Showing posts with label நான்மணிக்கடிகை. Show all posts
Showing posts with label நான்மணிக்கடிகை. Show all posts

Thursday, 15 February 2018

நான்மணிக்கடிகை 105 NanManikKadigai 105


  1. அரிய செயல்களைச் செய்துகொண்டிருப்பவர் அதன்மீது வெறுப்பு கொள்ள மாட்டார்.
  2. அறச்செயலின்மீது காதல் கொண்டவர் அரிய செயல்களைச் செய்பவரைப் போலவே அறச்செயலின்மீது வெறுப்பு கொள்ளமாட்டார்.
  3. புகழ் வேண்டும் ஆண்கள் இனியவை தன்னை விட்டு நீங்கினால் அதற்காக இரக்கப்பட மாட்டார்.  
  4. அறிவு உள்ளவர் அன்பு காட்டத் தயங்க மாட்டார்.


முனியார், அரிய முயல்வார்; அவரின்
முனியார், அறம் காமுறுவார்; இனிய
இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு
உயங்கார், அறிவுஉடையார்.       4

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா - மிகைப்பாடல்
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 104 NanManikKadigai 104


  1. இனிய சொல் பேசுவதால் நட்பு உண்டாகும்.
  2. இனிப்பு இல்லாத கொடுஞ்சொல் பேசுவதால் பேசுபவரை வசை பாடும் மனம் பிறருக்கு உண்டாகும்.
  3. மென்மையாகப் பேசினால் பிறர் அருளும் மனம் தோன்றும்.
  4. பிறர் அருளும் இந்த மனம் வீடுபேறாக இருக்கும்.


இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.    3

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா - மிகைப்பாடல்
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 103 NanManikKadigai 103


  1. எல்லாம் அறிந்த ஒருவனும்
  2. யாதொன்றும் அறியாத ஒருவனும்
  3. குணமே இல்லாமல் குற்றமுள்ள ஒருவனும்
  4. மற்றவர்கள் அடங்கும்படிக் கற்ற ஒருவனும்

உலகில் இல்லை.

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியா தவனும் - ஒருவன்
குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்
கணனடங்கக் கற்றானும் இல். 2

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா - மிகைப்பாடல்
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 102 NanManikKadigai 102


  1. பிறரை வைதால் பகை உண்டாகும்.
  2. வணங்கினால் உறவினர் மிகுவர்.
  3. பொருளைக் கொடுத்தலால் இன்பம் உண்டாகும்.
  4. உளம் நெகிழ்ந்த அருளால் அறம் பெருகும். 


வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம்.            1

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா - மிகைப்பாடல்
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 101 NanManikKadigai 101


  1. மனைக்கு விளக்கு மனைவி.
  2. மனைவிக்கு விளக்கு அவள் பெற்ற மக்கள்.
  3. வீட்டுக்கு இனிய பிள்ளைகளுக்கு விளக்கு அவர்கள் பெற்றிருக்கும் கல்வி. 
  4. கல்விக்கு விளக்கு ஓதுவதும், உணர்ந்துகொள்வதும் ஆகும்.


மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-
தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,
ஓதின், புகழ் சால் உணர்வு.           111

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 100 NanManikKadigai 100


  1. வருத்துவதற்காகப் பிற உயிரினத்தை வளர்த்தலும் குற்றம்.
  2. புலாலை விலைக்கு வாங்கி உண்பதும் குற்றம்.
  3. சொல்லக்கூடாதவற்றைச் சொல்லுதலும் குற்றம்.
  4. உயிரினங்களைக் கொல்லுதலும் குற்றம்.


அலைப்பான், பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம்.             100

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 99 NanManikKadigai 99


  1. ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து வீணாகும்.
  2. இல்லத்து வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள்.
  3. முன் செய்த தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும்.
  4. உடல் வலிமை குறைந்தால் பகைவர் வெல்வர்.


ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து
வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத்
தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும்,
உரன் சிறிதுஆயின், பகை.             99

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 98 NanManikKadigai 98


  1. மருவிய சான்றோரை விட்டு விலகாமல் இருத்தல் எண்ணத் தகுந்ததாக இருக்கும்.
  2. பாதுகாக்காதவரோடு சேர்ந்திருத்தல் புண் போன்றதாகும்.
  3. நண்பர் இடித்துரைக்கும் சொல் யாழிசை போன்று இனிமை தரும்.
  4. பண்புள்ள மனைவி இல்லாத வீடு பாழ்நிலம் போன்றதாகும்.


எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை;
புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய
யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும்,
பண்பு உடையாள் இல்லா மனை.           98

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 97 NanManikKadigai 97


  1. அழுக்கு சேர்ந்தாலும் மணியின் பெருமை குறையாது.
  2. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும்.
  3. கீழ் மக்களிடம் பாசம் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.


மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்;
பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்;
பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை
மாசுடைமை காட்டிவிடும்.          97

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 96 NanManikKadigai 96


  1. பெண்டிர் முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை.
  2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை.
  3. கற்றானும் கல்லாதார் முன்பு பெருமையடைதல் இல்லை.
  4. அறிவிலார் முன்பு அறிஞர் பெருமையடைதல் இல்லை.


வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்;
சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்;
கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார்,
பேதையார், முன்னர்ப்படின்.       96

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


நான்மணிக்கடிகை 95 NanManikKadigai 95


  1. அன்பில்லாதவர் வாயில் பழிக்கும்படியான சொற்கள் தோன்றும்.
  2. கற்றவர் வாயில் வஞ்சனையான சொற்கள் தோன்றாது.
  3. சான்றோர் வாயில் தீய சொற்கள் தோன்றாது.
  4. கீழ்மக்கள் வாயில் கள்ளத்தனமாக மறைக்கின்ற சொற்கள் வெளிப்படும்.


வடுச் சொல் நயம் இல்லார் வாய்த் தோன்றும்; கற்றார் வாய்ச்
சாயினும் தோன்றா, கரப்புச் சொல்; தீய
பரப்புச் சொல் சான்றார்வாய்த் தோன்றா; கரப்புச் சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும்.                95

விளம்பி நாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை
யாப்புவெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக் கால நூல்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி