Showing posts with label தொல்காப்பியம். Show all posts
Showing posts with label தொல்காப்பியம். Show all posts

Saturday, 30 March 2019

தொல்காப்பியம் மரபியலில் இடைச்செருகல் interlude in Tolkappiyam 2-9


தொல்காப்பியம் மரபியலில் இடைச்செருகல்
மூலம் வேறு வண்ணத்தில்

தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
செய்திகள் எவ்வாறு தொகுக்கப்பட்டு நிரல் படுத்தப்பட்டுள்ளன என்பதும் காட்டப்படுள்ளது.

உயிரினங்களில் 6 அறிவுப் பாகுபாட்டைக் கண்ட  அறிவியல் களஞ்சியம்  தொல்காப்பியம்.

மொழியை அறிவியலாக்கிய நூல் தொல்காப்பியம்.

 • இதில் 4 வகை மனிதப் பிறவிப் பாகுபாடு நுழைந்தது எப்படி? 
 • பூணூல், கரகம், முக்கோல் போன்ற அணிகலன்கள் பற்றிய பேச்சு எதற்கு? 
 • சங்க இலக்கியத்தில் யாண்டும் காணப்படாத ஓதல் பிரிவு எங்கிருந்து வந்தது? 
 • அந்தணன் தூது சென்ற செய்தி கூறும் சங்கப் பாடல் இல்லை
எனவே இந்தச் செய்திகளைக் கூறும் நூற்பாக்கள் பிற்காலத்தவரால் வேண்டுமென்றே எழுதிச் சேர்க்கப்பட்டது என்பது வெளிப்படை.

 • வைசிகன், கரகம், ஞாபகம், - முதலான சொற்களின் ஆட்சியை இந்தப் பகுதியைத் தவிர வேறு எந்தச் சங்கப் பாடலிலும் காண முடியவில்லை.  

நூல், சூத்திரம் பற்றிச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளது. இந்த இயலிலும் கூறப்படுகிறது. முதல்-நூல், சார்பு-நூல் பற்றி இந்த இயல் கூறுகிறது.

 • சங்க இலக்கியத்தில் சார்பு நூலுக்குஇடமில்லை. 
தெளிவின்றிக் காணப்படும் சிதைவு, உத்தி பற்றிய நூற்ப்பாக்களும் இடைச்செருகல்களே

விலங்கினம் 

ஆண், பெண், இளமைப் பெயர்கள்

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் \ பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் \ கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று \ ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே. 1

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் \ சேவும் சேவலும் இரலையும் கலையும் \ மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் \ போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் \ யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் \ மூடும் நாகும் கடமையும் அளகும் \ மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் \ அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே. 3

அவற்றுள், \ பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை. 4

தவழ்பவைதாமும் அவற்று ஓரன்ன. 5

மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு \ ஆங்கு அவை நான்கும் குட்டிக்கு உரிய. 6

பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை. 7

நாயே பன்றி புலி முயல் நான்கும் \ ஆயும் காலை குருளை என்ப. 8

நரியும் அற்றே நாடினர் கொளினே. 9

குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார். 10

பிள்ளைப் பெயரும் பிழைப்பு ஆண்டு இல்லை \ கொள்ளும் காலை நாய் அலங்கடையே. 11

யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் \ ஓடும் புல்வாய் உளப்பட மறியே. 12

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப. 13

மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் \ அவையும் அன்ன அப் பாலான. 14

யானையும் குதிரையும் கழுதையும் கடமையும் \ மானொடு ஐந்தும் கன்று எனற்கு உரிய. 15

எருமையும் மரையும் வரையார் ஆண்டே. 16

கவரியும் கராமும் நிகர் அவற்றுள்ளே. 17

ஒட்டகம் அவற்றொடு ஒரு வழி நிலையும். 18

குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. 19

ஆவும் எருமையும் அது சொலப்படுமே. 20

கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும். 21

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் \ நிரம்ப நாடின் அப் பெயர்க்கு உரிய. 22

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை \ கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

பிள்ளை குழவி கன்றே போத்து எனக் \ கொள்ளவும் அமையும் ஓர் அறிவு உயிர்க்கே. 24

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே. 25

சொல்லிய மரபின் இளமைதானே \ சொல்லும் காலை அவை அல இலவே. 26

உயிரினப் பாகுபாடு

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே \ இரண்டு அறிவதுவே அதனொடு நாவே \ மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே \ நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே \ ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே \ ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே \ நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. 27

புல்லும் மரனும் ஓர் அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 28

நந்தும் முரளும் ஈர் அறிவினவே \ பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. 29

சிதலும் எறும்பும் மூ அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 30

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 31

மாவும் மாக்களும் ஐ அறிவினவே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 32

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே \ பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே. 33

ஒரு சார் விலங்கும் உள என மொழிப. 34

விலங்கினம் 
ஆண், பெண், இளமைப் பெயர்கள்

வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல். 35

கேழற்கண்ணும் கடி வரை இன்றே. 36

புல்வாய் புலி உழை மரையே கவரி \ சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும். 37

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன. 38

ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும். 39

பன்றி புல்வாய் உழையே கவரி \ என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய. 40

எருமையும் மரையும் பெற்றமும் அன்ன. 41

கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே. 42

பெற்றம் எருமை புலி மரை புல்வாய் \ மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. 43

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய. 44

மயிலும் எழாலும் பயிலத் தோன்றும். 45

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 46

கலை என் காட்சி உழைக்கும் உரித்தே \ நிலையிற்று அப் பெயர் முசுவின்கண்ணும். 47

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் \ யாத்த என்ப யாட்டின்கண்ணே. 48

சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் \ மா இருந் தூவி மயில் அலங்கடையே. 49

ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் \ ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப. 50

ஆண்பால் எல்லாம் ஆண் எனற்கு உரிய \ பெண்பால் எல்லாம் பெண் எனற்கு உரிய \ காண்ப அவை அவை அப்பாலான. 51

பிடி என் பெண் பெயர் யானை மேற்றே. 52

ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை \ பெட்டை என்னும் பெயர்க்கொடைக்கு உரிய. 53

புள்ளும் உரிய அப் பெயர்க்கு என்ப. 54

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும். 55

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை \ சூழும் காலை அளகு எனல் அமையா. 56

அப் பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே. 57

புல்வாய் நவ்வி உழையே கவரி \ சொல்வாய் நாடின் பிணை எனப்படுமே. 58

பன்றி புல்வாய் நாய் என மூன்றும் \ ஒன்றிய என்ப பிணவின் பெயர்க்கொடை. 59

பிணவல் எனினும் அவற்றின் மேற்றே. 60

பெற்றமும் எருமையும் மரையும் ஆவே. 61

பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய. 62

எருமையும் மரையும் பெற்றமும் நாகே. 63

நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே. 64

மூடும் கடமையும் யாடு அல பெறாஅ. 65

பாட்டி என்ப பன்றியும் நாயும். 66

நரியும் அற்றே நாடினர் கொளினே. 67

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி. 68

குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும் \ மரம் பயில் கூகையைக் கோட்டான் என்றலும் \ செவ் வாய்க் கிளியைத் தத்தை என்றலும் \ வெவ் வாய் வெருகினைப் பூசை என்றலும் \ குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் \ இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும் \ எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் \ முடிய வந்த அவ் வழக்கு உண்மையின் \ கடியல் ஆகா கடன் அறிந்தோர்க்கே. 69

பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே. 70

மனிதனில் பிறவிப் பாகுபாடு

நூலே கரகம் முக்கோல் மணையே \ ஆயும் காலை அந்தணர்க்கு உரிய. 71

படையும் கொடியும் குடையும் முரசும் \ நடை நவில் புரவியும் களிறும் தேரும் \ தாரும் முடியும் நேர்வன பிறவும் \ தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 72

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு \ ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே. 73

பரிசில் பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர் \ நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும் \ பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே. 74

ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் \ யாரும் சார்த்தி அவை அவை பெறுமே. 75

தலைமைக் குணச் சொலும் தம்தமக்கு உரிய \ நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப. 76

இடை இரு வகையோர் அல்லது நாடின் \ படை வகை பெறாஅர் என்மனார் புலவர். 77

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 78

மெய் தெரி வகையின் எண் வகை உணவின் \ செய்தியும் வரையார் அப் பாலான. 79

கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே. 80

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது \ இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி. 81

வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும் \ வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே. 82

அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே. 83

வில்லும் வேலும் கழலும் கண்ணியும் \ தாரும் மாலையும் தேரும் மாவும் \ மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய. 84

அன்னர் ஆயினும் இழிந்தோர்க்கு இல்லை.85

செடியினம்

புறக் காழனவே புல் என மொழிப. 86

அகக் காழனவே மரம் என மொழிப. 87

தோடே மடலே ஓலை என்றா \ ஏடே இதழே பாளை என்றா \ ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் \ புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர். 88

இலையே தளிரே முறியே தோடே \ சினையே குழையே பூவே அரும்பே \ நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம் \ மரனொடு வரூஉம் கிளவி என்ப. 89

காயே பழமே தோலே செதிளே \ வீழொடு என்று ஆங்கு அவையும் அன்ன. 90

அண்டம் 
ஐம்பூதம்

நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் \ கலந்த மயக்கம் உலகம் ஆதலின் \ இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத் \ திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும். 91

மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை \ மரபு வழிப் பட்ட சொல்லினானே. 92

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும். 93

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே \ நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான. 94

நூல் 

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி \ உரை படு நூல்தாம் இரு வகை இயல \ முதலும் வழியும் என நுதலிய நெறியின. 95

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் \ முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். 96

வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். 97

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும். 98

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து \ அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே. 99

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை \ மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி \ ஈர் ஐங் குற்றமும் இன்றி நேரிதின் \ முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் \ நூல் என மொழிப நுணங்கு மொழிப் புலவர். 100

உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம் \ புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் \ விதித்தலும் விலக்கலும் என இரு வகையொடு \ புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே. 101

மேற் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு \ சில் வகை எழுத்தின் செய்யுட்கு ஆகி \ சொல்லும் காலை உரை அகத்து அடக்கி \ நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகி \ துளக்கல் ஆகாத் துணைமை எய்தி \ அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகி \ பல வகையானும் பயன் தெரிபு உடையது \ சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர். 102

பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் \ கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும். 103

விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்தி \ சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா \ ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் \ மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே. 104

சூத்திரத்துட் பொருள் அன்றியும் யாப்புற \ இன்றியமையாது இயைபவை எல்லாம் \ ஒன்ற உரைப்பது உரை எனப்படுமே. 105

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய் \ தன் நூலானும் முடிந்த நூலானும் \ ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி \ தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ \ துணிவொடு நிற்றல் என்மனார் புலவர். 106

சொல்லப்பட்டன எல்லா மாண்பும் \ மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே. 107

சிதைவு இல் என்ப முதல்வன் கண்ணே. 108

முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் \ வல்லோன் புணரா வாரம் போன்றே. 109

நூல் உத்தி

சிதைவு எனப்படுபவை வசை அற நாடின் \ கூறியது கூறல் மாறு கொளக் கூறல் \ குன்றக் கூறல் மிகை படக் கூறல் \ பொருள் இல கூறல் மயங்கக் கூறல் \ கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல் \ பழித்த மொழியான் இழுக்கம் கூறல் \ தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் \ என்ன வகையினும் மனம் கோள் இன்மை \ அன்ன பிறவும் அவற்று விரி ஆகும். 110

எதிர் மறுத்து உணரின் அத் திறத்தவும் அவையே. 111

ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின் \ நுதலியது அறிதல் அதிகார முறையே \ தொகுத்துக் கூறல் வகுத்து மெய்ந் நிறுத்தல் \ மொழிந்த பொருளொடு ஒன்ற வைத்தல் \ மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் \ வாராததனான் வந்தது முடித்தல் \ வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் \ முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே \ ஒப்பக் கூறல் ஒருதலை மொழிதல் \ தன் கோள் கூறல் முறை பிறழாமை \ பிறன் உடன்பட்டது தான் உடம்படுதல் \ இறந்தது காத்தல் எதிரது போற்றல் \ மொழிவாம் என்றல் கூறிற்று என்றல் \ தான் குறியிடுதல் ஒருதலை அன்மை \ முடிந்தது காட்டல் ஆணை கூறல் \ பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் \ தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் \ மறுதலை சிதைத்துத் தன் துணிபு உரைத்தல் \ பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல் \ பொருள் இடையிடுதல் எதிர் பொருள் உணர்த்தல் \ சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் \ தந்து புணர்ந்து உரைத்தல் ஞாபகம் கூறல் \ உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் \ சொல்லிய அல்ல பிற அவண் வரினும் \ சொல்லிய வகையான் சுருங்க நாடி \ மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்துகொண்டு \ இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் \ நுனித்தகு புலவர் கூறிய நூலே. 112

பொருளதிகாரம் முற்றிற்று

Monday, 11 February 2019

ஐந்திரம் (தொல்காப்பிய காலம்) Aintiram, Age of Tolkappiyam

ஐந்திரம் என்னும் என்னும் நூலில் தொல்காப்பியர் முழுமையாகத் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று அந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார் குறிப்பிடுகிறார்.
ஐந்திரம் பாணினி காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முந்தியது. பாணினி சமற்கிருதத்துக்கு இலக்கம் எழுதிய புலவர். சமற்கிருத மொழியிலுள்ள எழுத்து, சொல் ஆகியவற்றிற்கு மட்டும் இலக்கணம் எழுதினார். அவர் காலத்தில் சமற்கிருதத்தில் வேத மந்திரங்கள் மட்டுமே  இருந்தன. இலக்கியங்கள் இல்லை. எனவே அவர் ‘பொருள்’ இலக்கணம் எழுதவில்லை.

பாணினிக்கு முந்திய தொல்காப்பியர் தமிழில் பொருள் உணரும் பாங்குக்கு இலக்கணம் (தொல்காப்பியம், பொருள் அதிகாரம்) எழுதியுள்ளார். தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே  தமிழானது இலக்கண, இலக்கிய வளம் பெற்றிருந்ததாக இறையனார் களவியல் உரை தெரிவிக்கிறது. 

இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, பாணினி கி.மு. ஆறாம் என்றால், தொல்காப்பியர் அதற்கும் முந்தியவர் என்பது தெளிவு. இதனை அறிஞர்கள் கி.மு. 711 என்று வரையறுத்திருப்பது பொருத்தமானதே.

தொல்காப்பியத்தின் கடைசிப் பகுதி மரபியல். சொல் மரபு அதில் கூறப்பட்டுள்ளது. பிற்கால வாழ்வியல் மரபு அதில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது நன்னூல் (13 ஆம் நூற்றாண்டு) கூறும் குழப்பமான உத்தி முறைகள் தொல்காப்பியத்தில் சேர்க்கப்பட்டிருப்பது போன்றது.

  

Saturday, 26 January 2019

தொல்காப்பியம் 1-1 நூன்மரபு Tolkappiyam 1-1

தொல்காப்பியம்
1-1
நூன்மரபு
நூல் மரபு
இலக்கண நூலோர் கண்ட மரபு
எழுத்து & எழுத்தொலி
 • தமிழ் எழுத்து 30. (உயிர் 12 + மெய் 18) மற்றும் சார்பெழுத்து 3 [1] * குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் மூன்றும் சார்பெழுத்து [2]
 • அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குறில் (மாத்திரை 1) [3] * ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் நெடில் [4] (மாத்திரை 2) * எந்த எழுத்தும் 3 மாத்திரை ஒலிக்காது [5] மேலும் ஒலிக்க வேண்டின் நெடில் எழுத்தோடு அதன் உயிர்க்குறிலை அளபெடையாக எழுதிக் காட்டி ஒலிக்க வேண்டும் [6]  இயல்பாகக் கண்ணிமை நொடிக்கும் காலம் மாத்திரை என்று கொள்ளப்படும். [7] 
 • அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துக்களும் உயிர்-எழுத்து [8] * க முதல் ன வரை உள்ள 18 மெய்-எழுத்து [9] * மெய் எழுத்தோடு கூடி நின்றாலும் உயிரெழுத்து தன் மாத்திரை ஒலியில் மாறாது [10] * மெய்யெழுத்துக்கு மாத்திரை அரை [11] * சார்பெழுத்தும் அரை மாத்திரை ஒலிக்கும் [12] * ம் எழுத்து இசையில் அரை மாத்திரையிலும் குறையும் [13] * 
 • அப்போது ம் உள்ளேயும் புள்ளி வைத்து எழுதிக் காட்டப்படும் [14] * மெய்யெழுத்து புள்ளி இட்டு எழுதப்படும் [15] * எ ஒ எழுத்தும் புள்ளி இட்டு எழுதப்படும் [16] * மெய்யெழுத்து புள்ளி இல்லாவிட்டால் அ ஒலியும், உருவம் திரிந்து பிற உயிரொலியும் பெறும் [17] * முதலில் மெய்யொலியும் அடுத்து உயிரொலியும் எழுத்தில் இணையும். இது ஒலி மயக்கம் [18] * 
 • `க, ச, ட, த, ப, ற' - 6 வல்லினம் [19] *  `ங, ஞ, ண, ந, ம, ன' - 6 - மெல்லினம் [20] *  `ய, ர, ல, வ, ழ, ள' - 6 - இடையினம். [21] * 
 • இந்த 3 இன 6 (18) மெய்யொடு மெய் எவ்வாறு மயங்கும் (இயைந்தொலிக்கும்) என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் [22] * ட, ற, ல, ள, எழுத்தோடு க, ச, ப, எழுத்து வந்து சேர்ந்து மயங்கும். [23] * ல ள எழுத்தோடு ய வ எழுத்து இணைந்து ஒலிக்கும் [24] *  ங, ஞ, ண, ந, ம, ன, எழுத்தோடு இசை ஒத்த க ச ட த ப ற எழுத்து இணைந்து ஒலிக்கும். [25] * ண ன ஒலியாடு க, ச, ஞ, ப, ம, ய, வ ஒலி இணையும் [26] * ஞ, ந, ம, வ ஒலியோடு ய ஒலி சேரும். [27] * ம ஒலியோடு ய ஒலி இணையும். [28] * ய, ர, ழ, ஒலியோடு ங ஒலி இணையும் [29] * ர ழ மெய்யொலி மயங்காது (சேராது) [30] * 
 • அ இ உ 3 எழுத்து சுட்டுப் பொருள் தரும் [31] * ஆ ஏ ஓ எழுத்து வினாப்பொருள் தரும் [32] * 
 • இசைக்கும் யாழ் நரம்புடன் சேர்த்துப் பாடும்போது எந்த எழுத்தும் மாத்திரை அளவினைக் கடந்து ஒலிக்கும். [33] 
நூற்பா
 1. எழுத்து எனப்படுப, \ அகரம் முதல் \ னகர இறுவாய், முப்பஃது' என்ப \ சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. 
 2. அவைதாம், \ குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற \ முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன. 
 3. அவற்றுள் \ `அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும் \ ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப. 
 4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் \ அப்பால் ஏழும் \ ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப. 
 5. மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே. 
 6. நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய \ கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர். 
 7. கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை \ நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. 
 8. ஒளகார இறுவாய்ப் \ பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப. 
 9. னகார இறுவாய்ப் \ பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப. 
 10. மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா. 
 11. மெய்யின் அளபே `அரை' என மொழிப.
 12. அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே.
 13. அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே; \ இசையிடன் அருகும், தெரியும் காலை. 
 14. உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 
 15. மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.
 16. எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
 17. புள்ளி இல்லா எல்லா மெய்யும் \ உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும், \ ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும், \ ஆயீர் இயல-உயிர்த்தல் ஆறே.
 18. மெய்யின் வழியது, உயிர் தோன்று நிலையே.
 19. `வல்லெழுத்து' என்ப - `க, ச, ட, த, ப, ற'
 20. `மெல்லெழுத்து' என்ப - `ங, ஞ, ண, ந, ம, ன' 
 21. இடையெழுத்து' என்ப - `ய, ர, ல, வ, ழ, ள' 
 22. அம் மூ-ஆறும் வழங்கு இயல் மருங்கின், \ மெய்ம்மயக்கு, உடனிலை, தெரியும் காலை.
 23. ட, ற, ல, ள, என்னும் புள்ளி முன்னர், \ க, ச, ப, என்னும் மூஎழுத்து உரிய.
 24. அவற்றுள், \ லளஃகான் முன்னர், யவவுந் தோன்றும்.
 25. ங, ஞ, ண, ந, ம, ன, எனும் புள்ளி முன்னர், \ தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 
 26. அவற்றுள், \ ண-னஃகான் முன்னர், \ க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய. 
 27. ஞ, ந, ம, வ என்னும் புள்ளி முன்னர், \  யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.
 28. மஃகான் புள்ளி முன் `வ'வ்வும் தோன்றும்.
 29. ய, ர, ழ, என்னும் புள்ளி முன்னர், \ முதல் ஆகு எழுத்து, ஙகரமொடு தோன்றும். 
 30. மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் \ தம் முன் தாம் வரூஉம்-ர, ழ, அலங்கடையே.
 31. அ, இ, உ அம் மூன்றும் சுட்டு.
 32. ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா.
 33. அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், \ `உள' என மொழிப;-`இசையொடு சிவணிய \ நரம்பின் மறைய' என்மனார் புலவர்.


Sunday, 20 January 2019

தொல்காப்பியம் 1-7 உயிர்மயங்கியல் தொகுப்பு Tolkappiyam Verse and Notes 1-7

தொல்காப்பியம் 
உயிர் மயங்கியல்
உயிர் எழுத்தில்முடியும் சொல் வருமொழியோடு புணரும் பாங்கு

94 - விளக்குறிது
95 - செய்ய, போல, சுட்டுச்சொல் - ஒற்று மிகும்
96 - வருமொழி முதல் மெல்லினம், இடையினம் ஆயின்
97 - சாவக்  குத்தினான்
98 - அன்ன \ ஊர \ உண்மன \ செல்க \ உண்ட  \ உண்ணிய \ அம்ம \ பல - இயல்பு 
99 - வாழிய \ அம்ம \ பல \ சில - இயல்பு
100 - திரிபு \ உறழ்பு \ வேற்றுமை
101 - மரப்பெயர் 

Wednesday, 27 June 2018

தொல்காப்பியம் 2-6 வினையியல் verbs

நூற்பா விளக்கம் தொடுப்பு

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.    1

காலம்தாமே மூன்று என மொழிப.       2

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே.             3

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றலாறே.            4

அவைதாம்,
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் என்னும்
அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்

என்னும்
அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு
என் ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.              6

அவற்றுள்,
செய்கு என் கிளவிவினையொடு முடியினும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்.           7

அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்

அர் ஆர் என வரூஉம் மூன்றும்

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.    10

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.        11

அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி

அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.           13

பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்

ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.            15

அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்
கண் என் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும் பண்பினானும் என்று

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பேகாலம்.        17

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்

என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.        19

ஒன்றன் படர்க்கை ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.              20

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே.               21

அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே.      22

இன்று இல உடைய என்னும் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி
இன்மை செப்பல் வேறு என் கிளவி
செய்ம்மன செய்யும் செய்த என்னும்
அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி

அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.            26

பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல் ஓரனைய என்மனார் புலவர்.     27

எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. 28

அவற்றுள்,
முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
மன்னாது ஆகும் வியங்கோட்கிளவி.               29

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்

செய்து செய்யூ செய்பு செய்தென
செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என

பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றுஇயல்பினவே.     32

அவற்றுள்,
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.     33

அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்
வினை ஓரனைய என்மனார் புலவர்.  34

ஏனை எச்சம் வினைமுதலானும்
ஆன் வந்து இயையும் வினைநிலையானும்
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.               35

பல் முறையானும் வினையெஞ்சுகிளவி
சொல் முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.            36

நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே.   37

அவற்றொடு வரு வழி செய்யும்என் கிளவி
முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே.      38

பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா.             39

தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார்.               40

அவற்றுள்,
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ் இடன் அறிதல் என்மனார் புலவர்.             41

எய்து இடன் உடைத்தே வாராக் காலம்.           42

முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந் நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.            43

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
விரைந்த பொருள என்மனார் புலவர். 44

மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல் வழி நிகழும் காலத்து
மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.           45

இது செயல் வேண்டும் என்னும் கிளவி
தன் பாலானும் பிறன் பாலானும்.          46

வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்

வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்

செயப்படுபொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே.       49

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.               50Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி