Showing posts with label குறுந்தொகை-தேன். Show all posts
Showing posts with label குறுந்தொகை-தேன். Show all posts

Thursday, 9 May 2019

குறுந்தொகை 401 Kurunthogai 401

அடும்பு நெய்தல் ஆகிய மலர்களைக் கூந்தலில் அணிந்துகொண்டு
ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி
நண்டு கடல்நீரில் சென்று மீண்டு
மகளிரை இரக்கம் கொள்ளுமாறு செய்யும் துறைவன் அவன்

அவனோடு நீ சிரித்து விளையாடுவதை நான் தடுக்கவில்லை.
உனக்கு அவனிடம் உள்ள நட்பு பெருமைக்கு உரியது (ஐதேகம்ம)

தோழி தலைவியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 400 Kurunthogai 400

தலைவன் தன் தேரோட்டியைப் பாராட்டுகிறான் 

நெடுந்தொலைவு செல்ல வேண்டுமா
எந்தத் துன்பமும் இல்லை
போய்விடலாம்

உன் தோளில் காமத் திணவா
கவலை வேண்டாம்

என்று எனக்குத் தெம்பு சொன்னாய்

அவ்வாறே

முரம்பு நிலத்தின் கண் உடையுமாறும்
கரம்பு நிலத்தில் புது வழி தோன்றுமாறும்
தேரை ஓட்டி வந்து

தனிமை நோயல் வருந்தும் என்னவள் துன்பத்தை நான் தீர்க்க
எனக்கு உதவியிருக்கிறாய்

பாராட்டுகிறேன்குறுந்தொகை 399 Kurunthogai 399

ஊர் மக்கள் பருக நீர் எடுக்கும் கேணியில் நீரைப் பாசி மூடியிருக்கும்
தண்ணீர் மொள்ளக் குடத்தை விட்டு விலக்கும்போது பாசி விலகிக்கொள்ளும்

அந்தப் பாசி போலத்தான் என் உடம்பிலுள்ள பசலை நோயும் இருக்கிறது

அவர் என்னைத் தொடும்போதெல்லாம் விலகிக்கொள்கிறது
அவர் என்னை விட்டு விலகும்போதெல்லாம் உடம்பில் பரவிவிடுகிறது

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 398 Kurunthogai 398

தோழி

பனித் திவலை வீசிக் குளிர் வாட்டும் காலத்தில்
பிற மகளிர் சுரையில் எண்ணெய் எடுத்துக்கொண்டு
மாலையில் விளக்கு ஏற்றுவது போல
நீயும் விளக்கு ஏற்றும்போது

அவர் இல்லாதபோது கண்ணீர் விட்டாய்

பிரிந்தவர் வந்திருக்கும்போது அவருக்கு விருந்தோம்ப
இப்போதும் உவகையில் கண்ணீர் விடுகிறாய்

உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லையே

தோழி தலைவியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 397 Kurunthogai 397

தலைவியைக் கொண்டு செல்லும் தலைவனுக்குத் 
தோழி சொல்லும் ஓம்படைக் கிளவி 

தினை போல் பூத்திருக்கும் ஞாழல் மலர்கள் நெய்தல் மலரில் கொட்டுவது போல ஊதைக் காற்று மணலை வாரித் தூற்றும் துறையின் சேர்ப்பன் நீ

தாய் அடித்தால் குழந்தை "அம்மா" என்று அவளையே அழைத்துக்கொண்டு அழும்

அதுபோல என் தலைவி
நீ துன்பம் செய்தாலும்
இன்பம் தந்தாலும்
உன்னையே விரும்பிக்கொண்டு உன்னை நாடி நிற்பாள்
இவள் துன்பத்தைப் போக்குபவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.

இதனை உனர்ந்து தடந்துகொள்குறுந்தொகை 396 Kurunthogai 396

பாலும் உண்ணாமல்
பந்தும் ஆடாமல்
விளையாடும் தோழியருடன் சேரந்து விளையாடும் என் மகள்
இப்போது தன் காதலனுடன் சென்றுவிட்டாள்

அவள் சென்ற மலைக்காட்டு வழியில்
ஆண்யானை உண்ணுவதற்காக ஓமை மரத்தில் அதன் பட்டையைக் குத்தும்
மழை வர இடி முழக்கம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்கும்
மூங்கில் மரங்கள் வாடி நிற்கும்

இப்படிப்பட்ட வழியில் தன் காதலனுடன் செல்லுதல் எளிது என எண்ணினாள் போலும்

செவிலி கூற்று குறுந்தொகை 395 Kurunthogai 395

என் நெஞ்சு என்னிடம் நிற்கவில்லை
அவர் நெஞ்சில் அருள் இல்லை
அவருக்கு அருள் என்று சொல்லப்படுவது பொருள்தான்
எனக்குக் கொடுமையாக இருப்பதை அவர் வலிமையாகப் பற்றிக்கொண்டுள்ளார்

நிலாவைப் பாம்பு விழுங்கும்போது
நிலாவில் கிரகணம் பிடிக்கும்போது
யாரால் தடுக்க முடியும்

அதுபோல
அவர் என்னைத் தனியே விட்டுவிட்டு வாழ்வதை யாரால் தடுக்க முடியாம்

எனவே
நாணத்தை விட்டுவிட்டு அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று வாழ்வதே நன்று

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 394 Kurunthogai 394

யானை

குட்டியாக இருக்கும்போது குறமகளின் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடும்
பெரிதாக வளர்ந்த பின்னர் குறவர் காக்கும் தினைப்புனத்தை அழித்துத் தின்னும்

அதுபோல

அவன்

இளமையில் சிறுமியுடன் சேர்ந்து விளையாடிப் பிறரை மகிழும்படிச் செய்தான்
பெரியவன் ஆனதும் அவளுடன் உறவு கொண்டு அவளைப் பார்த்துப் பலரும் சிரிக்கும்படிச் செய்துவிட்டான்

தோழி தலைவியிடம் கூறுகிறாள் Wednesday, 8 May 2019

குறுந்தொகை 393 Kurunthogai 393

பசும்பூண் பாண்டியனின் படைத்தலைவன் அதிகன்

இவன் தன் யானை மீது ஏறிக்கொண்டு வந்து "வாகைப் பறந்தலை" என்னும் போர்களத்தில் போரிட்டபோது அவன் தன் யானையுடன் மாண்டுபோனான்

இதனைக் கண்ட கொங்கர்
வாளேந்திப் போரிட்ட கொங்கர்
மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்

மகிழ்நன் மலர்மாலை குழைய நான் அவனைத் தழுவிய நாட்கள் சிலவே
எங்களைப் பற்றித் தூற்றும் அலரோ
கொங்கர் செய்த மகிழ்ச்சி ஆரவாரத்தை விடப் பெரிதாக உள்ளது

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 392 Kurunthogai 392

தலைவி தும்பியைத் தூது விடுகிறாள் 

மணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே
நீ அவர் இருக்கும் நாட்டு மலைக்குச் செல்வாயானால்
அவருக்கு எடுத்துச் சொல்வது உன் கடமை

"தினைக் கதிர்களைக் கோலால் அடித்துப் பிரிப்பவரின் தங்கை அவர்களுக்கு உரியவள் அல்லள்
அவள் துன்பத்தை அவர்களால் போக்க முடியாது
அரசரின் தோல்-படை போலத் தேன் கூடுகள் தொங்கும் மலைகிழவனுக்கே உரியவள்"
என்று சொல்குறுந்தொகை 391 Kurunthogai 391

உவரி ஒருத்தல் என்னும் உப்புமண் நிலம் உழாமல் கிடக்கிறது
அதில் படமெடுத்து ஆடும் பாம்பு இடியில் மயங்கி  விழுகிறது 
அந்த நிலத்தில் மழை பொழிகிறது 

மாலைக் காலம்
பூத்த கிளையிலிருக்கும் மயில் தேங்கிய நீரில் தாவுகிறது.

தோழி

இவற்றையெல்லாம் பார்த்தும் இதனை நீ  கார்காலம் அன்று என்கிறாய்
நீ பேதையிலும் பெரும் பேதைப் பெண்

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 390 Kurunthogai 390

காதலனுடன் காதலி சென்றாள் 
அவர்களைக் கண்டவர் அவர்களைத் தடுத்து நிறுத்திப் பாதுகாக்கின்றனர் 

வெளிச்சம் போய் இருட்டு வந்துவிட்டது
தொலைவில் கேட்கும் ஒலியைக் கேளுங்கள்

பெண் துணையுடன் மேலும் செல்ல வேண்டாம்

அடுத்து நீங்கள் செல்லப்போவது வேற்றுநாட்டு வழி
அங்கே பூண் போட்ட வேலை வைத்துக்கொண்டு எல்லைக் காவலர் காவல் புரிகின்றனர்
வணிகர் கூட்டத்தை அவர்கள் சோதனை செய்யும் ஆரவாரத் தண்ணுமை ஒலியைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள்

எனவே செல்லவேண்டாம்குறுந்தொகை 388 Kurunthogai 388

நீரில் வேர் பிடித்துள்ள குவளை கோடை தாக்கினாலும் வாடாது

அதுபோல நான் உன்னோடு வந்தால்
உமணர் உப்பு வண்டி ஏறத் துன்புறும் மலை ஆயினும்
யானையே துன்புறும் காடு ஆயினும்
எனக்கு இனியது

யானை உணவுக்காக உலர்ந்திருக்கும் மரக்கிளைகளை பிளக்கும்
காய்ந்திருப்பதால் பிளக்க மாட்டாமல் வருந்தும்
அப்படி வருந்தும் காடாயினும் எனக்கு இனிது

தலைவி தலைவனிடம் கூறுகிறாள் குறுந்தொகை 387 Kurunthogai 387

வெளிச்சம் போய்விட்டது
முல்லை மலர்கிறது
வெயிலின் சினம் தணிந்த மாலைக்காலம் இது

என் உயிர் எல்லையைத் தேடி
இரவு வெள்ளத்தில்
நான் நீந்திக்கொண்டிருக்கிறேன்

தோழி

இந்த இரவு வெள்ளம்
எனக்கு மட்டும்
கடலைக் காட்டிலும்
பெரிதாக இருக்கிறதே
ஏன்

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 386 Kurunthogai 386

வெண்மணல் விரிந்து
பூக்கள் கொட்டிக் கிடக்கும்
கானல் நிலத்தின் தலைவன் அவன்

அவன் என்னைப் பிரிந்திருக்கிறான்

அவன் என்னைப் பிரிவதற்கு முன்னர் மகளிர் அணிகலன்களுடன் விழாக் கொண்டாடும் மாலைக்காலந்தான் எனக்குத் தெரியும்

அவன் என்னைப் பிரிந்த பின்னர் மாலைக்காலம் இருண்டு கிடக்கிறது
துன்பம் தருவதாகவும் இருக்கிறது.

தலைவி தோழியிடம் கூறுகிறாள் குறுந்தொகை 385 Kurunthogai 385

குரங்குக் கூட்டம் மரத்தில் உள்ள பலாப்பழத்தைத் தோண்டித் தின்னும்.
கானவன் அவற்றை அம்பெய்து தாக்குவான்
அம்புக்குப் பயந்து குரங்குகள் மூங்கில் மரத்துக்குத் தாவும்
போர்க்குதிரை பாய்வது போல் பாயும்
இப்படிப்பட்ட குன்றத்தின் நாடன் அவன்

இந்தக் குன்றநாடன் அன்று போல் இன்றும் எனக்கு நண்பனாகவே இருக்கிறான்

அவன் இருக்கும்போது இந்த ஊர் புதியவன் ஒருவனுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறது

தலைவி அறத்தொடு நிற்றல் 
காதலை வெளிப்படுத்துதல் குறுந்தொகை 384 Kurunthogai 384

மகிழ்ந
நீ பரத்தையிடம் செல்கிறாய்

கரும்பு போன்ற தோளும்
நீண்ட கூந்தலும்
கொண்ட மகளிரின்
நலத்தை உண்டு துறக்கிறாய்

உளுந்தின் காய் வெடிப்பது போல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறாய்

"பிரியமாட்டேன்"
என்று என் தலைவியிடம் சூள் உரைத்தாயே
இந்தச் சூளுரை நன்றாக(?) இருக்கிறது

தோழி தலைவன் நடத்தையை ஏளனம் செய்கிறாள் குறுந்தொகை 383 Kurunthogai 383

"இன்று மட்டும் செல்லலாம்" என்று நீ ஒப்புக்கொண்டத்தால்
குன்ற நாடனிடம் உன்னைக் கொண்டுவந்தேன்

தீயின் அனல் தாக்கும் தளிர் போல
நீ உன் கையும் காலும் தளர்ந்து நின்றால்
நான் என்ன செய்ய முடியும்

தோழி தலைவியிடம் சொல்கிறாள் குறுந்தொகை 382 Kurunthogai 382

முல்லையும் தளவமும் கார்கால மழைத்துளி என்று ஏமாந்து மணக்கும்படி வம்புக்கு வரும் பருவமல்லா மழை இப்போது பொழிகிறது.

இதைக் கார்காலம் என்று எண்ணாதே
கார்காலம் ஆயின் அவர் வந்திருப்பார் அன்றோ

தோழி தலைவியைத் தேற்றல் குறுந்தொகை 381 Kurunthogai 381

தலைவி தன்னைத் தானே பழித்துக்கொள்கிறாள் 

அந்தக் கானல் நிலத்தில் வெள்ளை நிறக் குருகுப் பறவை நரலும்
பூத்திருக்கும் மலர்களை நீரலை அணைத்து மயக்கும்

அந்தத் துறையில் என் பல்லைக் காட்டி அவனிடம் சிரித்துவிட்டேன்
அதன் பயன் இதுதான்

என் பண்டைய அழகு தொலைந்துவிட்டது
தோள் நலமிழந்து வாடுகிறது
நெஞ்சம் துன்புறுகிறது
கண் உறங்கவில்லை
உடலில் பசலை பாய்ந்து செத்துக்கொண்டிருக்கிறேன்Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி