Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

Tuesday, 3 April 2018

குறுந்தொகை 389 Kurunthogai 389நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி அத்தை
பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலும் என்றுரைத் தோனே. 5

திணை - குறிஞ்சி
தோழி கூற்று
வேட்டகண்ணனார் பாடல் 

தலைவன் பெருங்கல் நாடன்.
இவன் தன் தோழனிடம் "திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்" என்றான்.
தோழன் "நன்றோ" என்று  வினவினான்.
"நன்றுதான் என எண்ணுகிறேன்" என்றானாம் பெருங்கல் நாடன்.
தோழன் வந்து என்னிடம் சொன்னான்.
அவனுக்கு விருந்து தரவேண்டும்.
குறும்பூழ் என்னும் காடைக் கறியை நெய் கனியக் கனிய ஊற்றி வறுத்துத் தரவேண்டும்.

இருவரும் இவ்வாறு செய்ய முடிவெடுக்கின்றனர்.

In English

Monday, 13 November 2017

குறுந்தொகை 50 Kurunthogai 50

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.
குன்றியனார் பாடல்
மருதம்
தோழி தன் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவை தாய்க்கு வெளிப்படுத்துகிறாள். 
தலைவி தோழயிடம் கூறுவது போலவும் அமைந்துள்ளது. 

கொட்டிக் கிடக்கும் மருதம் பூக்களின் மேல் வெண்சிறு கடுகு போன்ற ஞாழல் பூக்கள் தாவி விழுந்து அழகு செய்யும் ஆற்றுத்துறை கொண்டது அவன் ஊர்.  
இவள் தோள் அவனை நினைத்துப்) புலம்பும் அழகினைக் கொண்டிருக்கிறது.
தோள் முகட்டிலிருந்து வளையல் நெகிழ்ந்து (கழன்று) விழுவது இவள் தோள் பெற்றிருப்பது புலம்பும் அழகு.

She, the heroine laments these words to her lover’s friends.

The flowers of NJALAL will be as white mustard.
They were mingled with fallen flowers of MARUTHM trees.
His village bears such a beautiful flower-bank of a river-pond.
Alas! My shoulders, which hugged him, becomes lean that the bangles could not be stand on them.
A poem by KUNTRIYANAR


ஞாழல் மலர்

குறுந்தொகை 49 Kurunthogai 49

அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
அம்மூவனார் பாட்டு
நெய்தல்
அவன் முண்டக மலர் கொட்டிக்கிடக்கும் நெய்தல்நிலத் தலைவன்
முண்டக மலர் அணில் பல் போல் இருக்கும்
தலைவி தலைவனுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

சேர்ப்ப!
முண்டகப் பூவின் மணிநிறம் போன்று தோன்றும் கருநிறக் கடல் சார்ந்த சேர்ப்புநிலத் தலைவனே!
முண்டகப் பூ – அணில் பல் போன்ற தாது மொட்டுகள் கொண்டது.  முண்டகப் பூ பூத்திருக்கும் சேர்ப்ப!

இப்பிறப்பில் மட்டுமல்லாமல் மறுபிறப்பிலும் நீயே எனக்குக் கணவனாக அமையவேண்டும். 
நானே உன் நெஞ்சுக்கு விருந்தளிப்பவளாக அமையவேண்டும்.
தமிழ்ப்பெண் நெஞ்சத்தின் தகைமை மாட்சி


He returns after enjoying with a concubine.
His wife says these words in her bed with him. 

You are a man of literal tract with flowers of MUNDAGAM that seems like red peal resembling squirrel’s teeth.  
You only are my husband and I only shall be your hearty wife not only in this life but also in my next life what it may your intimate behavior is at present.
A poem by AMMUVANAR


அவள் அவனிடம் சொல்கிறாள்

குறுந்தொகை 48 Kurunthogai 48

''தாதின் செய்த தண் பனிப் பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு'' என,
ஓரை ஆயம் கூறக் கேட்டும்,
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க, அன்ன
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?
பூங்கணுத்திரையார் பாடல்
பாலை
  • பூந்தாது சேர்த்து ஒரு பொம்மை செய்து ‘பாவை’ என வைத்திக்கொண்டு ‘ஓரை’ விளையாடுவது விளையாட்டுத் தோழிமார் வழக்கம்
  • இன்ன பண்பு – இனிக்கும் மகிழ்ச்சிப் பண்பு
  • இனை - அழுகை
  • பாடல் கூறுவது பூந்தாது கொண்டு செய்து விளையாடும் பாவை

விளையாட்டுத் தோழிமார் தலைவிக்கு ஆறுதல் கூறல்

தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து காலை நேரத்தில் ‘ஓரை’ விளையாடுகையில் பூந்தாதுகளால் பாவை செய்து விளையாடுவர். அவர்களோடு சேர்ந்து விளையாடிய தலைவி அழுதுகொண்டிருந்தாள். 
“நீ அழுதால் பாவை வருந்தும், ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். அதனைக் கேட்ட பின்னரும் தலைவி அழுதுகொண்டே இருந்தாள்.
இப்படி அழும் தலைவியின் நெற்றியில் பசப்புநோய். 
(பசப்புநோய் என்பது உடலில் ஊரும் பசபசப்பு. காம உணர்வு ஊர்ந்துகொண்டே இருத்தல்). 
இது நசையாகு பண்பு. 
இந்தப் பசப்பு நீங்க அவளுக்கு ஒரு தேவை ஒரு சொல். 
அந்தச் சொல் அவளது காதலனின் சொல். 
காதலர்களுக்கு இந்தச் சொல் இசையாது கொல்லோ? (கிடைக்காதோ?)

Her friend-maid says these words.
Her lady enjoys delight for a short time. But she cries for a long time while he (her lover) was away from her.
They said these words to her lady’s lover being present to meet her.

PAVAI is a doll.
It was made of fallen flowers with clay.
OORAI is a game.
Girls with their play-mates play this game early in the morning in snow drops.
Once they are playing, the play-mates asked their Lady not to cry.
If she cries her PAVAI doll will spoil.
But the lady didn’t care their words.
(He is with her in the evening. But in the morning who will console her?)
(They inform him to be always with her.)

A poem by POONGKANUTHIRAIYAR
This poets name would have been derived from his usage in one of his poemபூவால் செய்த பாவை

குறுந்தொகை 47 Kurunthogai 47

கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே!
நெடுவெண் நிலவினார் பாடல்
பாடலில் உள்ள "நெடுவெண் நிலவு" என்னும் தொடரால் இவரது பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. 
குறிஞ்சி
தலைவி பெரிதாகத் தோன்றி வெளிச்சம் தரும் நிலாவைப் பழிக்கிறாள்.
கருமையான அடிமரம் கொண்ட வேங்கை மரப் பூக்கள் உதிர்ந்து மூடிக் கிடக்கும் பாறாங்கல் புலிக்குட்டி போல் தோற்றமளிக்கும்படி வெளிச்சம் தரும் முழு வெள்ளை நிலாவே! இரவில் என்னை நாடி வருபவருக்கு நீ நல்லை அல்லை (நன்மை பயக்கவில்லை).

Her friend-maid says these words.
She blames the supper moon light.
Why?

Tree VENGAI has its trunk black in color. It shed its flower down on a rock standing alone. This seems to be a young tiger in the moon light. (It may shake him to be afraid of). Hence the moon-light is not good to him coming to get her lady of clandestine love.
A poem by NEDUVEN NILAVINAR
The name was derived from the phrase noted in the poem


Supper moon
நெடுவெண் நிலவு

குறுந்தொகை 46 Kurunthogai 46

ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே?
மாமிலாடன் பாட்டு
மருதம்
தலைவன் பிரிவால் ஏங்கும் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

இது மாலை நேரம்.
வீட்டுக் கூரையில் வாழும் குருவி, சிறகை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கும்போது சாம்பல் நிறத்துடன் ஆம்பல் பூ போலத் தோன்றும். இப்படித் தோற்றம் தரும் குருவி, வீட்டு முற்றத்தில் காயும் உணவுப் பண்டங்களை மேய்ந்துவிட்டுப் பறந்து சென்று ஊர் மன்றத்து மரத்தடியில் கிடக்கும் பூக்களைக் குடைந்து விளையாடி, அந்தப் பூக்களைத் தன் குஞ்சுகளுக்காக கௌவிக்கோண்டு மீண்டு வந்து வீட்டுக் கூரையில் தான் கட்டிக்கொண்டுள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு ஊட்டிவிட்டு அதனோடு சேர்ந்து தங்கியிருக்கும் மாலை நேரம்.
பார்வை வெளிச்சம் மங்கும் மாலை நேரம்.
தோழி!

இப்படிப்பட்ட மாலை நேரமும், அதன் நிகழ்வுகளும் அவர் சென்ற நாட்டில் இல்லை போலும்.
(நிகழ்வுகளைப் பார்த்திருந்தால் நம் நினைவு வந்து திரும்பியிருப்பார் அன்றோ?)

He is away on earning. She bears his separation saying these words.

Flower AMBAL is in ash color. House-sparrow resembles the AMBAL flower in size and color. (Field sparrow is also in same size and color as the house-sparrow). House sparrow will pray grains in the house yard in sun and play in fallen flowers under the shadow of trees. After that it will perk in rest in its nest made in the hays of residing hut with its baby-sparrow in the evening. Such kind of sparrows will live on his ways passing by. When he happened to see them he will return home as early as possible. There is no need to be worried. 
A poem by MAMILADAN

மனை உறை குரீஇ (குருவி)

குறுந்தொகை 45 Kurunthogai 45

காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி,
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன், ''எல்லினன் பெரிது'' என,
மறுவரும் சிறுவன் தாயே;
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே.
ஆலங்குடி வங்கனார் பாடல்
மருதம்
பரத்தையிடமிருந்து திரும்பிய கணவனை ஏற்றுக்கொள்ளும் தலைவி கூறும் சொற்கள் இவை.
காலையில் எழுந்ததும் தேரில் சென்றான். அவன் விரும்பும் பெண்களைத் தழுவுவதற்காகச் சென்றான். அவன் செல்வ வளம் மிக்க ‘ஊரன்’. திரும்பி இல்லம் மீண்ட அவன் ‘பெரிதும் களைப்பாக இருக்கிறான்’ என்று அவனது மகனின் தாய் வருந்துகிறாள்.
இப்படிப்பட்ட பெண்திணையில் பிறத்தல் (பெண்பாலாகப் பிறத்தல்) எறிச்சலுக்கு உரியதே.

எல்லினன் = ஏமாந்திருக்கிறான்
மறுவரும் – மறுவா – (குழந்தை தயை) மறுவுதல், தழுவுதல்
தெறுவது – கொடியது, கொடுமைப்படுத்துவது

திணை – திணை என்னும் சொல் பாலைக் குறிக்கும் ஆகுபெயர். பெண்பாலைப் பெண்டிணை(பெண்திணை) என இப்பாடல் குறிப்பிடுகிறது

He returns from concubine’s house. She (his wife) accepts him without sulking, saying these words

He got up early morning, rode in chariot and hugged in lust with ladies decorated with jewelry. He is a man of bravery in physic and wealth. He is puzzled. I am hugging my child. How shall I hug him? So, female life is always burning fuel.
A poem by VANGANAR of Alangudi villageமறுவரும் சிறுவனின் தாய்
குழந்தையைத் தழுவும் தாய்

குறுந்தொகை 44 Kurunthogai 44

காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
வெள்ளிவீதியார்
பாலை
பிரிந்து சென்ற தலைவன் வரவை எதிர்நோக்கித் தலைவி புலம்புகிறாள்.
அவர் வருவதைப் பார்க்க வீட்டுக்கும் வாயிலுக்கும் நடந்து நடந்து என் கால்கள் நடக்கும் வலிமை இழந்து தள்ளாடுகின்றன. கண்கள் அவர் வரவை எதிர்நோக்கிப் பார்த்துப் பார்த்து பார்க்கும் வலிமை இழந்து பூத்துப்போய்விட்டன. இல்லம் நோக்கி வருபவர்கள் வானத்து விண்மீன்களை விட அதிகமாக இந்த உலகத்தில் இருக்கின்றனர். (என்னவர் மட்டும் இன்னும் திரும்பவில்லையே!) 

காதலனுடன் சென்ற தன் மகளைத் தேடிக்கொண்டு செவிலி செல்கிறாள். காண முடியாமல் கூறும் சொற்களாகவும் இப்பகுதியைக் காணலாம். 

Searching her eloped daughter on her way arid says these words.

My legs walked and walked. Further they could not move in step.
My eyes searched and searched. Further they could not see because of their sight became dimmed.
I see many people like stars in the sky except my daughter.
A poem by VELLI VITHIYARஅவர் வருவார் என்று
அவள் எதிர் நோக்கல்

குறுந்தொகை 43 Kurunthogai 43

''செல்வார் அல்லர்'' என்று யான் இகழ்ந்தனனே;
''ஒல்வாள் அல்லள்'' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
ஒளவையார் பாடல்
பாலை
தலைவி தனக்கு நேர்ந்த பிரிவு பற்றித் தோழியிடம் கூறுகிறாள்.
‘அவர் பிரிந்து செல்லமாட்டார்’ என்று நான் பொருட்படுத்தாமல் பெரும்படியாக இருந்துவிட்டேன். 
அவரும் ‘வருந்தமாட்டாள்’ என்று என்னை நினைத்துவிட்டார். 
இப்படி இருவர் மாட்டும் இருந்த ஆளுமை நம்பிக்கை இப்போது பூசலாக மாறி என் நெஞ்சைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. 
அவர் பிரிந்து போய்விட்டார். 
நச்சுப்பாம்பு கடித்தது போல என் நெஞ்சு குமுறுகிறது.

She points her partition.

I thought he will never let me alone.
He thoughts she will tolerate his leaving.
These are the bravery in our part.
But he left me alone by departing to earn.
So my heart is pinning me with the feeling snake-bite.
A poem by AUVAIYARநல் அரா \ நல்ல பாம்பு

குறுந்தொகை 42 Kurunthogai 42

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!  எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
கபிலர் பாடல்
குறிஞ்சி
மழையால் இடையீடு பட்டு வந்த தலைவனிடம் தலைவி கூறுகிறாள்.

நள்ளிரவில் கருக்கொண்டு பெருமழை பெய்தது. 
அதனால் மலைப்பிளவில் அருவி கொட்டும் நீரின் ஒலிமுழக்கம் கேட்கிறது. 
மழையால் உறவு இடையீடு பட்டது. அதனால் நமக்கிடையே உள்ள காதல்-நட்பு தேய்ந்துவிடுமா என்ன? 

(அருவி கொட்டுவது போல உன் உறவும் முழங்கிப் பெருகும் என்பது உள்ளுறைப் பொருள்)

She has no material relation with him for a time before. He approaches her. With these words she accepts his union.

There is no sexual union between us for a time.
You know, in your hill, the falls flow water by heavy rain by night.
My relation never decreases with you. 
A poem by KAPILAR


காமம்
material relation
union

குறுந்தொகை 41 Kurunthogai 41

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.
அணிலாடு முன்றிலார்
பாலை
தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
காதலர் பக்கத்தில் இருக்கும்போது, விழாக் காலத்தில் ஊர் மகிழ்வது போலப் பெரிதும் மகிழ்ந்து திளைக்கிறேன். அவர் பிரிந்துவிட்டால், விழாக் கொண்டாடிய அந்த ஊருக்கு வந்தவர்கள் திரும்பிப் போனபின் விழாக் கொண்டாடிய இடங்களில் அணில் விளையாடி ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பது போல அற்பமாகப் ‘புல்’ என்று கிடக்கிறேன். 

He shares her feeling to her friend-maid about his relation with her.

While her lover is along with her she feels happy as the people enjoys in their festival.
While he is away she feels in loneliness as the court-yard of a residence without residence where the squirrel plays after the festival. 

A poem by ANILADU MUNTRILAR
The name of the poet is not known.
A phrase occurs in the poem is made as the poet’s name.


அணில்

குறுந்தொகை 40 Kurunthogai 40

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
செம்புலப்பெயனீரார் பாடல்
குறிஞ்சி
தலைவியைப் புணர்ந்தபின் நீங்கும் தலைவன் தலைவியைத் தேற்றுகிறாள்.

என் தாயும் உன் தாயும் யார் யாரோ? 
என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? 
நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். 
அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. 
செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. 
(இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்)

He says to her after their first conjugal union.

My mother and your mother, who are they?
My father and your father, what kind of relationship have they before?
I and you, on what way we are acquaintance with?
Our thought becomes united as the fertile land and rain water mingled to foster the harvest.

A poem by SEMPULAP-PEYAL-NIRAR.
The name of the poet is not known.
A phrase occurs in the poem is made as the poet’s name.அன்புடை உள்ளம்

குறுந்தொகை 39 Kurunthogai 39

''வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்'' என்ப நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
ஒளவையார் பாடல்
பாலை
தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் வருந்தும் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.

முலை மேல் கிடப்பதை விரும்பாத அவர் மலைவழிச் சுரம் வழியாகச் செல்கிறார் என்றும், அந்த வழியில் உதிர்ந்து கிடக்கும் உழிஞ்சில் பூப் பொங்கருக்குள் நுழைந்து பேய்க்காற்று அதனை அள்ளிச் செல்கிறது என்று அக் காற்று மோதிய உழிஞ்சில் மரத்து வெள்ளை நிற நெற்றுகள் ஒலிக்கும் என்று சொல்கிறார்கள். – தோழி கூற்று.

பெருங்காற்றால் உதிர்ந்து கிடக்கும் பூ காற்றில் பறப்பதும், உலர்ந்த நெற்றுகள் ஒலிப்பதும் இயல்பு. இதனை, “பூவை அள்ளிற்று என்று நெற்றுகள் அலரின” என்று கூறும் நயப்பாட்டைத் தற்குறிப்பேற்ற அணி என்று கூறுவர்.

பூவுக்காக நெற்று அலறுவது கண்டு தலைவன் தலைவிக்காக வருந்தி மீள்வான் எனக் கொள்வது உள்ளுறை.

She says to her friend-maid that she is unable to tolerate his separation from him.

He seems to hate hugging my breast.
So he parts me.
Somebody says there are some indications on the way where he passes by.
The dry fruits on VAHAI tree will arouse on seeing the dropped flowers on the floor are taken by the wind in the arid land of hill.
(By a hinting simile she realizes her as dropped flowers from the tree).
A poem by AUVAIYAR

உழிஞ்சில் (உசிலை) பூ

உழிஞ்சில் \ உசிலை

குறுந்தொகை 38 Kurunthogai 38

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி! உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
கபிலர் பாடல்
குறிஞ்சி
அழும் கண்களைப் பார்த்து ஆறுதல் கூறும் தோழிக்குத் தலைவி கூறுகிறாள்.
காட்டு மயில் பாறைமேல் இட்ட முட்டையை எடுத்து, முசுக் குரங்கின் குட்டி வெயிலில் வைத்து உருட்டி விளையாடும் குன்ற நாட்டின் தலைவன் அவன். அவனோடு உள்ள நட்புறவு மிகவும் என்றென்றும் நன்று.
யாருக்கு? எப்போது?
கண்ணில் நீர் மல்க அவன் பிரிந்திருப்பதைத் தாங்கிக்கொள்ள வல்லவர்களுக்குத்தான்.
என்னால்தான் தாங்கிக்கொள்ள முடியாதே!

He is away.
She conveys to her friend-maid about her feelings.
His friendship is good to those who is capable of bearing his stand apart.
Even my eyes decorated with eye-cream are useless without seeing him. 
He is a Man of hill country.
There the baby gorilla (MUSU) will play with the eggs of peacock.
A poem by KAPILAR
முசுவும் அதன் குருளையும்

குறுந்தொகை 37 Kurunthogai 37


பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி! அவர் சென்ற ஆறே.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
பாலை
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
அவர் பெரிதும் இளகிய அன்பு கொண்டவர். தன்னை நமக்கு வழங்கும் கொடை உள்ளம் கொண்டவர்.
ஆண்யானை பெண்யானையின் பசியைப் போக்கத் தனது நீண்ட கையால் யாஅம் மரத்துக் கிளைகளை உரித்துத் தரும் வழியில் அவர் சென்றுள்ளார். அதனைப் பார்த்ததும் நம் நினைவு வந்து விரைவில் திரும்பிவிடுவார்.

He is away earning wealth.
She conveys to her friend-maid about her hope of confidence on him.

His love is great. He will bestow it in person. On his way he will see the male elephant breaks YAM leaves to remove the hunger of its female elephant.  (He will read this infer)

A poem by PERUNKADUNKO, who sung poems on PALAI

யாஅம் மரம் \ கூந்தல் பனை மரம்

Sunday, 12 November 2017

குறுந்தொகை 36 Kurunthogai 36

துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, ''நீயலென் யான்'' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
பரணர் பாடல்
குறிஞ்சி
தலைவி தன் தோழியிடம் தலைவன் வஞ்சினம் கூறிய (சத்தியம் செய்த) சொல்லைப் பற்றிக் கூறுகிறாள்.

பெரிய குண்டாம்பாறை.
அதன் மேல் மாணைக்கொடி படர்ந்திருந்தது.
அந்தப் பாறையின் பக்கத்தில் யானை படுத்து உறங்கியது.
அந்தக் கொடி யானை மேலும் ஏறிப் படர்ந்தது. 

இப்படிப்பட்ட குன்ற நாட்டின் தலைவன் அவன்.
அவனை நெஞ்சிலே வைத்துக்கொண்டு நான் துன்பத்தில் நீந்தவில்லை.
பின் என்ன வருத்தம் என்கிறாயா?
அந்தக் கல்லுக்குப் பக்கத்தில் என்னை அணைத்து அவன் என்னோடு உறவு கொண்டான்.

அப்போது அவன் வஞ்சினம் கூறினான்.
உன்னைப் பிரிய மாட்டேன் என்றான்.
இப்போது பிரிந்திருக்கிறான்.

அவன் வஞ்சினம் (சத்தியம்) பொய்யாகிவிடக் கூடாதே என்றுதான் வருந்திக்கொண்டிருக்கிறேன்.

He is about to spare her away for a short time before marriage. He assured her that he will not spare her any time when he tasted her for the first time. But his deed is contrary. Her friend-maid worries. But her lady consoles her. 

A vine MANAI climbing on a rock also climbs on the elephant that sleeps near the rock. He is a man of these kinds of country side.
I am not in a position that his thought swims in my mind.
When his maiden hug his assurance is flowing in your mind that makes you worry. Don’t be worry.

A poem by PARANARமாணைக் கொடி

குறுந்தொகை 35 Kurunthogai 35

நாண் இல மன்ற என் கண்ணே, நாள் சேர்பு
சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇ
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே.
கழார்க் கீரன் எயிற்றியார் பாடல்
மருதம்
தலைவி தன் கண்ணின் செயலைத் தானே நொந்துகொள்கிறாள்.
இந்தக் கண்ணுக்குக் கொஞ்சம்கூட வெட்கமே இல்லை. 
வாடைக் காலத்திலும் வராமல் பிரிந்து இருப்பவரை நினைத்து அழுகிறது.

  • வாடைக் காற்று – சினைப் பட்டிருக்கும் (கருவுற்றிருக்கும்) பச்சைப் பாம்பு  போல் கரும்புப்பூ விரியும் காலம்.  அழிதுளிச் சாரல் மழை குளிருடன் பொழியும் காலம்.

He is away from her. She, the heroine, says to her friend-maid.

Shameless, my eyes are.
They are crying for his return home to be with me.
Even in winter, when we are suffering from dashing savior cold that dew by the north wind he is away.
The snow-drops blowing by the north wind open the bud of sugar cane flower
The sugar cane flower seems to be as green snake that swallowed it’s pray or pregnant.

A poem by KAZAR-KIRAN-EIYITRIYARSகரும்பில் பூ மலரும் பொதி

குறுந்தொகை 34 Kurunthogai 34

ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவை இன்றாய்,
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே.
கொல்லிக் கண்ணன் பாடல்
மருதம்
தலைவி தன் தலைவனைப் பற்றித் தோழியிடம் கூறும் பாடல் இது.

என் கிழவன் அவனே. 
நான் தண்டித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப என்னிடம் வருகிறான். 
நான் அவனை ஏற்றுக்கொள்ள  மறுத்தாலும் அதனைப் புரிந்துகொள்ளவில்லை. 
அப்படிப்பட்டவனைப் பற்றி இந்த ஊர் பேசவில்லை. 
என்னைப் பற்றி ஊர் பழி தூற்றுகிறது.  
என்னைப் பற்றிப் ஊர் பேசும் கௌவையைக் கேட்டு அவன் இன்புறுகிறான். அவன் இன்பத்தை எண்ணி ஊரும் இன்பம் கொள்கிறது.
குட்டுவன் மரந்தை நகர் போன்ற பொலிவினையும், காதிலாடும் குழையினையும் கொண்ட என் நெற்றிமுகத்துக்கு உரியவன் அவனே.

  • மரந்தை நகர் – குருகினத்தில் பெரியதாகிய யானையங்குருகின் இனம் வயலில் மேய்வதை ஓட்ட மள்ளர்(உழவர்) ஒலி எழுப்புவர். அந்த ஒலி கேட்டு யானையங்குருகினம் அஞ்சி ஓடும் நகரம் மரந்தை.


She commends his pinprick to her friend-maid.

If we punish him, he does not care.
If we refuse him he does not mind.
He would not let us without murmuring .
Let the village be happy murmuring about his relation with me.
Let them say he is her pet.

Her fore-head’s beauty is like ‘Maranthai’ harbor.
MARANTHAI is the harbor of king KUTTUVAN. There, in the lagoons the array of large size of crane-birds fear hearing the beating sound of MALLAR (farmer).

A poem by KOLLIK-KANNAN.தலைவியும்
தோழியும்
பேசிக்கொள்கின்றனர்

குறுந்தொகை 33 Kurunthogai 33

அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.
படுமரத்து மோசிகீரன் பாடல்
மருதம்
பரத்தையிடம் இன்பம் துய்த்த கணவன் இல்லம் திரும்பும்போது பாணன் ஒருவனை விருந்தாளியாக அழைத்துக்கொண்டு வருகிறான். மனைவி வேறு வழி இல்லாமல் கணவனை ஏற்றுக்கொள்வதைத் தன் தோழியிடம் கூறுகிறாள். 

தாய் போன்ற தோழியே! இவனைப் பார். இவன் ஓர் இளமாணாக்கன் (பிரமச்சாரி) போல் காணப்படுகிறான். இரந்து உண்டு வாழும் இவன் வயிறு நிரம்பாத நிலையை உணர்த்தும் மேனியோடு காணப்படுகிறான். இப்படிப்பட்ட விருந்தாளியையும் அழைத்துக்கொண்டு தலைநிமிர்ந்த செம்மாப்புடன் வந்துள்ளான். இங்கே இவ்வாறு நடந்துகொள்ளும் இவன் அவனது ஊரில் (பரத்தை வாழும் ஊரில்) உள்ள மன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்வானோ தெரியவில்லை.

He tastes a new woman.
He intends to return home.
He sends PANAN (singer along with musical instruments) as mediator.
She (his wife) speaks these words in a mood of accepting his return home.

You, friend-maid! See him. He is like a sage in young [brahmachary]. He used to feed by alms. He seems hungry having not received enough alms in his village. He expects a honor of festive party from us. He, my husband comes along with him. How can I refuse them? He pretends like this. How would have he behaved in his village, we do not know.

A poem by MOSI-KIRANAR of Padmaram villageஇள மாணாக்கன்

குறுந்தொகை 32 Kurunthogai 32

காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே.
அள்ளூர் நன்முல்லையார் பாடல்
குறிஞ்சி
காதலியை பெற முடியாத காதலன் கவலையோடு கூறும் சொற்கள் இவை.

காமம் என்பது என்னைப் பொறத்தவரையில் பொய். 
காலை, நண்பகல், எப்போதும் காதலால் ஏங்கும் மாலை, ஊரார் தூங்கும் யாமம், விடியல் என்று எந்த நேரத்திலும் அது எனக்குத் துய்க்கக் கிடைக்கவில்லை. 
காமம் துய்க்க ஒரே வழி மடலேறுதல்தான். 
எனினும் திடீரெனத் தெருவில் மடலேறித் தோன்றுதலும் பழியாகும். 
பிரியும் நிலை வந்து காமம் துய்க்காமல் வாழ்தலும் பழியாகும். 
என்ன செய்யலாம்? – தோழியிடம் இவ்வாறு சொல்லி உதவுமாறு வேண்டுகிறான்.

She refuses his approach.
He says these words in his misery.

Morning, noon, evening, mid-night and fore-dawn, say all these times, the passion of lust is never success in my part. To my credit it is blamable to ride a Palmyra horse (to marry her through others.)
Without marrying her, survival also is blamable to me. 

A poem by NANMULLAIYAR of Allur village, a female poet.மடல் ஏறுதல்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி