Showing posts with label கொன்றைவேந்தன். Show all posts
Showing posts with label கொன்றைவேந்தன். Show all posts

Wednesday, 3 February 2016

ஓதார் கொன்றைவேந்தன் KontraiVentan 91

படித்துச் கற்றுக்கொள்ளாவிட்டால் பண்புணர்வோடு கூடிய ஒழுக்கம் அமைவதில்லை.

பாடல்

(வோ)ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம்   91
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம் 

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
ஒழுக்கம் 


ஒத்த கொன்றைவேந்தன் KontraiVentan 90

உடலுக்கு ஒத்துவரும் இடத்தில் உறங்குவதே நலம்.

பாடல்

(வொ)ஒத்த விடத்து நித்திரை கொள் 90
ஒத்த விடத்து நித்திரை கொள்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
உறக்கம் | நித்திரை 


வையம் கொன்றைவேந்தன் KontraiVentan 89

வைகும் இடம் வையம்.
வாழும் இடம் வையம்
எந்த இடத்துக்குச் சென்றாலும் அந்த இடத்தில் இருக்கும் தெய்வத்தைத் தொழு.

பாடல்

வையந் தோறுந் தெய்வந் தொழு 89
வையம் தோறும் தெய்வம் தொழு 

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்



வேந்தன் கொன்றைவேந்தன் KontraiVentan 88

அரசன் சினம் கொண்டால் ஆர் துணை வருவார்?

பாடல்

வேந்தன் சீறி னாந்துணை யில்லை 88
வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
அரசன் 


வெள்ளை கொன்றைவேந்தன் KontraiVentan 87

வெள்ளை உள்ளம் கொண்டவனுக்கு எதையும் மறைக்கும் எண்ணம் இருப்பதில்லை.

பாடல்

வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை 87
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை    

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
கள்ளச் சிந்தை | கள்ளத்தனம் 


ஊக்கம் கொன்றைவேந்தன் KontraiVentan 86

ஆக்கம் பெறவேண்டும் என்றால் ஊக்கம் வேண்டும்.
ஊக்கம் இருந்தால்தான் ஆக்கத்துக்கு அழகு சேரும்.
ஆக்கம் = ஒன்றை உருவாக்குதல்.

பாடல்

(வூ)ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு 86
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு   

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்



உரவோர் கொன்றைவேந்தன் KontraiVentan 85

நெஞ்சில் உரம் கொண்டவர் யார்?
தானமாகத் தா என்று பிறரிடம் எதனையும் கேட்காமல் இருப்பவரே ஆவர்.

பாடல்

(வு)உரவோ ரென்கை யிரவா திருத்தல்   
உரவோர் என்கை இரவாது இருத்தல்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
தானம் கேட்டல் | இரத்தல் 


Friday, 29 January 2016

வீரன் கொன்றைவேந்தன் KontraiVentan 84

வில் வீரனுக்குத் துணை கூர்மையான அம்பு.

பாடல்

வீரன் கேண்மை கூரம் பாகும் 84
வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்  

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
கூர் அம்பு 

விருந்து கொன்றைவேந்தன் KontraiVentan 83

இல்வாழ்க்கைக்குப் பொருந்திய ஒழுக்கம் விருந்தினரைப் பேணுதல்.
வீட்டுக்கு விருந்து வரவில்லை என்றால் கலகலப்பான மகிழ்ச்சி வாழ்க்கை இல்லை.

பாடல்

விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் 83
விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
விருந்தினர் 

வானம் கொன்றைவேந்தன் KontraiVentan 82

மழை குறைந்தால், ஒருவர் மற்றவர்களுக்கு வழங்கும் பொருளும் குறையாம்.
தா < தானம், (தமிழ்ச்சொல்), = தரும் பொருள்.

பாடல்

வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் 82
வானம் சுருங்கின் தானம் சுருங்கும்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
தானம்

வளவன் கொன்றைவேந்தன் KontraiVentan 81

எவ்வளவுதான் பெருஞ்செல்வம் படைத்தவனாக இருந்தாலும், உண்ணவேண்டிய அளவு அறிந்து, பக்குவமாகச் சமைத்துச் சாப்பிடு.
அழித்தல் = உணவுப் பொருள்களின் வீரியத்தை அழித்தல்.
சுவை கூட்டுவதற்காகச் சமைத்துச் சாப்பிடு.
செரிமானம் எளிமையாகச் சமை.

பாடல்

ளவ னாயினு மளவறிந் தழித்துண் 81
ளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
வடை | வீரியம் அழித்த உணவு 

மோனம் கொன்றைவேந்தன் KontraiVentan 80

ஞானம் என்பது மெய்யறிவு.
மோனம் என்பது மௌனம்.
ஞானத்தின் உச்ச வரம்பு மோனம்
ஞானத்தில் உணர்ந்ததைச் சொல்லில் வடிக்க இயலாதல்லவா?

பாடல்

மோ மென்பது ஞான வரம்பு 80
மோனம் என்பது ஞான வரம்பு

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்


மொழிவது கொன்றைவேந்தன் KontraiVentan 79

சொல்வதை மறுத்துப் பேசினால் காரியம் கெட்டுப்போகும்.
வழிமொழிந்து வழிமாற்றி இட்டுச் செல்ல வேண்டும்.

பாடல்

மொழிவது மறுக்கி னழிவது கருமம் 79
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
Opposing will destroy the project.

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
சொல்வதை மறுக்காதே 

மைவிழியார் கொன்றைவேந்தன் KontraiVentan 78

கண்ணடிக்கும் மகளிர் வீட்டுப்பக்கம் செல்லாதே.
மை = கண் மை, களங்கம்
மைவிழியார் = மை இட்டுக் கண்களை அழகுபடுத்திக்கொண்டு, களங்கம் நிறைந்த கண்ணோட்டத்துடன், ஆண்களை கண்ணடித்து இழுக்கும் விழிகளைக் கொண்ட மகளிர்.
இன்னார் என்று வரையறை இல்லாமல் யாராய் இருந்தாலும் பொருளுக்காகப் பார்க்கும் கண்ணினார் வீட்டை விட்டுவிட்டு அகன்று சென்றுவிடு.

பாடல்

மைவிழி யார்தம் மனையகன் றொழுகு 78
மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
தீட்டும் மை விழி 

Thursday, 28 January 2016

மேழி கொன்றைவேந்தன் KontraiVentan 77

மேழி பிடித்து உழுது பயிரிட்டு ஈட்டிய செல்வம் காரி உமிழப்படாமல் மதிக்கப்படும்.
கோழை படல் = காரி உமிழப்படல்.
மேழி = கலப்பையில் இருக்கும் கைப்பிடி.

பாடல்

மேழிச் செல்வம் கோழை படாது    77 - விளக்கம்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
மேழி = கலப்பையஅல் உள்ள கைப்பிடி 

மெத்தை கொன்றைவேந்தன் KontraiVentan 76

உறங்குவதில் ஒரு ஒய்யார அழகு உண்டு. அந்த அழகு மெத்தையில் படுத்திருக்கும்போதுதான் தெரியும்.

பாடல்

மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு 76
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
உறங்கும் அழகு 

மூத்தோர் கொன்றைவேந்தன் KontraiVentan 75

அகவையிலும், அறிவிலும் மூத்தவர்கள் சொன்ன அறிவுரை அமிழ்தம்.
வார்த்தை = வார்த்தெடுத்த சொல் (தமிழ்)
அமிர்தம் > அமிழ்தம் (இளமை மாறாமலும், சாகாமலும் காப்பாற்றவல்ல நம்பிக்கை மருந்து)

பாடல்

மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் 75
மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
அமிர்தம் கடைந்த கதை
மோகினி வடிவில் வந்த திருமால் மண்ணுலக மக்களை விலக்கி வானுலக மக்களுக்கு மட்டும் அமிர்தம் அளித்த கதை 

முற்பகல் கொன்றைவேந்தன் KontraiVentan 74

முன்பு நட்ட பயிர் பின்பு விளையும்.
முன்பு செய்த வினை பின்பு விளையும்.
முற்பிறவியில் செய்த்து பிற்பிறவியில் விளையும் என்பாரும் உளர்.
முற்பகல் = முந்தைய காலம்.
பிற்பகல் = பிந்தைய காலம்
ஒரே நாளில் இருக்கும முற்பகல் பிற்பகல் ஆகிய காலத்தைக் கூறினார், கைமேல் பலனாக, உடனே பலன் தரும் விளைவு செய்யும் செயலிலேயே அடங்கிக் கிடக்கிறது என்பதை உணர்த்துவதற்காக.
பயிர் செய்யாமல் தானே விளையாது என்பதும் கருத்து.
Do early, reap after.

பாடல்

முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் 74
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் 

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்


மீகாமன் கொன்றைவேந்தன் KontraiVentan 73

மரக்கலத்தைச் செலுத்தும் மாலுமி இல்லாமல் மரக்கப்பல் ஓடாது.
செயலாற்றுபவன் இல்லாமல் செயல் நடைபெறாது.
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது.

பாடல்

மீகாம னில்லா மரக்கல மோடாது   73
மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
மரக்கலம் 

மின்னுவது கொன்றைவேந்தன் KontraiVentan 72

மின்னலுக்குப் பின்னால் மழை உண்டு.
மின்னினால், அதனை அடுத்து எங்கோ மழை பொழியும்.

பாடல்

மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை 72
மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
மின்னல் 



Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி