Showing posts with label திரிகடுகம். Show all posts
Showing posts with label திரிகடுகம். Show all posts

Monday, 20 March 2017

திரிகடுகம் சிறப்புப் பாயிரம் 2 TiriKadugam special prefaces 2

செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே - பல்லார்
பரிவொடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
திரிகடுகம் செய்த மகன். 2

திரிகடுகம் நூலின் ஆசிரிர் பெயர் நல்லாதன்.
இவர் செல்வமும் திருந்திய பண்பும் உள்ள செம்மல்.
இவர் ஒரு போர் வீரர்.
பலரது நினைவில் தோன்றும் நோய் அவியும் வகையில் ஆராய்ந்து திரிகடுகம் என்னும் நூலைச் செய்தான்.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் சிறப்புப் பாயிரம் 1 TiriKadugam special prefaces 1

உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.            1

உலகத்தில், திரிகடுகம் உடலிலுள்ள நோயைப் போக்கும் மருந்தாகும். தமிழ்ச் சங்கம் மருவும் நல்லாதன் இயற்றிய ‘திரிகடுகம்’ என்று நிலைபெற்றிருக்கும் நூல் உலக மக்களின் தகாத நினைவு நோயைப் போக்கும் மருந்தாகும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


Sunday, 19 March 2017

திரிகடுகம் மிகை 4 TiriKadugam Added 4

ஏர்க் குற்றம் பாரா உழவனும், இன் அடிசில்
பாத்திட்டு ஊட்டாத பைந்தொடியும், ஊர்க்கு
வரும் குற்றம் பாராத மன்னும், - இம் மூவர்
இருந்திட்டு என்? போய் என், இவர்? 4

  1. உழும்போது உழவு செய்யாமல் ஒதுங்கும் ஏர்க்குற்றம் பார்க்காத உழவன்
  2. இனிய உணவைப் பகிர்ந்தளித்து உண்ணாத மனையாட்டி
  3. ஊருக்கு வரும் தீங்கைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மன்னன்

இந்த மூவர் இருந்தால் என்ன? போனால் என்ன? ஒரு பயனும் இல்லை.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் மிகை 3 TiriKadugam Added 3

சால் நெறிப் பாரா உழவனும், தன் மனையில்
மானம் ஒன்று இல்லா மனையாளும், சேனை
உடன்கொண்டு மீளா அரசும், - இம் மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா.          3

  1. உழும் படைச்சாலை நேராகப் பார்க்காத உழவன்
  2. மனையில் இருந்துகொண்டு மானம் காக்காத மனைவி
  3. படையை உடன் கொண்டுசெல்லாத அரசன்

இந்த மூன்றும் கடமை ஆற்றுபவன் நெஞ்சில் தோன்றும் கனவு அலை போல பலன் தரமாட்டா.
 
ஏர் உழும் பள்ளம் | படைச்சால் | சால் | சால்நெறி | சால் வழி
நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் மிகை 2 TiriKadugam Added 2

பொருள் இல் ஒருவற்கு இளமையும், போற்றும்
அருள் இல் ஒருவற்கு அறனும், தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும், - மூன்றும்
பரிந்தாலும் செய்யா பயன். | (புறத்திரட்டு.1228)         2

  1. பொருள் இல்லாத ஒருவனுக்கு இருக்கும் இளமைப் பருவம்
  2. அருள் இல்லாத ஒருவனிடம் இருக்கும் அறநெறி
  3. தெளிவு இல்லாதவன் மனம் திரிந்து கையாளும் கல்வி

இந்த மூன்றும் எவ்வளவுதான் வருந்தினாலும் பயன்படுவதில்லை.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் மிகை 1 TiriKadugam Added 1

கரப்பவர் நீர்மைத்தாய் நண்பகலில் தோன்றல்,
இரப்பவர்கண் தேய்வேபோல் தோன்றல், இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம்போல் ஒளிவிடுதல், - இம் மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள. | (புறத்திரட்டு. 1222)                1

  1. பொருளைத் தனக்கென மறைத்து வைத்துக்கொள்பவர் போல நண்பகல் வேளையில் நிலா தோன்றாது.
  2. இரப்பவர் கண் கூசி ஒளி மங்குவது போல மாலையில் நிலா தோன்றும்.
  3. இரப்பவர்க்கு ஒன்று ஈவார் முகம் மலர்வது போல் இரவு வேளையில் நிலா ஒளி விடும்.

இந்த மூன்று குணங்களும் நிலாவுக்கு உண்டு.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 100 TiriKadugam 100

பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில்-அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், - இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.           100

  1. அரசனிடம் பற்று (பக்தி, பத்தி) வைத்துள்ள படை
  2. எல்லாத் திசைகளிலும் குறைவில்லாத மதில்-அரண்
  3. பாதுகாப்பாக வைத்துள்ள எண்ணில் அடங்காத பெருஞ்செல்வம்

இந்த மூன்றும் நாட்டை ஆளும் வேந்தனுக்கு உறுப்புகள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 99 TiriKadugam 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும், காமுற்று
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும், முட்டு இன்றி
அல்லவை செய்யும் அலவலையும், - இம் மூவர்
நல் உலகம் சேராதவர்.     99

  1. சேர்ந்திருந்த கற்றவரை ஒதுக்கிவிட்டு வாழ்பவன்
  2. ஆசைப் பெருக்கால் தன் விருப்பப்படி வாழும் அறிவிலி
  3. தடை இல்லாமல் அறம் அல்லாதனவற்றைச் செய்யும் ‘அலவலை’

இந்த மூவரும் நல்லவர் உலகத்தைச் சேராதவர்கள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 98 TiriKadugam 98

செந் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும்,
வெஞ் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும்,
பெண்பால் கொழுநன் வழிச் செலவும், - இம் மூன்றும்
திங்கள் மும் மாரிக்கு வித்து.     98

  1. செந்தீ வளர்க்கும் முதல்வனாகிய அந்தணன் அறநெறியை நினைத்துக்கொண்டு வாழவேண்டும்.
  2. கடுமையான சினம் கொண்ட வேந்தன் நெறிமுறை தவறாத வழியைப் பின்பற்ற வேண்டும்.
  3. பெண்மகள் தன் கணவன் வழியில் செல்ல வேண்டும்.

இந்த மூன்றால் மாதந்தோறும் மூன்று மழை தவறாமல் பொழியும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 97 TiriKadugam 97

ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த
கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்
நற் புடையிலாளர் தொழில்.        97

ஐங்குரவர் – அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தன் நெஞ்சம்
  1. ஐந்து குரவர்களின் ஆணையை மறுத்து மாறாகச் செயல்படுதல்
  2. ஆர்வம் பொண்ட நண்பர்களிடம் பொய் கூறுதல்
  3. உள்ளம் ஒப்பி கற்புடையவளாக நடந்துகொள்ளும் மனைவியை விட்டு விலகுதல்

இந்த மூன்றும் நன்மை இல்லாதவர் தொழில்.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 96 TiriKadugam 96

கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ,
நல்லவை செய்வான் அரசன்; - இவர் மூவர்,
'பெய்' எனப் பெய்யும் மழை.         96

  1. கொண்டவன் குறிப்பு அறிந்து நடந்துக்கொள்ளும் பெண்டாட்டி
  2. மேற்கொண்ட தவத்தைச் செய்யும் முறைமை அறிந்து செய்பவன் தவசி
  3. கொடுமைகளை நீக்கி நல்லனவற்றைச் செய்பவன் அரசன்.

இவர்கள் மூவரும் ‘பெய்’ எப் பெய்யும் மழை போன்றவர்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை. (திருக்குறள்)

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 95 TiriKadugam 95

அறிவு அழுங்கத் தின்னும் பசி நோயும், மாந்தர்
செறிவு அழுங்கத் தோன்றும் விழைவும், செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும், - இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை.               95

  1. அறிவு மழுங்குமாறு பிய்த்துத் தின்னும் பசி
  2. அடங்கியிருக்கும் அழுத்தமான பண்பில் தோன்றும் ஆசை முளை
  3. பகைவரின் கொடிய உரையைத் தாங்கிக்கொள்ளாத கடுஞ்சினம்

இந்த மூன்றும் நற்செயலை நீக்கும் படைக்கருவிகள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 94 TiriKadugam 94

நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,
பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்
இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார்.      94

  1. நண்பனாக இல்லாதவனிடம் நட்புரிமை ஆசையால் பழகுபவன்
  2. பெண்பாலார் தம்மைக் காத்துக்கொள்ளும் கற்பினை இகழ்பவன்
  3. பண்பு இல்லாத இழிந்த சொல் பேசி உரையாடுபவன்

இந்த மூவரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் ஆவர்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 93 TiriKadugam 93

இருளாய்க் கழியும் உலகமும், யாதும்
தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல
காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்
பேதைமை, வாழும் உயிர்க்கு.  93

  1. உலகினைக் கண்டுகொள்ளாமல் வாழ்தல்
  2. எண்ணிப் பார்க்காமல் சினந்து பேசுதல்
  3. ஒரு பொருட்டாகக் கருதக்கூடாதனவற்றைக் காதலிக்கும் ஆசை

இந்த மூன்றும் ஒருவனது உயிருக்கு உள்ள அறியாமை.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 92 TiriKadugam 92

விழுத் திணைத் தோன்றாதவனும், எழுத்தினை
ஒன்றும் உணராத ஏழையும், என்றும்
இறந்துரை காமுறுவானும், - இம் மூவர்
பிறந்தும் பிறவாதவர்.       92

  1. உயர்ந்து விளங்கும் குடும்பத்தனாகத் தோன்றாதவன்
  2. எழுத்துக்களை படித்தறிய முடியாத ஏழை
  3. எப்போதும் வரம்பு கடந்து பேசுவதை விரும்புபவன்

இந்த மூவரும் பிறந்திருந்தாலும் பிறவாதவராகவே கருதப்படுவர்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 91 TiriKadugam 91

பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல், உயிரை
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல், மறுவந்து
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல், - இம் மூன்றும்
மன்னா உடம்பின் தொழில்.        91

  1. விளைவினைப் பெறும் காலத்தில் வாய் சோர்ந்து சொல்லல்
  2. கடைசிக் காலத்தில் உயிர் போன்றவரை இழந்துவிட்டேனே எனல்
  3. உடலுக்குள் மாசு ஏற்பட்டு தன் உடம்பு கன்றி நோய்வாய்ப் படும்போது நாணுதல்

இந்த மூன்றும் நிலையில்லாத உடம்பின் செயல்கள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 90 TiriKadugam 90

ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை! - இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு.         90

  1. கொடுப்பதற்காகப் பொருளை ஈட்டுக
  2. நூல் இயற்றுவோர் அறநெறியை வளர்ப்பதற்காக இயற்றுக 
  3. என்ன சொன்னாலும் அருளோடு சொல்லுக

இந்த மூன்றும் இருண்ட உலகுக்குச் செல்லாமல் இருக்கும் வழிகள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 89 TiriKadugam 89

அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், - இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்.                89

  1. அருளுக்குத் தன் நெஞ்சில் அடைக்கலம் தராதவன்
  2. தன்னிடமுள்ள பொருளைப் பயன்படுத்திக்கொள்ளாமல் புதைத்து வைப்பவன்
  3. வரம்பைக் கடந்து கடுஞ்சொல் பேசுபவன்

இந்த மூவரும் பிறந்தும் பிறவாதவரே ஆவர்.  

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 88 TiriKadugam 88

பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,
தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,
பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல், - இம் மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு.              88

  1. நோய் தன் உடலைத் தின்னும்போது வலியால் வருந்துதல் 
  2. தணியாத ஆசையோடு எமன் உயிரை உண்ணும்போது வருந்துதல்
  3. ஒருவனுக்குப் பிணைப்பாக அமைந்திருக்கும் சுற்றத்தாரை மாண்பு இல்லாமல் நடத்துதல்

இந்த மூன்றும் மிதவை இல்லாமல் வெள்ளத்தில் தத்தளிப்பதாகும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


திரிகடுகம் 87 TiriKadugam 87

கொல்வது தானஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்று விப்பானும், - இம் மூவர்
முழு மக்கள் ஆகற்பாலார்.           87

  1. உயிரைப் பலி கொடுக்க இறைவனை வேண்டுதல்
  2. கல்வி கற்றலை விட்டுவிட்டு அகன்ற இனத்தவரோடு சேர்ந்துகொள்ளல்
  3. பொருள் சேர்க்காமல் இருக்கும் செல்வத்தைப் பார்த்துப் பார்த்து வியப்பவன்

இந்த மூவரும் புத்தி இல்லாத மழுங்கல்கள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி