
எருதோட்டும் நீண்ட கோல்
இரட்டைக் குதிரை இழுக்கும் ஏர் உழவு
நன்செய் உழவு
ஒற்றை எருமை உழுகலப்பை


Sunday, 22 February 2015

ஏறு தழுவல் (பண்டைய முத்திரை)

படம் 1
சிந்துவெளி முத்திரை

படம் 2
சிந்துவெளி முத்திரை

கோழிச்சண்டை விளையாட்டு (கல்வேட்டு)கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய
அன்றைய தமிழ்ப் பிராமி எழுத்தில்
தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள
இன்றைய தமிழாக்கச் செய்தி

படம் 1
கோழிக்கால் வெட்டு

படம் 2
கீழ்ச்சேரிக் கோழி

Sunday, 14 December 2014

பழம் பொருள்கள்

காரைக்குடியை அடுத்த கோவிலூர்
நாட்டுக்கோட்டை நகரத்தார் மடம்

அருங்காட்சியகத்தில்
இருக்கும் பொருள்கள் இவை.

படங்கள் அளித்தவர் கல்வெட்டு வல்லுநர் சுப்பையா

1

2

3

4

5

6

7
8


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி