Showing posts with label தமிழ்-பொருளியல். Show all posts
Showing posts with label தமிழ்-பொருளியல். Show all posts

Wednesday, 9 September 2015

வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கியத் தொடரடைவு

வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கியத் தொடரடைவு

சங்க இலக்கியங்கள்
காப்பியங்கள்
முதலானவற்றில் உள்ள
எல்லாச் சொற்களையும்
அவற்றின் ஆட்சித் தொடர்களையும்
சொல் பற்றிய அடிப்படை இலக்கணக் குறிப்பினையும்
இதில் காணலாம்

சொல்லின் வரலாற்றை அறிய உதவும் அருமையான களஞ்சியம்.
பயன்படுத்திப் பயன்பெறுவோம்.

இதனைப் பற்றி

Monday, 9 June 2014

Lands of four kinds in Tamil Nadu, நானிலம்

Ancient Tamil literature has been divided into two parts based on the subject matters spoken in it.
If it speaks the confidential relation between the lovers or husband and wife the literature is called ‘Akam’. 
If it speaks the other matters it is called ‘Puram’.

The confidential life maters (Akam) are further classified into two Clandestine Love and Married Love. 
These two on the whole is divided into five contacts the couples. These five contacts are assigned to five kinds of lands. 
Among the five, the contact of separation in love is assigned to arid land by season. 
Hence the lands are of four kinds. 


KURINJI, Love union
the mountain land,
குறிஞ்சி  - ஆண்பெண் புணர்தல்
MULLAI,
She waits for her lover return 
the forest land,
முல்லை
பிரிந்தவன் வரவுக்காகப் பெண் காத்திருத்தல்
MARUTHAM,
She is sulking for her husband’s concubine-lust 
the river-bed land,
மருதம்
ஊடல்
NEITHAL,
She longs her lover 
the littoral land,
நெய்தல்
பிரிந்தவன் வரவு எண்ணி மனம் ஏங்கி இரங்குதல்
PALAI,
He leaves his lover alone to earn wealth for them 
the arid land,
பாலை
பிரிதல்

இந்தப் பாடல் என்ன திணை? (அகம்)

பண்டைய தமிழ் இலக்கியங்கள் பாடல் வடிவில் உள்ளன.
அவை தமிழரின் பண்பாட்டை உணர்த்துகின்றன.
அறநெறி கூறும் பாடல்களூம் உண்டு.

இலக்கியங்கள் உணர்த்தும் பொருளை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பண்டைய இலக்கண நூலார் பகுத்துக் காட்டியுள்ளனர்.
அவற்றைத் திணை எனக் குறிப்பிடுகின்றனர்.

 1. அகப்பொருள்-திணை - காதலர் அல்லது கணவன் மனைவியர் உறவு-ஒழுக்கம் தொடர்பான அகச் செய்திகளைக் கூறுவது. 
 2. புறப்பொருள்-திணை - பிற வெளிப்படையான செய்திகளைக் கூறுவது. 

என்பன அவை.
*
அகப்பொருளை ஏழு திணையாகவும், புறப்பொருளை ஏழு திணையாகவும் பகுத்துக் காட்டுவது தொல்காப்பிய மரபு.
*
 1. கைக்கிளை
 2. குறிஞ்சி
 3. முல்லை
 4. பாலை
 5. மருதம்
 6. நெய்தல்
 7. பெருந்திணை
என்பன அவை.
*
இந்த 7-ல் எந்தத் திணையைச் சேர்ந்தது இந்தப் பாடல் - எனக் கண்டறிவது எப்படி என்பதை முன்னோர் கண்ட வழிமுறையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதனைத் தொல்காப்பியம் விளக்குகிறது.
 1. ஒரே பாடலில் வெவ்வேறு நிலக்கூறுகள் மயங்குவது இல்லை. (3-1-14)
 2. திணையின் பிற பொருள்கள் மயங்கும் (3-1-14)
 3. உரிப்பொருள் மயங்காது (3-1-15)
*
எனவே மயங்காத உரிப்பொருள் என்னும் ஒழுக்கலாற்றை வைத்தே இன்ன பாடல் இன்ன திணை என்று கொள்ளப்படும்.
நிலக்கூறு இதற்கு உறுதிணையாக அமையும்.
*-
உரிப்பொருள் என்னும் ஒழுக்கம்
நிலம் 4
திணை - 'அன்பின் ஐந்திணை' என 5 வகை
*
 1. புணர்தல் - குறிஞ்சி
 2. பிரிதல் - பாலை
 3. இருத்தல் (பிரிவைத் தாங்கிக்கொண்டு காத்திருத்தல்) - முல்லை
 4. ஊடல் - மருதம்
 5. இரங்கல் - நெய்தல்
 6. கைக்கிளை - ஒருதலைக் காமம்
 7. பெருந்திணை - பொருந்தாக் காமம்
இவை ஏழும் அகப்பொருள்-திணை.
காலம், மரம், பறவை முதலான பொருள்கள் இடம் மாறும் ஆகையால் இவற்றை வைத்து இன்ன திணை எனக் கொள்ளல் ஆகாது.
Wednesday, 16 April 2014

அகம், புறம்

சங்ககாலப் பாடல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்-கூறுகளாகப் பாகுபடுத்தப்பட்டிருந்தன.
வெளிப்படையாகப் பேசமுடியாமல் மனம் என்னும் அகத்துக்குள் அடங்கிக் கிடக்கும் ஆண் பெண் உறவு தொடர்பான செய்திகளைக் கூறுவது அகப்பொருள்.
அகப்பொருள் அல்லாதவை புறப்பொருள்.

படத்தில் இடப்புறம் காணும் அங்கை போன்றது அகப்பொருள். வலப்புறம் காணும் புறங்கை போன்றது புறப்பொருள்.
தொல்காப்பியம் அகப்பொருளில் உள்ள திணைகள் 7, புறப்பொருளில் உள்ள திணைகள் 7 எனப் பகுத்துக் காட்டுகிறது.

அகப்பொருளிலில் அன்பால் உறவு கொள்ளும்  5 திணைகள் உள்ளன. இவற்றைத் தொல்காப்பியம் அன்பின் ஐந்திணை என்று குறிப்பிடுகிறது.


இவற்றில் பாலைத்திணை படத்தில் காட்டப்பட்டுள்ள பெருவிரலின் இயக்கம் போலச் செயல்படுவது. ஏனைய 4 விரல்கள் போல் நானில ஒழுக்கங்கள் அமையும்.

அங்கையை மூடிப் பொருளை மறைக்க முடியும். புறங்கையை மூடமுடியாது.

கைக்கிளை என்னும் ஒருதலைக் காமமும், பெருந்திணை என்னும் பொருந்தாக் காமமும் கை என்னும் ஒழுக்க நெறியில் அடங்குவன அல்ல.

அகம் 7 என்றால் புறமும் 7 தானே.

புறப்பொருள் வெண்பாமாலை தன்னிச்சையாக அகப்பொருளைப் பற்றிக் கருதிப்பார்க்காமல் புறத்திணையை 12 எனப் பாகுபாடு செய்து இலக்கணம் செய்து அந்த இலக்கணத்துக்குப் பண்டைய இலக்கியங்களில் மேற்கோள்கள் முழுமையாகக் கிடைக்காமையால் மேற்கோள் பாடல்களை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ளது. 

Tuesday, 8 April 2014

அகப்பொருள் - திணைப்பகுப்பு எப்படி

நிகழ்வுச் செய்திகளை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி.
அகப்பொருளை அன்பின் ஐந்திணை எனக் குறிப்பிட்டு ஐந்து திணைகளாகப் பார்ப்பது வழக்கம். இந்தப் பாகுபாடு ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து வகுக்கப்படும். இது முதல்நிலை.

உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே
தொல்காப்பியம் - அகத்திணை-இயல் 15

ஆண்-பெண் சேரும் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சி
பொருள் தேடவோ, வினையின் நிமித்தமாகவோ ஆண் பிரிவதும்
பெண் பெற்றோரை விட்டுக் காதலனுடன் பிரிவதும் பாலை
ஆண் பிரிவைப் பொறுத்துக்கொண்டு
அவன் வரவுக்காகக் காத்துக்கொண்டு இருத்தலைக் கூறுவது முல்லை
மனைவி கணவனுடன் பிணக்குப் போட்டுக்கொண்டு ஊடுதல் மருதம்
உறவுக் காதலன் வரவை எண்ணி மனம் இரங்குதல் நெய்தல்
திணைப் பாகுபாட்டுக்குக் கருப்பொருளும் உதவும்.
இது இரண்டாம் நிலை

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி